இப்படியான திரையில் அதன் மென்பொருள் குழு பொறியாளர்களின் பெயர்களை காணலாம்...
அதில் இரண்டாவதாக ஒரு பெயர்... சீத்தாராமன் நாராயணன்... ஆம்... தமிழர்... அடோபி நிலை தலைமை பொறியாளர்களின் வரிசையில் 3ம் வரிசைக்குரியவர்...முதலாமவர் இல்லை... இரட்டையாளர்கள் தாமஸ் நால் மற்றும் மார்க் ஹம்பர்க்...
உலகின் முதன்மையான Digital Imaging Software Core Engineering Team ல் தமிழர் இடம்பெற்றிருக்கிறார்...
அவரின் நிழற்படம் இங்கே...
எப்படி அடோபியில்...?
' நான் திருச்சிராப்பள்ளி பிராந்திய எந்திரவியல் கல்லூரியில், நுட்ப எந்திரவியலில் (B.E., Mechanical Engg.) இளங்கலை பட்டம் பெற்றேன். பிறகு மேற்படிப்புக்காக அமெரிக்கா, கார்போன்டலில் உள்ள தெற்கு இலினாஸ் பல்கலையில் (Master Degree) முதுகலை பட்டம். மீண்டும் அங்கேயே கணிணி (Master in Computer Science) அறிவியல் பட்டம். அதன்பிறகு கிரிஸ்டல்கிராபிக்ஸ் நிறுவனத்தில், கிரிஸ்டல்டோப்ஸ் மென்பொருளுக்கான பொறியாளராக வேலை. சில ஆண்டுகளுக்குப்பின் கிரிஸ்டல்... பிறகு அடோபியில்...
தனது பெயர் புகழ் பற்றி...
அடோபி பொறுத்தவரை தொழில் நுட்பத்தில் என்னைப்போலவே, நிறுவனத்திலிருந்த பலருக்கும் பங்குண்டு. ஆனால் சிறப்பை நான், என் மிக நீளமான பெயரினால் பெற்றதாக நினைக்கிறேன். அடோபி போட்டோஷாப் மட்டுமில்லாது ஏனைய மென்பொருளிலும் (உ.ம். அடோபி லைட்ரூம்) என் பணி தொடர்கிறது.
அடோபி வளாகத்தில் இவரின் பெயர் 'சீத்தா'...
அடோபி வளாகம் காண்க....
அடோபி புதிய மென்பொருள் வெளியீடுகள் குறித்து அறிய http://cs5.org/
_ -_-_-_-_-_-_-_-_-_
என் வேண்டுதல் ஒன்று நிராகரிக்க பட்டதாக கருதினேன்... ஆனால் ஒரே ஒரு ஓட்டு இட்டு என் நிறுவன சின்னத்தை உயிர்பிக்க செய்த புண்ணியர் யாரென்று அறியேன்... ஆனால் என்மனம் மகிழ்வில் திளைக்கிறது... ஆங்கிலம் தீண்டா வலைப்பூ குழுமம்... வாழ்க வளமுடன்...
அந்த உயிர்பிழைத்த சின்னம் இதுதான்...
அடுத்து ஒரு செய்தித்தாள் விளம்பரம்...
வணக்கத்துடன்...
.
4 comments:
பெயரை வைத்து தமிழர் என்பதை அறிவேன். புகைப்படம் இப்போதுதான் காணக்கிடைத்தது.நல்ல பகிர்வு, நன்றிகள்.
thanks for this post
நான் இவரின் பெயரை பார்த்துவிட்டு "ஒரு வேலை ஆந்திரா காராக இருக்கலாம் 'என்றல்லவா எண்ணியிருந்தேன்.
தமிழர் என்றதும் பெருமையும் மகிழ்ச்சியும் கூட.
இன்னும் கூட சில இந்திய பெயர்களை காணலாம் அதில். இல்லை??
hmmm
Post a Comment