எல்லா அலுவலகங்களிலும் டாப்ஸ்+ஜீன்ஸ் வரவேற்பு குமரிகள்...
'May I help you Sir?' என்று கேட்பதற்க்கு பதிலாக 'What you think about me?'என்று கேட்டால் எதோ நாலு வரி அவர்களை புகழ்ந்து தள்ள(!) வாய்ப்பாக இருக்கும்...
(@)-(@)
திருச்சிராப்பள்ளியை பொறுத்த வரை... வழக்கமானதுதான். இந்த கந்தக மண்ணில் அடிக்கும் வெயில், மக்கள், பிறர் வயிற்றிலடிக்கும் கொடுமையைவிட குறைவுதான்... சரிங்க... பகலவனுக்கும் நம்மளவிட்டா யாரு இருக்கா?
ஒரு நாளில் என்னுடைய பணி 11 மணிநேரம்... அவகாசம் கிடைத்தால் அரைமணி தூக்கம்... இதுபோக 2 மணிநேரம் வலை அறுவடை அல்லது விதைத்தல்... நேற்று...
இரண்டு மணி மேகமில்லா வெயில்... பிரதான சாலையின் இடது திரும்பிச்செல்ல காத்திருந்தேன்... எதிரே சாலையை கடக்க சிறு கூட்டம். அவர்கள் வழிதராது நான் இடது திரும்ப இயலாது... அப்போது...
உக்கிரமான வெயிலுக்கோ, வாகனத்தின் இரைச்சலுக்கோ, தன்மேல் இடிக்குமளவிருந்த கூட்டத்திற்கோ அல்லது எனக்கோ(!) சலித்த படி தன் பருத்த உதடு சுழித்து பழிப்பு காட்டினாள் ஒரு அரக்கு கலர் சுரிதார் குமரி... மப்பும், மந்தராவுமாக... இல்லை மந்தாராவுமாக... சுழிப்போடு அழகாயிருந்தாள்...
அவள் கடந்ததும், நானும் சாலையின் மறுபக்கம் வந்துவிட்டேன்...
சிலரை மீண்டும் பார்க்க வேண்டும் போல விருப்பம் எழும்... நானென்ன பையா கார்த்திபோல கூ. கெ. குப்பையா... பின்னாலயே போறதுக்கு...
உணவுக்குப்பின் அலுவலகம்... ஆற்காட்டார் அநுக்கிரகம் காட்ட 30 நிமிடமிருந்தது... முதல் மாடியில் அலுவலகமிருப்பதால் நல்ல காற்றோட்டமிருக்கும்... கூடவே கீழே குமரிக்கூட்டமுமிருக்கும்...
அதென்னவோ ஒவ்வொரு அரை நிமிடத்திற்கும் பத்து முதல் பதினைந்து குமரிகள் (அழகான) என் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்... சுரிதார், ஜீன்ஸ், இன்னபிற...
என் சக வயது பெண்களும் இப்படி தோற்றமளிக்க விரும்புவது... சரி... அதனால என்ன... அது உங்க இஷ்டம்... (நாங்க தவிர்த்துடுவோம்...)
திடீரென கண் கண்டுபிடித்தது... அதே அரக்கு கலர் சுரிதார் குமரி... எங்கே போய்விட்டு வருகிறாளோ தெரியவில்லை... தனித்து வந்தாள்... பார்த்துக்கொண்டே இருந்தேன்... நடந்தாள்... நடந்தாள்.. கூட்டத்தோடு கலந்தாள்... மறைந்தாள்... மீண்டும் குலுக்கலை... சே... அவளை பார்த்ததில் சிறு மகிழ்வு தோன்றியது...
பொதுவாக... எல்லா குமரிகளுக்கும்... (கவனிக்க... 18 முதல் 25 வருட நிறைவுக்குள் மட்டுமே... அப்போ... ரைட் வுடு...) ஏதாவது ஒரு வகையில்... நித்தியானந்தாவோடு அல்லது நந்தகுமாரனோடு (அதாவது கெட்ட, நல்ல சகவாசம்) தொடர்பில் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது... கையில் சூடான மொபைல்... (அவர்களைப்போலவேவா?)
அழகுப்பெண்ணும் + அழுக்குபையனும்... யப்பா...காம்பினேசனே சரியில்லையே... அழகு தேவையில்லையா... சரிப்பா.. மகளே... உன் சமர்த்து...
நல்லா யோசிங்க... வாழ்க்கை ஒன்வே... போனா... திருத்தவே... திரும்பவே முடியாது... அதனால உங்க பெற்றோர் கிட்ட கேமரா மொபைல் கேட்கிறமாதிரி... அவங்க கருத்தையும் ச்சும்மா கேளுங்கம்மா...
தொடரும்...
3 comments:
தல... கடைசியா என்னதான் சொல்ல வறீங்க?
பிகர் பாக்குறது பசங்களுக்கு நல்லது அப்பனுக்கு(பெண்ணின்)
கெட்டது...சரியா?
@தர்மா... குமரிகளெல்லாம் துள்ளி விளையாடுறாங்கன்னு சொல்லறேம்மா...(கடைசி 3 பாரா மட்டும்)
Post a Comment