ஜிங்குச்சா...ஜிங்குச்சா...சிவப்பு கலரு ஜிங்குச்சா... பச்ச கலரு ஜிங்குச்சா... மஞ்ச கலரு ஜிங்குச்சா... ன்னு வீட்டுக்கு கலரடிக்கிறாங்க...
எந்த குருட்டுப்பய சொன்ன இழிவு இது?
அந்த காலத்தில மேற்படி வீடுன்னா... தூரத்திலிருந்தே தெரியுமாமே... அது போலவா?
அடபாவிகளா? இந்த ஜிங்குச்சா... வீட்டில் குடியிருக்கிறீர்களா? இல்லை கூத்தடிக்கிறீர்களா?
ஒருத்தர மடக்கி கேட்டேன்... அவரு சொல்றாரு... ஜிங்குச்சா... அடிச்சா வாஸ்து குறை சரியாய்(ஆய்)டுதான்... ஆமாய்யா... கேக்கிறவன் கேனப்பயல்னா....
வண்ணங்களை கையாள்வதில் அற்புதம் இருக்கிறது...
மனதை பக்குவ படுத்தும் வண்ணமுமுண்டு, படுத்தும் வண்ணமுமுண்டு...
உ.ம்... ம.ப.ப.வ...
நீலம் (Sky blue), பச்சை (Green), தாமரை (Rose), திராட்சை (Purple) இதன் அடிப்படையிலான பிற வண்ணங்கள்.
உ.ம்... ம.ப.வ...
சிவப்பு (Red) , மஞ்சள் (Yellow), வெள்ளை (White), காவி (நித்தியானந்தா காவி உட்பட) (Orenge) இதன் அடிப்படையிலான பிற வண்ணங்கள்.
பார்த்தீங்களா... வெள்ளையும் இருக்கு... இதனாலதான் அவங்க எதும் செய்யமலேயே பதட்டத்துல ஓட்டு குத்தி மேல அனுப்பிடுறோம்... ஓட்டுக்கு பதிலா வேற மூனெழுத்தை போட்டு படிச்சிறாதீக அப்பு! அப்புறம் ஆப்பு, காப்பு...
இப்பொழுது வண்ண சக்கரம்...
ஜிங்குச்சா... இல்லாம உங்க இல்லத்திற்கு வண்ணங்கள் பூச வேண்டுமா? எந்த புரஃபெஷனல் குருட்டுப்பய கிட்டயும் போகாதீங்க... உங்க இல்லத்திலேயே உன்னதமான, அற்புதமான வண்ணக்கலைஞர் இருக்கிறார்களே... ஆமாங்க உங்க குழந்தைகள்தான்...
தேவையான உபகரணங்கள்...
உங்களுடைய இல்லத்தின் வெளி, உள் அமைப்பு வரைபடம்... ஒரு நூறு ரூபாய் மதிப்பிலான நீர்வண்ண கலவைகள்... வண்ணம் தீட்ட தூரிகை... இவ்வளோதான்...
உங்க குழந்தைகளை அழைத்து ' உன் இஷ்டம்போல நம்ம வீட்டிற்கு வண்ணம் பூசுடா கண்ணு' என்று சொல்லிவிடுங்கள்...
அப்பொழுது தெரியும்... எது ஜிங்குச்சா... எது வண்ணம் என்று...
கொய்யால... கொஞ்சமாவது திருந்துங்கப்பா!...
.
No comments:
Post a Comment