Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Monday, July 12, 2010

போட்டோஷாப் - வாருங்கள் கற்கலாம் - Photoshop Ebook -- Free Link

கடந்த பதிவுக்குப்பின் போட்டோஷாப் அநுபவ அறிவுமிக்கோர், ஆர்வமிக்கோர் பலர் மின்னஞ்சல் வழி என்னை தொடர்புகொண்டு, முழுமையான பதிவாக போட்டோஷாப் மென்பொருள் உபயோக வழிமுறைகளைத்தர வேண்டுகோளிட்டு இருந்தனர்...

சரியாகச்சொன்னால் முப்பத்திரண்டு (32) ஆர்வலர்கள்... இதில் ஆறு நபர்கள் மாணவராக சேரவும் ஆர்வமாயிருக்கின்றனர்... ('எவ்வளவு கட்டணம்னு சொல்லுங்க சார்...') இரண்டு நபர்களுக்கு மேலே கைதூக்கினாலே விசயம் பலமானதாகிவிடும்... ஆக நானும் தயார்தான்...

நிற்க...!?

விரிவுரையாளர் வகுப்பில் நுழைகிறார்... மாணவர் வரிசைக்கு முன்னே நின்று...

'ம்மம்... நேற்று என்ன பார்த்தோம்...?'

மாணவரின் பதிலுக்குப்பின்... 'சரி, அடுத்த பகுதியை பார்க்கலாம்' என்ற ரீதியில் கணிணி மென்பொருள் பாடங்களை தந்தால் கண்டிப்பாக உங்களுக்குப்புரியாது... கொஞ்சம் மெனக்கெடல் (எனக்கு) வேண்டியிருக்கிறது. சரியாகத்தர வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறேன்...

நான் தயாராயிருக்கிறேன்... நீங்கள்...?

ஆனால் இங்கே, மரத்தடி வேலைக்கும்... மாளிகை வேலைக்கும் வித்தியாசம் தெரியாதிருப்பவர்கள் நிறைய நபர்களிருக்கிறார்கள்... பேதம் பார்க்காது தந்தாலும், ஏணியின் வழியேறிவிட்டு எட்டி உதைக்கும் மாற்றுத்திறனாளர்கள் (உடல் ஊனமுற்றோரென சொல்லக்கூடாதே!)... ஏராளம்... ஏராளம்...

இது எனக்குமட்டுமல்ல... வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், இத்தகைய மாற்றுத்திறனாளர்கள் உங்களை தங்கள் காரியத்திற்காக மட்டும் சந்தித்து, உங்களுக்கோர் அநுபவ பாடத்தை தந்திருப்பார்கள்... உண்மைதானே?...

ஆனால் இவர்களிடம் பொதுவான ஒரு அம்சத்தைக்காண இயலும்... அது 'வாயச்சொல்லில் வீர்ரடி' தான்...

என்னைப்பொறுத்தவரை பசியுள்ளவருக்கே விருந்து... புளி ஏப்பக்காரனுக்கல்ல... அதேபோலவே, பக்கத்து இலைக்கு பாயாசம் நான் ஆற்றுகிறேன்... உனக்கு வேண்டுமென்றால் நீயே கேள்... என் பயிற்றுவித்தல் இங்ஙனமே...

நான் என்பாடங்களை வாரம் இரண்டாக தர தயாரக உள்ளேன்... வலைப்பதிவின் வழியாக அல்ல...

உங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட அறிவிப்பு என்னை வந்தடைந்த நிமிடத்தில் உங்களுக்கான பாடம் மின்னஞ்சல் வழியாக கிடைக்கும்.

அந்த வாரத்தில் ஒரு நாளில் அவ்வாரத்திற்கான பாடங்கள் குறித்த கலந்துரையாடல் நடத்தப்படும்... கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களுக்கு, கலந்துரையாடலின் சாரம் மின்னஞ்சலில் தரப்படும்.

அதிகபட்சமாக நூறு (100) பாடங்களும்... குறைந்தபட்சமாக ஐம்பது (50) பாடங்களும்... கிடைக்கும்... ஆர்வலர்களின் வேண்டுகோளின் தேவையான பாடங்களும் வழங்கப்படும்... இதன் மூலமாக மற்றொருவரின் ஆர்வத்தில் நீங்களும் புதிய செய்திகளை அறியலாம்...

கண்டிப்பாக கட்டணம் உண்டு...

இரண்டு பாடங்களுக்கான கட்டணம் (ஒரு வாரத்திற்க்கான பாடம்)... இந்திய ரூபாய்... 100.00 மட்டுமே. (Rs. 100.00 INR)

எத்தனைப்பாடங்கள் வேண்டுமோ... அத்தனை பாடங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தலாம்... முழுமையான பாடங்களுக்கான கட்டணம் செலுத்தவேண்டியதில்லை.
அந்தந்த வாரங்களில் மட்டுமே செலுத்தினால் போதுமானது...
சேர்க்கைக்கான முடிவு உங்களுடையது... கட்டாயப்படுத்துதல் இல்லை.
இடைப்பட்ட காலத்தில் வலைவழி அல்லது நேரிடையான கலந்துரையாடல் வழிவகை செய்யப்படலாம்.
கட்டணம் செலுத்தப்பட்ட காலத்திற்கு மட்டுமே பாடங்கள் கிடைக்கும்.
செலுத்தப்பட்ட கட்டணம் எவ்வகையிலும் திரும்ப பெறத்தக்கதல்ல.

செலுத்தப்பட்ட கட்டணம் வழியே பாடங்கள் தர சுகுமார்ஜியான நான் உறுதியளிக்கிறேன்.

இலவசமாகத்தர எனக்கும் ஆசைதான்... ஆனால் எனக்கு பிழைப்பு இருக்கிறது... உங்களிடமிருந்து மீண்டும் ஓட்டு வாங்கி ஆட்சியிலமர ஆசையில்லை... ஆனால் இந்த நுட்ப அநுபவத்தினாலேதான் என் வயிற்றுப்பாடு நடந்து கொண்டிருக்கிற காரணத்தால் இத்தகைய முழுமையான விசயங்களை முழுமையான பாடங்களை இலவசமாகத்தர இயலாதிருக்கிறேன்...

இப்போதைய பாடத்திற்கான மென்பொருள் - அடோபி போட்டோஷாப் CS4
தலைப்பு - ஒளிப்படவேலைகளும், வடிவமைப்புக்களும்...
பாடங்களின் எண்ணிக்கை - நூறு (100) கூடுதலாக 10 (கட்டமில்லா பாடம், பயிற்சியின் இறுதியில்) இணைக்கப்படலாம்...

ஒரு பாடம், உங்கள் பார்வைக்கு... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்...

இணையவழி இங்கே!... இலவச கோப்பு இறக்கம்... உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்க!

First Choice:
AlongwithSugumarje 

Second Choice:
AlongwithSugumarje


இந்த யுவதிதான் மாதிரி பாடத்திலும் இருக்கிறாள்...


வாருங்கள் இணைந்து கற்றுத்தேர இருகரமேற்றி அழைக்கிறேன்... என்கைகளை பற்றிக்கொள்க...

.

Post Comment

3 comments:

Sugumarje said...

EBOOK லின்க் சரிசெய்யப்பட்டது... தவறுக்கு வருந்துகிறேன்... :-)

imthicaf@mail.com said...

Good Idea ..........
இங்கேயும் Photosohop பற்றிப் பாருங்க.
Tamilfa.blogspot.com

balamurgan said...

super post