Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Tuesday, October 6, 2009

Visual Communication _ Educator

எதன் பொருட்டு எழுதுகிறாய்? என்று என்னிடம் கேட்கப்பட்டது.

'நான் இவ்வகையில் முட்டாள்தனமாக இருக்கிறேன் என்று கூட கொள்ளலாம்' என்று பதிலுறுத்தேன். நம்ம வள்ளுவர் கு(ர)றல் 'ஒருவன்செய்கைகளே  அவனின்  உரைகல்' என்பதைப்போல, என் வார்த்தைகளின் மூலமாக என்னை அறியத்தரும் ஒரு சிறிய முயற்சி.

கட்புல தகவல் தொடர்பியல் துறை விரிவுரையாளராக இருந்தும் (Visual Communication), கட்புல தகவல் தொடர்பியல் என்றதும் 'திரைப்படம்' என்பது மட்டுமா? என்றால் இல்லை. தளத்தில் அது குறித்த செய்திகள் அருகியே காணப்பெறும். ஏன்? களத்தில் இருந்துதான் இது குறித்து தர என்னால் இயலுமே தவிர தளத்தில் தர இயலாது.

பசியாக இருப்பவனுக்குத்தான் விருந்தின் ஓம்பலும், சுவையும் உணர முடியும். திரைப்படம் என்ற ஊடகத்தின் பிரமிப்பிலிருந்து மீளா கூட்டத்திலிருந்து கொண்டே விமர்சனமோ, வியாக்ஞானமோ தருவதில் எனக்குடன்பாடில்லை. 

சில திரைப்படங்களின் விமர்சனங்களால் நைந்து போயிருந்த பாரதிராஜா,
'ச்சும்மா குறை சொல்லிட்டே இருக்காதைய்யா! நீ முதலா உள்ள, திரைப்பட துறைக்கு வா, அப்புறமா பேசு' என்றழைத்தார்... என்னையல்ல! பெரியார்தாசனை. அழைத்தது மட்டுமல்ல... தன் படத்தில் நடிக்கவும் வைத்தார்.

'கருத்தம்மா' கிழவன் நினைவிலிருக்கிறானா?

நடப்புகாலங்களில் 'குறும்பட' பயிற்சி பட்டறை நிறைய நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். திரைப்படம் என்ன? திரைப்படமாவது எது? என்பதில் கவனம் கொள்ளுங்கள். உங்களின் உணர்வுகளை திரைப்படமாக்குங்கள். திரைப்படம் என்ற ஊடகத்தின் உண்மை உங்களுக்கே அறிய வரும்... இனி சி.மு, சி.பி அறிவீர்கள்.

இப்பொழுது விதைக்க மட்டுமல்ல, களை (கலை அல்ல) அறுக்கவும் தயாராகிவிட்டீர்கள்.

அடுத்தவரின் விமர்சனங்களிலிருந்து விலகியிருங்கள், 'எனக்கும் தெரியுமைய்யா' என்றிருங்கள்.

விலகிப்போன ஆடாயிருங்கள்...

சரி, இங்கே நான் என்ன செய்கிறேன்?... நான் சில தலைப்புக்களில் வகுப்புகள் தருகிறேன். நீண்ட கால (பத்து வருடங்களுக்கு மேலாக) கணிணி உபயோக பணி காரணங்களால் திரைப்பட தொகுப்பு, அதற்குரிய கணிணி மென்பொருள் கற்றுத்தருகிறேன்... (Film Editing Software and Effects Software)கணிணி துணை கொண்டு தயாரிப்பதற்கான இரு பரிமான, தொடர் வரைகலை திரைப்பட கலை, முப்பரிமான திரைப்பட கலை மென்பொருள் கற்றுத்தருகிறேன். ( 2d drawing, Animation, 3d Animation)

அப்படியென்றால் தளத்தில் தருவதுதானே?

'இல்லை, இது என் வாழ்வாதாரம், நான் விருந்தே வைப்பேன், நீங்கள் கேட்டால்...'

Post Comment

No comments: