Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, October 8, 2009

Fool - is not Falsh

முட்டாளாக இருப்பது அவமானத்திற்குறியது என்ற(ர) கருத்து தவறு. ஒரு அறிவாளியாக இருப்பதும், இருப்பது போல நடிப்பதும் மிக்கடினம். முட்டாளாக இருப்பதில் எந்த சிரமமும் இல்லை.

ஆனால் அடுத்தவர் நம்மை சொல்லாமே தவிர நாமே நமக்கு சொல்லிக்கொள்ள கூடாது. நாம் முட்டாளா? இல்லையா? என்பதை புன்னகைத்துக் கொண்டே செயலில் காண்பித்து விடல் வேண்டும்.

வளர் பருவத்தில் 'முட்டாள்' என்ற வசை, கண்களில் உடனே கண்ணீரை வரவழைக்கும். எதிர் விழைவு... அந்த வசையை யார் சொன்னார்? என்பதை பொறுத்தது.

தந்தையாக இருந்தால்... நீண்ட மௌனம். நான் அப்படியான ஒர் நாளின் இரவில் 'போங்கடா' என்று சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தெற்கு நோக்கி நடந்து விட்டு, குழப்பமாக மீண்டும் வீடு வந்து சேர்ந்தேன்.

தாய் அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை, தாய்க்குச் செல்ல பிள்ளை ஆதலால்...

'முட்டாபய மவனே' என்று வேண்டுமானால் சொல்லக்கூடும்.

சகோதரி, சகோதரர் சொல்லக்கூடும், 'நீதான் அது' என்று மட்டுமே மறுக்க இயலும்.

நண்பர் வட்டத்தில் இரு வாய்ப்புள்ளது. ஒன்று, ரணகளமாகும், மற்றொன்று நட்பு முறிக்கும்.

ஆசிரியர் அதே வார்த்தைகளை சொல்லும் போது 'அதை இத்தனை சக மாணவர்கள் மத்தியில் சொல்லாதீங்க' என்று மனம் பதறும். சக மாணவர்கள்களின் கிண்டல் கூனி (போல) நிற்கச்செய்யும். இப்போதைய தலைமுறை மாணவர்கள் சொல் பொறுக்காதிருக்கிறார்கள். எனவே ஆசிரியர்கள் கவனம் கொள்க!

அலுவலகத்தில் மிகுந்த அவமானத்தை தருவதாக அமைகின்றது. மன உழைச்சலை தருகின்றது. அநாவசியமான கோபத்தை உருவாக்குகிறது.

மனைவியிடமிருந்து வரும் வசையின் தாக்கம் மீண்டும் அவரையே தாக்கக்கூடியது. காரணம் ஆணாதிக்க சமூகம்.

அநேகமாக ஏதேனும் ஒரு வகையான ஆர்வம் மட்டுமே 'இந்த வசையை' பெற்றுத்தருவது ஆய்வின் முடிவு. நமது எண்ணங்களின் சிறு மதிப்பீடுதான் இதிலிருந்து மீள்வதற்கான வழி.

'முன்னரக் கரவாது தன்பிழை இழக்கியான் பின்னூறு இரங்கி விடும்' வள்ளுவர் அப்போதே சொல்லியிருக்கிறார்.

Post Comment

2 comments:

passerby said...

I don't clearly understand your points.

I can be described for writing this sentence in 2 ways:

one, you are more intelligent than I, and it requires a better brain that I have, to understand your points.

Two, you are really a muddled thinker as only from a muddled mind comes forth muddled thinking.

It becomes obvious now that the man who appears foolish to one, may appear intelligent to another.

It also becomes clear that one appears foolish depending upon the place, situation and the people involved.

George Orwell wrote in his famous essay: Shooting an Elephant, which portrays his actual experiences as a Police Office in Burma, that he felt foolish because the Burmese thought he could not even understand the ways of an elephant, which a little Burmese boy could well do.

Your first responsibility here is to have defined what you think - don't worry about what others think - Foolishness.

Great genuineness were ridiculed for being foolish. For e.g Joseph Priestly.

The common definition of Foolishness is therefore suspect. I wont pass the test of right thinking persons. People mistake intelligence for over smartness, for speaking quickly and loudly, for communicating effectively with clarity. Many such traits wont find with geniuses.

Are they idiots?

Sugumarje said...

திரு. கள்ளபிரான் அவர்களே, தங்களின் பின்னூட்டத்திற்க்கு பின், என் பதிவை மீண்டும் நானே வாசித்தேன்.

அதீத புரிந்து கொள்ளல் தேவையில்லை.

எதிர்சாரரால் 'முட்டாள்' என்று அழைக்கப்பட்டால் கவனம் சிதறாயிருத்தல் வேண்டும், தன் மனவருத்தம் தேவையில்லை என்பது ஓர் நிலை.

நம்மை நாமே 'முட்டாள்' என்று கருதிக்கொள்ளும் முன்பு நம் செயல்களில் ஆழ்ந்த கவனம் வேண்டும் என்பது இரண்டாம் நிலை.

அடுத்தடுத்து தடமாறினது போன்ற ஒர் தோற்றம் தளத்தில் காணப்படுவது உண்மை.

கவனிக்க, தவறிருந்தால் திருத்தவோ, மறு பதிலளிக்கோ நான் சித்தமாயுள்ளேன்.

என் கருத்துக்களாலேயே என்னை மீண்டும் யோசிக்க வைத்தமைக்கு நன்றி. வருக!