Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, April 12, 2012

Caricature Artist in Vikatan



Me, Caricaturist Sugumarje at En Vikatan, Supplimentary of Ananda Vikatan Dated on 04-04-2012
It Says...

கேளிக்கைச் சித்திரங்கள்!


Click to Enlarge View!

''இயந்திர வாழ்க்கையின் பாதிப்புல மனுஷ மனசும் இயந்திரமாப் போயிடுச்சு. மனசு மலரச் சிரிக்கிறது... அட்லீஸ்ட் புன்னகைக்கிறது எப்படிங்கிறதுகூட மறந்துவிட்ட செயற்கை உலகத்துல வாழ்றோம். தொலைஞ்சு போன அந்தப் புன்னகையை என்னோடப் படங்கள் உங்களுக்குத் தந்துச்சுனா அதுதான் என் வாழ்க்கைக்குக் கிடைச்ச அங்கீகாரமா உணர்வேன்' - கைகள் காகிதத்துக்கு உயிர் கொடுத்துக்கொண்டு இருக்க... மென்மையாகப் பேசுகிறார் சுகுமார்!

திருச்சியில் தன் வீட்டின் அருகில் வசிப்பவருக்குக்கூட அதிகம் தெரிந்திராத சுகுமார், இணையத்தில் மிகப்பிரபலம். ஃப்ளிக்கர், பிளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் என, சமூக வலைதளங்களின் அத்தனை பரிணாமத்திலும் சுகுமாரின் படைப்புகளை ரசிக்கப் பெரும் ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.

அடிப்படையில் கிராஃபிக் டிசைனரான சுகுமார், தன்னுடையத் தொழிலாகத் தேர்வுசெய்து இருப்பது 'கேரிகேச்சர்’ எனப்படும் கேலியும் அங்கதமும் இழையும் படங்களை வரைந்து தருவது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படங்களை மெயில் செய்தால் போதும்... தன்னுடைய கற்பனையைக் கலந்துகட்டி ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்து, பதில் மெயிலில் அனுப்பிவிடுவார். இதன் மூலம் டாலர்களில் வருமானம் கொட்டுகிறது சுகுமாருக்கு.

ஒவியத்திற்கு நான் படிச்ச கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படிப்புக் கை கொடுத்தது. பொழுது போகாம நான் வரைஞ்சுவெச்சிருந்த கேலிச்சித்திரங்களை மேலை நாட்டு மக்கள் ரசிக்குறாங்கங்கிறதை நண்பர் மூலமா தெரிஞ்சுக்கிட்டு, இந்தத் தொழில் ஆரம்பிச்சேன். இன்னிக்கு வரைக்கும் நல்லபடியா வருமானம் தருது. அதோட, உலகம் எங்கும் எக்கச்சக்கமான நண்பர்களையும் தந்திருக்கு. உண்மையில் எனக்குக் கிடைக்கும் டாலர்களைவிட மதிப்பானது அதுதானே' சிலாகித்துச் சொல்லும் சுகுமார், லைவ்வாக விநாடிகளில் ஒருவரைப் படம் வரைவதில் வித்தகர்.

'ஓவியம் வரைவதில் எத்தனையோ கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் வந்திருக்கு. ஆனாலும், மனசுக்குள்ள இருந்து ஒரு லைன் வந்து விழுந்தாத்தான் மக்களோட அங்கீகாரம் கிடைக்கும்'' அனுபவ முத்து உதிர்க்கிறார் சுகுமார்.

பேஸ்புக்கில் தீவிரமாக இயங்கும் சுகுமார், தன்னுடைய பேஸ்புக் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பிறந்தநாள் பார்ட்டியின் முகத்தை கேலிச்சித்திரமாக வரைந்து தருவதுதான் பரிசு. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உங்களுடைய படத்தை சுகுமார் கைவண்ணத்தில் ரசிக்க... பேஸ்புக்கில் இவருடைய நண்பரானால் போதும்

- எஸ்.சுமன்

Post Comment

No comments: