கடந்த மூன்றாண்டுகளுக்கான சேவை இந்த மாதத்தில் முடிவுக்கு வந்தது.அமெரிக்கா விண்வெளி கலத்தின் பெயரைக்கொண்ட கணிணி நிறுவனம்... அவர்களிடத்தில் உப்பு தீர்ந்துவிட்டதாக நினைக்கிறேன்...
ஆரம்பம் எல்லாம் ஒகே! பினிஷிங் தான் சரியில்லை என்பதாக பணி இட மாறுதல் என்று சொல்லிவிட்டு, Economical Balance என்பதாக மாற்றத்தை ஏற்க நிர்பந்தித்தனர். இடைப்பட்ட பணிக்காலத்திற்கு கல்தா!?... பேசி பயன்றறு போனது.
சிங்கம் சிங்கமாக வெளியேறி விட்டது...
உலகமே சிக்கித்தவிக்கும் நேரத்தில் இதெல்லாம் தவிர்க்க இயலாதுதான்.ஆனால் முறையான முன்னறிவிப்பு இல்லாதிருந்ததுதான் வேடிக்கை...
'இதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாதுங்க சார்'
என்கவலை என்னவென்றால் எனக்கு பணிமாறுதல் தந்தவருக்கு இதே நிலைமை என்றால் எப்படி சமாளிப்பார் என்பதுதான்.எதிர்பாராததினால்
இந்த மாற்றம் காரணமாக நிறைய தடாலடி மாற்றங்கள் சில நாட்கள் நீடித்தன. ஒரு மூன்று நாட்கள் யோசனைக்குப்பிறகு எல்லாம் சரியானது...
நடந்தவை கடந்தது...
சரி... இப்பொழுது சிங்கம்... அது அது அதோட இடத்தில இருக்கிறது தானே சாலச்சிறந்தது...
தனக்குத்தானே சிங்கம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் பாதையில் செல்ல ஆயத்தம் செய்து கொண்டது.
அடுத்த அடுத்த அலுவலில் மூழ்கியதில் வலை மேய இயலாதாயிற்று.
பதினைந்து நாட்களாக வலைக்குள் விழாமலிருப்பது சுகமாகவே இருந்தது.
மீண்டும்...
சிங்கம் தலையை சிலுப்பிக்கொண்டு வேட்டைக்கு தயாராகிவிட்டது...
பின்குறிப்பு. கல்தா கொடுத்த அதே அ.வி.க.பெ. நிறுவனம், எல்லா செய்தித்தாள்களிலும் அடுத்த கல்தாவுக்கு ஆள் தேடுகிறார்கள்...
.
No comments:
Post a Comment