ஏதோ, ஓட்டு என்றால் நாலு பேருக்கு நல்ல செய்தி சொன்ன திருப்தி இருக்கும்...
சரி அதை விடுங்கள்...
நடிக்க தயாரா? உங்களுக்கு நடிப்பு வருமா? உங்கள் பதில் என்னவாக இருக்கும்..?
நாயகனை தேடிய கதை...யூ டியூப்பில் பார்த்தேன். அங்காடி தெரு நாயகன் 'மகேஷ்' கிடைத்த கதை.
இந்த சுட்டி அழைத்துச்செல்லும்..
விளம்பரத்திற்காக அல்லாமல்... தேடியலைந்தது ஆச்சரியமளித்தது. சென்னை போன்ற கனவுலகத்தில் நடிக்க காத்திருக்கும் கதா (?!) நாயகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும். அறிமுக பேதமில்லாமல்... வாழ்ந்தும் காட்டிய மகேசு வாழ்த்துக்குரியவர்.
என்னையும் நடிக்க அழைத்தனர்... என் மாணவர்கள்... (அதானே பார்த்தேன்). இறுதியாண்டு மாணவர்களின், போட்டிக்கான குறும்படங்களில் மிக குறைவான நிமிடங்கள் மட்டுமே.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்... மாணவரை வாழ்த்தி பரிசளிக்கும் மாவட்ட ஆட்சியாளர் வேடம்... எந்த ஒப்பனையும் இல்லாது... காட்சி விதம் கேட்டு அதன்படி நடித்தேன். திரையிட்டு காணும் பொழுது... இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமோ என்றே தோன்றியது. ஆனால் யாரும் எதுவும் கூறவில்லை.
அடுத்து... ஒரு கல்லூரி விரிவுரையாளர் வேடம்... அப்பாடா... என் தொழிலே அதானே... பின்னிவிடலாம்... என்றெண்ணி காட்சி விதம் கேட்டு நடித்து காண்பிக்கச்சொல்லி அதன்படி நடித்தேன்... காட்சி 'எய்ட்ஸ் நோய் தாக்கிய மாணவன், வகுப்பிலிருக்கும் பொழுது நான் அம்மாணவரை நடத்தும் விதம்... அதீத கோபத்தோடு, உதாசீனப்படுத்தவேண்டும்'.
ஒரு டேக்...
'சார்... அப்படி இல்ல சார். இன்னமும் Force வேணும்...'
அடுத்த டேக்...
'சார்... என்னாங்க சார். நீங்களே இப்படி பண்ணா எப்படி?'
கிட்டதட்ட வடிவேலுவிடம், மிதிவண்டி கற்றுக்கொள்ளும் வெ.ஆ. மூர்த்தி நிலை.
அதற்கு அடுத்த டேக்...
'போங்க சார்... தேறாது... டைம் இல்ல சார்....ம்மம். சமாளிச்சுகிறேன்... போங்க...'
நன்றி கூட சொல்லவில்லை... அந்த மாணவர்.
'எப்பொழுதும் எனக்கு கோபமே வராதுப்பா (!), அதும் யாரையாவது உதாசீனப்படுத்தவேண்டும்னா முடியவே முடியாது' என (எங்கேயப்பா...விருது...?) என் பக்க விளக்கமளித்தேன். என் நண்பர்... அந்த குறும்படம் பார்த்துவிட்டு இப்படி சொன்னார்...
'தயவு செய்து நீங்க நடித்து சினிமாவ கெடுத்துக்காதீங்க...'
வாழ்கையில் நொடிப்பொழுதும் நடித்துக்கொண்டிருக்கிற நமக்கு... எனக்கு ஒளிப்பதிவு கருவி முன் நடிக்க இயலாதிருப்பது சோகம்தான்...
என்னைப்போல ஒரு ஆசிரியர்... திரைப்பட விமர்சகர்... இவரின் வார்த்தைகளால் நொந்து போன ஒரு இயக்குனர்... தன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் மட்டுமே இதை செய்ய முடியுமென்று சொல்லி ஆசிரியரை சம்மதிக்க வைத்து விட்டார். ஆசிரியருக்கு வந்தது... அறுவடைப்பயிர்...
தளத்தில் தன்னை அநுபவசாலியாக புகழ்பரப்பிக்கொண்டிருந்த ஆசிரியரை காட்சி பதிவுக்காக அழைத்தார் இயக்குனர்... பெரும் கூட்டம் கூடியிருந்தது. இயக்குனர் தன் உதவி இயக்குனரிடம் சொல்லி தளத்திலிருந்த எல்லாரையும் படப்பதிவு காண அழைத்திருந்தார்....
இயக்குனர், ஆசிரியரிடம்...' இதான் காட்சி...உங்க பாணில பண்ணுங்க... நான் சரி செய்து கொள்கிறேன்... ஆனால்... ஒன்று நல்லா ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்...இங்க சுத்தி நிக்கிற இவ்வளோ மக்கள் மட்டுமல்ல... கோடிக்கணக்கான மக்கள் உங்களை, உங்கள் நடிப்பை பார்ப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என்றார்... ஆசிரியருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட... ஒரே சொதப்பல்தான்...
ஒரு வலை ஒளிப்பதிவு கருவி முன்னால் ஒரு பத்து நிமிடம், ஏதாவது செய்து விட்டு திரையிட்டு பாருங்கள்... பானை சோற்றுக்கு ஒன்றை பதம்...
இன்னமும் பார்ப்போம்....
No comments:
Post a Comment