Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Sunday, May 30, 2010

சிங்கம் - The Lion King

கூண்டுக்குள் இருந்த சிங்கம் சொல்லிக்கொண்டது...

'காட்டுக்குள்ள வந்து கேட்டுப்பாருங்கடா! நான் தான்டா காட்டுல ராஜா...'

சிங்கம் கேனத்தனமாக சொல்லுவதாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களில் பலரும் 'அப்படியா?' என்றனர்

அந்த 'அப்படியா?' வில் இருந்த கிண்டல் அந்த அப்பாவி சிங்கத்திற்கு புரியவில்லை... ஒரு வேளை அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் வரவில்லை போலும்...

ஒருவேளை அது இன்னமும் மனிதனாக மாறாது, மிருகமாகவே இருப்பதுதான் காரணமோ!...

சிலர் நெருங்கி வந்து 'அப்போ ஏன் கூண்டுல இருக்க?' என்று கேட்டனர்.

'உண்மைதான் சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட் ல தான் இங்கே வந்து மாட்டிகிட்டேன்' சிங்கம் பதிலளித்தது.

பரிதாபத்துடன் ஒருவர் கேட்டார்

'உன்னை யாராவது கொடுமை படுத்துறாங்களா?'

சிங்கம் முகம் திருப்பிக்கொண்டது... "கொய்யால... கூண்டுக்குள்ள இருக்கேன்... அதே உனக்கு தெரியலையே... சொன்னா புரியுமா?" கொட்டாவி விட்டபடி சிங்கம் தன் நாவால் மூக்கை ஈரப்படுத்திக்கொண்டது.

கேள்வி கேட்ட நபர் ' இந்த சிங்கத்துக்கு கொழுப்பை பாரேன்...மெனக்கெட்டு கேட்டா மூஞ்ச திருப்பிகிச்சு' என்னவாறே கூண்டை கடந்து சென்றான்.

'ஹாய்!'

குதூகல குரல் கேட்டு சிங்கம் தலைதிருப்பியது.

ஒரு சிறுவன் ஓடிவந்து கைக்கெட்டா தூரத்தில் நின்றவாறு...

'ஹாய் சிங்கம், எப்படியிருக்க?' என்றான் சிநேகத்துடன்...

சிங்கம் சட்டென எழுந்து நின்று பதிலுரைக்க விழைந்தது...

சிறுவன் திடுக்கிட்டு பின் தள்ளி நின்றவாறு பின்னால் திரும்பி பார்த்தான். அவனை நோக்கி வந்த ஒருவர், அருகில் வந்த பிறகு...

'பயப்படாதே சன்... நானிருக்கேன்...'

'நோ டாட், இந்த சிங்கம் லெசன்ல இருக்கிற விடவும் பயங்கரமா இருக்கு... ஐ லவ் திஸ் லைன் டாட்'

'ஆமா, அதுனால தான் கூண்டுல இருக்கு'

சிங்கம் அந்த தகப்பனை கண்கள் சுருக்கிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தது.

'டாட், அது ஏதோ உங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு. அதோட லாங்வேஜ் உங்களுக்கு தெரியுமா?'

'எனக்குத்தெரியாமலிருக்குமா? நானும் இது போல சிங்கமா இருந்தவன் தானே!'

சிறுவன் வியப்போடு பார்த்ததை போலவே சிங்கமும் தன் புருவம் உயர்த்தி வியந்தது.

'சன், இந்த சிங்கத்தை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுது?'

'சிங்கத்தோட வலிமை, கர்ஜனை, வேகம், ஆளுமை, வேட்டைத்திறன், ஆக்ரோசம் இதெல்லாமே டாட்'

சிங்கம் கண்கள் சுருக்கி புன்னகைத்தது.

'யா சன்... ஆனா இது எதுவுமே சிங்கத்திற்கு உதவாது தெரியுமா?'

சிங்கம் அதிர்ச்சிக்குள்ளாகியது...

'ஆமா, சன்... சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட், சிங்கத்திற்கு தெரியல்ல...'

'எனக்கு புரியல டாட்...'

சிங்கமும் தலை தொடங்கி வால் வரை சிலுப்பிக்கொண்டது.

'நீ குட்டிடா, நீ சிங்கமாகும் பொழுது நான் புரிய வைக்கிறேன்...'

