இது அறிவாளியாக இருப்பதின் அல்லது இருக்கமுயற்சிப்பதின் சாபக்கேடு. இது சில நேரங்களில் ''உன்னைவிட'' என்பதாகக்கூட அமையும். ஆனால் பல ஆண்டுகள் அநுபவங்களுக்குப்பின் நான் முட்டாளாகவும் நடந்து கொள்கிறேன். ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்லவும் செய்கிறேன்.
அநேகமாக கிராமங்களில்... அவையெல்லாம் இப்போதேங்கே இருக்கின்றன? சிறிய நகரங்களில் நிறைய நபர்கள் ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்படி சொல்லுபவர்களை நான் ஏளனம் செய்திருக்கிறேன். "என்னப்பா இது கூட தெரியாத உனக்கு?" என்று. அது நீண்ட அநுபவங்களுக்குப்பிறகானதாக அப்போது தெரியவில்லை.
சென்னை போன்ற பெரு நகரங்களில் "I don't know" மிக குறைவாகவே ஒலிக்கும்.
நிறைய நபர்கள் பெரும் விடாமுயற்சியோடும், மன அழுத்தத்தோடும் நான் முட்டாளில்லை என நிரூபிக்கவே முயற்சிக்கிறார்கள்.
அதன் மூலமாக அவர்கள் பெறும் சுமை, காலமுழுதுக்கும், காலன் வருமளவும் தொடரும்.
''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்வதற்கு கூச்சமோ, தயக்கமோ தேவையில்லை. ஆனால் வயதாக ஆக தானாகவே இயல்பாக சொல்லக்கூடிய காலம் நிச்சயமாக வரும்.
அப்போதுதான் ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்ற வாக்கியங்களின் உண்மை, தன்மை அறிய வரும்.
No comments:
Post a Comment