ஆமாம், மீண்டும் ஒரு சாலை விபத்து. இந்தமுறை இரவு வேளை. சாலையில் என்னை தட்டிவிட்டுச் சென்றது ஒரு அவசர ஊர்தி. (ambulance). ஏதுனும் அதிகமாக இருந்தால் இதிலேயே கொண்டுபோகலாம் என்று நினைத்து தட்டிவிட்டர்களோ? அதிசயமாக எந்த காயமும் இல்லை. நானே எழுந்து என்னை ஆசுவாசப்படுத்தி இல்லம் சென்று விட்டேன்.
அவசர வூர்தியே விபத்தை ஏற்படுத்துமானால், கொடுமை. யார் அந்த வாகன ஓட்டுனர் என்று தெரியவில்லை. அவரின் அவசரம் எனக்கு புரியாமல் இல்லை, குறுக்கே எவர் வந்தாலும் பரவாயில்லையா?
ஒரு தொடர் வண்டி விபத்து... உயிர் சேதம் ஏதுமில்ல. ஆனால் வண்டி கவிழ்ந்து விட்டது. விசாரணையில் தொடர்வண்டி ஓட்டுனரிடம் கேள்வி கேக்கப்பட்டது.
"எவ்வளவு பொருட்சேதம் தெர்யுமா? அப்படி என்னதான் நடந்தது? "
"ஒரு நபர் குறுக்கே வந்து விட்டான் "
"சரி, ஒருவன் தானே , மேலேற்றி விட்டு போக வேண்டியது தானே?"
"அதைத்தான் செய்ய விரும்பினேன்... இப்படி நடந்து விட்டது..."
ஒரு உயிரை பாதுகாக்கும் அவசர ஊர்தி... ம்ம், ஓட்டுனர்களுக்குத்தான் விபரம் புரிய வேண்டும். ஆனால் இதுபோல ஒரு, அல்லது சிறு விஷயங்கள் எல்லாம் யாரையும் திருத்தாது.
நான் பயணிக்கும் வழியில் முன்னதாகவே ஒரு அவசர ஊர்தி என்னை கடந்து சென்றது. இரண்டாவதாக ஒலி கேட்டபின்பு, "என்னடா எது, நிறைய பேருக்கு நலமில்லமா போய்டது போல இருக்கு " என்று எண்ணி சிலநொடிகளில் நான் கிழே விழுந்தேன், என்னை கடந்து அவசர ஊர்தி வேகமாக போய்க்கொண்டிருந்தது, என் பின்னே ஒரு கார் மெதுவாக நின்றது...
காதலா காதலாவில் ஒரு வசனம் வரும்....
"அதாம்பா, அதாம்பா அந்த ஏணில ஏறுனவரு திடிர்னு கீழ விழுந்திட்டர்ப்பா"
"பார்த்தீங்களா, ஏணில ஏறனவருக்கு, இரங்கல் செய்தி வந்திருக்கு"
வசன உபயம் "கிரேசி மோகன் "
இது போன்று திடீரென விழுதல் ஒரு நல்ல அனுபவம். நம்ப உடல் நிலையை மறு பரிசோதனை செய்து கொள்ளலாம்.
வாழ்விலும் புதிய எழுச்சி கொள்ளலாம்... எப்படி?
விழுந்து பாருங்கள் ...
No comments:
Post a Comment