'ஒகே டாட்... ஒரு சந்தேகம்... நீங்க சிங்கமா இருந்ததா சொன்னீங்க... அப்ப நீங்களும் கூண்டுல இருந்தீங்களா?'

'ஆமா, கொஞ்ச நாள்... பிறகு வெளிய வந்துட்டேன்'


சிங்கம் ஒருகண் சுருக்கி எப்படி என்பதாக பார்த்தது.

'இப்போ என்னவா இருக்கீங்க டாட்?'

'நான் இப்போ பாஃக்ஸ்... குள்ளநரி மை சன்...'

சிங்கம் கர்ஜித்தது...

'அப்போ உங்களுக்கு கூண்டு இல்லையா டாட்?'

'குள்ளநரிகள் கூண்டில் இருக்கமுடியாது... அப்படியே கூண்டில் போட்டாலும் தந்திரத்தால் தப்பிவிடும்... பொதுவா குள்ளநரிகள் நாட்டில், சுதந்திரமாத்தான் இருக்கும்.'

சிங்கம் தன் காலை தேய்த்துக்கொண்டு ஆக்ரோசமானது...

'அப்போ இந்த சிங்கமும், குள்ளநரியா மாறிட்டா வெளிய வந்திடுமா டாட்'

'நல்லா புரிஞ்சுகிட்டயே... ஆமா, மை சன்... ஆனா இந்த சிங்கம் கொஞ்சம் அடங்க மறுக்கிற சிங்கமா இருக்கு... இது வாழ்நாளெல்லாம் கூண்டிலேயே கழிக்க வேண்டியதுதான்...'

சிங்கம் இப்பொழுது நிலை கொள்ளாமல் அலைந்தது...

சிறுவன் சொன்னான்...

'என்ன சிங்கம், இது கூட தெரியாதா உனக்கு? உன்னப்போய் காட்டுக்கு ராஜான்னு யாரு சொன்னாங்க?'...

சிங்கம் ஆவேசத்தோடு கூண்டு கம்பியில் அறைந்தது. கூண்டுக்குள்ளிருந்து தப்பும் வகையில் அலைக்கழித்தது...

'வா... சன்... அதுக்கு கோபம் வந்திடுச்சு... நாம் போய்டலாம்...'

சத்தம் கேட்டு மேனேஜிங் டைரக்டர் காரில் வந்து இறங்கியவாறே....

'எவ்வளோ சொன்னாலும் நீ திருந்த மாட்டியா?' சொல்லியபடி தன் கைகளில் வைத்திருந்த பைஃல்களால் சிங்கத்தை அடிக்க முனைந்தார்...

தந்தையோடு போய்க்கொண்டிருந்த சிறுவன் திரும்பி பார்த்தபடி கேட்டான்...

'யாருப்பா அவர்?'

'அவர்தான் டிரைனர்... குள்ளநரியா மாத்தறாரு...'

'நீயும் அடிவாங்கிருக்கியா டாட்'

'இல்லவே இல்லை' குள்ளநரி சொன்னது

'சிங்கம்... பாவம் டாட்... '


பின் குறிப்பு; சிங்கத்திற்கு பதிலாக அவ்விடத்தில் உங்களை பொருத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...

.

Post Comment

3 comments:

நியோ said...

// சிங்கத்திற்கு பதிலாக அவ்விடத்தில் உங்களை பொருத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல... //
பொருத்தித் தன பார்த்தேன் தோழர் ...
நல்ல படிப்பினை ...
ஜக்குபாய் குறும்படம் நினைவுக்கு வந்தது ...
நன்றி சுகுமார் ...

மதுரை சரவணன் said...

கதை அருமை. உங்களைப் பொருத்திப் பார்த்தப் பின் என்னை பொருத்திப்பார்க்க மனசில்லை. சும்மா... சிங்கம் விட்டேன். நோ டென்சன்.
கதைக்கு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார்ஜி

காலத்தின் கோலம் - தவிர்க்க இயலாது - சிங்கம் சிங்கமாகவும் அதே நேரத்தில் குள்ள நரியாகவும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாம் நல்ல படியாக முடிய நல்வாழ்த்துகள் நண்பா
நட்புடன் சீனா