அதிகபிரசங்கித்தனமாக நான் சொல்லிவிடக்கூடாது என்பதில் நான் கவனம் கொண்டதால் கேட்ட செய்தியை அப்படியே தந்தேன்.
செய்தியை விரிவாக தரும்படி நிறைய நபர்கள் (ஏழு பேர்) கேட்டிருந்தனர்.
இயற்கையின் அற்புத படைப்பு ஒவ்வோரு உயிரும். ஆதிகால மனிதனுக்கு தனக்குள் நிறையும் காற்றின் மூலமாக ஒலி எழுப்புதல் என்பதே அறியாமல் தான் இருந்திருக்கிறான். தான் அடைந்த வலி, வெறி, மகிழ்வு இவைகளே தன் குரல் வெளிப்பாடாக இருந்திருந்தது. பிறகான வளர் தன்மையிலேதான் மொழி வளர்ந்திருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கர்கள் மூலமாக. (உபயம். தசவதாரம் கமலஹாசன்)
நான் பேசும் தமிழில், ஆங்கிலம் கலந்தவனை கேடு பெற சபிக்கிறேன்.
ஒரு மொழி அழித்தால் ஒரு இனமும் அழிந்துபோகும்... தமிழை பொறுத்த மட்டில், தமிழ் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்று... தமிழ் பேசுவோம்... இல்லையேல் ஆங்கிலம் பேசுவோம்... தவறில்லை... ஆனால் தமிங்கிலீஷ்... கேவலம்...நமக்கல்ல... தமிழுக்குத்தான்.
உடல் வெப்பம் இயல்பாக இருக்க வேண்டும். இது நியதி. வெப்ப அளவு 37.0 °C அல்லது 98.6 °F .வெப்பம் அதிகமானால், வியர்வை வெளிப்பாடு உடல் வெம்மை குறைத்தல். நாம் மூச்சு விடும் போதும், பேசும் போதும் உடல் வெப்பம் கொஞ்சம் வெளியேறுகிறது. தொடர்ந்து பேசினால் உடல் தளர்ந்திடும். எங்களைப்போன்ற விரிவுரையாளர்களுக்கு நித்திய கண்டம், பூரண ஆயுள்தான். அரசியல்வாதிகள் விதிவிலக்கு.
தமிழ் மட்டுமல்ல... ஒவ்வொரு மொழியும் தன்னை பேசும் மக்களை மட்டுமல்ல...மக்கள் வாழுமிட தட்ப, வெப்ப மாறுதலையும் சார்ந்தே இருக்கிறது. மொழி மக்களின் தகவல் தொடர்புகளுக்கு மட்டுமல்ல... உடல், மன இயல்பு நிலைக்கும் உதவியாக இருக்கிறது.
இது மிக நீண்ட கால திட்டமிடல் என்பதல்லால் வேறென்ன... மொழியை இகழ்வது என் மூதாதையரை இகழ்வதற்குச்சமம்.
திரு. தனபால் என்பவர் தனக்குத்தெரிந்த தகவலை பின்னூட்டம் வழியாக தந்திருந்தார். நான் யோசித்திருந்த தகவலையும் சேர்த்து. அவரின் வார்த்தைகளை பதிவில் இணைத்துள்ளேன். திரு. தனபால் அவர்களுக்கு நன்றி...
'நீங்கள் கூறியது மிகவும் சரி.நானும் இது சம்பந்தமான.சிந்தித்திருக்கிறேன். நம்முடைய பேசும் போதும் பாடும் போதும் பெரும்பாலும் அதிக காற்று வெளியேறுகிறது,அதன் மூலம் வெப்பமும் வெளியேறுகிறது.அதே ஐரோப்பியர்கள் பேசும் போது நுனி நாக்கிலேயே பேசுவர். அதனால் அதிக காற்றும்,வெப்பமும் வெளியேறாது.
மேலும் அவர்கள் பேசும் போது அதிக காற்றும் உள்ளே,மற்றும் வெளியே செல்லாது.அங்கே குளிர் பிரதேசமாக இருப்பதால் அந்த குளிர் மற்றும் பனி உள்ளே சென்று அவர்கள் உடல் வெப்பத்தைக் குறைப்பதைத் தடுப்பதற்காகவே அவர்கள் மொழி அவ்வாறு அமைந்துள்ளது.அவர்களின் மூக்கின் அமைப்பும் நீளமாக அமைந்திருக்கும்.அதனால் அதிக குளிர் காற்று உள்ளே செல்லாதவாரும்,அதிக உடல் வெப்பம் வெளியே செல்லாதவாறும் அவர்கள் மூக்கு அமைந்துள்ளது. அந்த நீளமான மூக்கின் துவாரம் மிக நீள வாக்கில் குறுகலான பாதையைப் போல் அமைந்திருக்கும்.அவ்வாறு இருப்பதனால்,அவர்கள் சுவாசத்தின் போது (குளிர் )காற்று உள்ளே செல்லும் போது காற்றின் பெரும்பகுதி மூக்குத் துவாரத்தின் குறுகலான பக்கங்களிலும் உரசிச் செல்லும் போது அதன் காற்றின் குளிர்ச்சி குறைந்து உள்ளே செல்கிறது.பனியும், குளிரும் அதிகமுள்ள பகுதியில் இருப்பவர்களுக்கு இயற்கையிலேயே அவர்கள் மூக்கு நீளமாக அமைந்திருக்கும்.
அதே சமயம் வெப்பம் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு மூக்கு அதிக காற்று உள்ளே,வெளியே செல்லுமாறு மூக்குத் துவாரம் அகலவாக்கில் அமைந்திருக்கும்.மேலும் அவர்கள் பேசும் மொழியும் உடலிலிருந்து வெப்பம் குறைவதர்க்காகவும் அமைந்துள்ளது.அதனால் ஒவ்வொரு கலாச்சாரம்,மொழி போன்றவை அந்த அந்த இடத்தின், தட்ப,வெப்ப நிலை சார்ந்தே இருக்கிறது.'
மொழியியல் வல்லுநர்கள் விளக்க காத்திருக்கிறேன்...
சில வரைபடங்கள்...
முதற்படம். முகம்... மண்டை ஓடு அமைப்பு.
இரண்டாவதாக... குரல் வெளிப்பாட்டு அமைப்பு கருவிகள்... குரல் வளை, உள் நாக்கு, நாக்கு, பற்கள், உதடுகள், நாசி.
மூன்றாவதாக... குரல் வளை, நடுவே குரல் நாண் - மேலிருந்து பார்வையில்.
கவனிக்க... பதினேழு வகை துணை கருவி வாயிலாக நாம் மொழியாற்றுகிறோம்.
கவனிக்க... த்த என்ற வார்த்தை ஒலிக்கையில் நா படும் பாடு...
நல்லதுங்க... ஏதோ தெரிஞ்சத சொன்னேன். தப்பா இருந்தா மன்னிக்கவும்....
என்ன? இதுக்கே முனைவர் (Doctorate) பட்டமா? வேண்டாமுங்க... அப்புறம் நான் ஊசி போட போயிருவேன்... ;-)
சில ஆதாரம்...
நூல்
வலை
நன்றி...
No comments:
Post a Comment