Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Saturday, April 10, 2010

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் - No English at Summer

எதையாவது எழுது... ஆக எங்களுக்கு புதுப்புது செய்தி வேண்டும் என்று ஒரு பூதம் போல... அடுத்து, அடுத்து என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் (?) வலை அன்பர்களுக்கு வணக்கம்.

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம்... என்னய்யா...இது புதுக்கதை? அல்லது கரடி?

கோடைக்கும், ஆங்கிலத்திற்கும் எப்படிய்யா முடிச்சு போடுற? ஏதோ உன் காதலிக்கும், உனக்கும்னு சொன்னா கூட பரவாயில்லை! ;-)))

வா - என்று சொல்லிப்பாருங்கள்...

COME - என்று சொல்லிப்பாருங்கள்...

என்ன நேர்கிறது...

வா என்று சொல்லும் போது நம் உடல் வெப்பம் உடனே வெளியே செல்கிறது...

COME என்று சொல்லும் போது, இந்த கோடையில் தகிக்கிற வெம்மை போதாதென்று நமக்குள்ளும் வாங்கிக்கொள்கிறோம்...

இது ஒரு சிறிய உதாரணம்தான்...

எனக்கு  இச்செய்தி அதிர்ச்சியாகக்கூட இருந்தது... எனக்கு அல்ல, எங்களுக்கு தெரியப்படுத்தியவர்... திரு. ஜோஸப் டிசோசா... முன்னாள் திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய நிகழ்ச்சி வடிவமைப்பாளர்... இந்நாளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக, தகவல் தொடர்புத்துறை விரிவுரையாளர்...

ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்க வரைபடங்கள் மட்டுமே கண்டிருந்த எனக்கு தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்கங்களை சொல்லி வியப்பில் ஆழ்த்தினார்.

நான் தனியாக இது பற்றி அவரிடம் விவாதித்து விட்டு, இச்செய்தி குறித்தான நூல் எழுதும் படிக்கு வேண்டுதல் விடுத்தேன்.

அவர் கூறியதில் சில....

பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் குளிர் என்பது மாற்றமில்லாதது. மூச்சு விட்டாலே உடல் வெப்பம் வெளிச்சென்றுவிடும். இதிலே பேசினா? ரொம்ப சோர்ந்துடுவாங்க... பேசவும் செய்யனும், உடல் வெப்பமும் குறைய கூடாது... அதுக்குத்தான் ஆங்கிலம்... உடல் வெப்பம் வெளிச்செலுத்தா ஆங்கிலம்...

ஏங்க... குளோபல் வார்மிங்னா, என்னென்னமோ செய்கிறோம்... நம்ம வார்மிங்க கவனிப்போமே... நாம இல்லைன்னா, ஏதுங்க குளோபல்....

Post Comment

8 comments:

Dr.P.Kandaswamy said...

அபூர்வ செய்தி, இத்தனை நாளாத் தெரியாம போச்சே,
ஏன் என் உடம்பு எப்பவுமே சூடாவே இருக்குதுங்கறதுக்கு இப்பத்தான் காரணம் தெரிஞ்சுதுங்க.

சுமன் said...

உண்மையிலேயே மிகச் சிறப்பான செய்தி.... ஆங்கிலமோகம் பிடித்தலையும் அனைவருக்கும் சொல்ல வேண்டும் .

இதனை முழுமையாக வெளியிட முடியுமா?

Ramanathan said...

nalla seithi anaivaraium attivaithavi but vary clear now

♠புதுவை சிவா♠ said...

அதுக்குதான் நான் கோடையில COME என்ற இந்த வார்த்தையை உபயோகம் செய்யமாட்டேன்.

நமக்கு கோடையில புடிச்ச வார்த்தை இதான்

முத்தம் - என்று சொல்லிப்பாருங்கள் என்ன நேர்கிறது

KISS - என்று சொல்லிப்பாருங்கள் என்ன நேர்கிறது

முத்தம் என்று சொல்லும் போது, இந்த கோடையில் தகிக்கிற வெம்மை போதாதென்று நமக்குள்ளும் வாங்கிக்கொள்கிறோம்.

KISS - என்று சொல்லும் போது நம் உடல் வெப்பம் உடனே வெளியே செல்கிறது...

:-))

ஆடுமாடு said...

புதிய செய்திதான். ஆனால், இன்னும் விளக்கமாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ராம்ஜி_யாஹூ said...

ஏற்கனவே ஆங்கில தெரியாமல் இங்கு பல தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் முன்னேறாமல் இருக்கின்றனர். இதில் ஆங்கிலம் தவிர்த்தால் இன்னும் பொருளாதார பின்னடைவு ஏற்படும்.

Anonymous said...

வித்தியாசமான பதிவு, விரிவாகக் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

dhanabal. said...

நீங்கள் கூறியது மிகவும் சரி.நானும் இது சம்பந்தமான.சிந்தித்திருக்கிறேன்.நம்முடைய பேசும் போதும் பாடும் போதும் பெரும்பாலும் அதிக காற்று வெளியேறுகிறது,அதன் மூலம் வெப்பமும் வெளியேறுகிறது.அதே ஐரோப்பியர்கள் பேசும் போது நுனி நாக்கிலேயே பேசுவர்.அதனால் அதிக காற்றும்,வெப்பமும் வெளியேறாது.மேலும் அவர்கள் பேசும் போது அதிக காற்றும் உள்ளே,மற்றும் வெளியே செல்லாது.அங்கே குளிர் பிரதேசமாக இருப்பதால் அந்த குளிர் மற்றும் பனி உள்ளே சென்று அவர்கள் உடல் வெப்பத்தைக் குறைப்பதைத் தடுப்பதற்காகவே அவர்கள் மொழி அவ்வாறு அமைந்துள்ளது.அவர்களின் மூக்கின் அமைப்பும் நீளமாக அமைந்திருக்கும்.அதனால் அதிக குளிர் காற்று உள்ளே செல்லாதவாரும்,அதிக உடல் வெப்பம் வெளியே செல்லாதவாறும் அவர்கள் மூக்கு அமைந்துள்ளது. அந்த நீளமான மூக்கின் துவாரம் மிக நீள வாக்கில் குறுகலான பாதையைப் போல் அமைந்திருக்கும்.அவ்வாறு இருப்பதனால்,அவர்கள் சுவாசத்தின் போது (குளிர் )காற்று உள்ளே செல்லும் போது காற்றின் பெரும்பகுதி மூக்குத் துவாரத்தின் குறுகலான பக்கங்களிலும் உரசிச் செல்லும் போது அதன் காற்றின் குளிர்ச்சி குறைந்து உள்ளே செல்கிறது.பனியும், குளிரும் அதிகமுள்ள பகுதியில் இருப்பவர்களுக்கு இயற்கையிலேயே அவர்கள் மூக்கு நீளமாக அமைந்திருக்கும்.அதே சமயம் வெப்பம் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு மூக்கு அதிக காற்று உள்ளே,வெளியே செல்லுமாறு மூக்குத் துவாரம் அகலவாக்கில் அமைந்திருக்கும்.மேலும் அவர்கள் பேசும் மொழியும் உடலிலிருந்து வெப்பம் குறைவதர்க்காகவும் அமைந்துள்ளது.அதனால் ஒவ்வொரு கலாச்சாரம்,மொழி போன்றவை அந்த அந்த இடத்தின், தட்ப,வெப்ப நிலை சார்ந்தே இருக்கிறது.