வேலியில் ஓடுகிற ஓணானை வேட்டிக்குள் விட்டகதிபோல, அவிழ்க்கவும் முடியாது, தட்டிவிடவும் முடியாது படுகிற அவஸ்தை!
எதற்காகவோ இதெல்லாம்? கடுகளவு இல்லை இமயமலையளவு தன்முனைப்பு இருப்பதாகவே உணர்கிறேன். எனக்கு இதெல்லாம் தெரியும் என்கிற ரீதியிலான
தற்ப்பெருமை. சில உண்மைகள் சுடுகின்றன.
மனதில் இருப்பதை வருவிப்பவந்தான் மிகச்சிறந்த படைப்பாளி. ஆனால் ...
என்ன ஒரு தந்திரம்? தேனை தடவிய எதோ ஓன்று...
சில வாரங்கள் கொஞ்சம் விலகி நின்று வலை உலாவி கண்டு களித்து, களித்ததை பதிவாய் தர விரும்புகிறேன். நிச்சயமாக எனது கடந்த பதிவுகளை விட உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இது என்போன்ற தேடல் கொண்டவர்களுகக்காகவே! என்கரம் பிடித்தல்ல, நான் என் விரலால் சுட்டி தருகிறேன், நீங்கள் பயணம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment