ஒரு வார அவகாசமே இருக்க, என் பலவித அலுவல் நடவடிக்கைகளே பலவித பிரச்சனைகளையும் உண்டாக்கியது. ஆனால் எல்லோரும் கை கோர்த்து அந்த நூலை பிரசுரம் முடித்து பார்த்த போது மனதில் மகிழ்வு எழாமல் இல்லை.
சில ஒப்பந்தங்கள் ஒப்புக்கொண்ட பிறகுதான் தனது பிரமாண்ட வாயை காண்பிக்கின்றன. "என்னிடம் உன் சவாலா?, இப்போ நான் உன்னை விழுங்கப்போகிறேன்" என்று பயமுறுத்துகின்றன.
கொஞ்சம் மன அழுத்தமும் கூடவே உருவாகிறது. ஒரு படைப்பாளிக்கு இது நிறையவே நடக்ககூடும். எனக்கு என்ன ஒரு திருத்தம் வேண்டும் என்றால் படைப்பாளிக்கு முழு சுதந்திரத்தன்மை கிடைக்க வேண்டும் என்பதே.
ஆனால் பொருளாதரத்திற்கு , தன் வாழ்வியல் தேவைகளுக்கு இப்படி சில தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
"என்ன எது இப்படி இருக்குப்பா?"
"ஆமா, இது வேற டிசைன் பண்ணிதான் ஆகனும்"
"நான் சொல்றத கேளுங்க, ஒன்னும் வேணாம், ஏற்கனவே பண்ணினது தானே, அதே போடுங்க"
"இல்ல, பிரசுரம் அவ்வளவு நல்லா இருக்காது"
"அப்போ, போடுற மற்றவர்களெல்லாம் என்ன.....?"
" சரி, முடிஞ்ச அளவுக்கு சரியாக தர முயற்சி செய்றேன், போதுமா? நாளைக்கு "இது யார் பண்ணினதுன்ணு கேட்கணும், எவன் பண்ணினதுன்ணு கேட்கக்கூடாது, எனக்கு அது முக்கியம் "
"சரி, செய்யுங்க"
சில மாதிரி, பிரசுரத்துக்கு பின்பு... (ஏற்கனவே நாள் நெருங்கிக்கொண்டிருக்கும்)
"என்ன ஆசிரியர், பிரிண்ட் இவ்வளவு மோசமா இருக்கு, இதெல்லாம் பார்க்க மாட்டீங்களா ?"
"அதான், சொன்னேனே, சரியா வராதுன்னு"
"ஏங்க வராதுன்னு அடிச்சு சொல்ல வேண்டியதுதானே ? இப்ப இப்படி பதில் சொன்னா எப்படி?" (யாரை அடிக்கணும்?)
"சரி, இப்போ நான் என்ன செய்ய?"
"என்னமோ செய்ங்க, எனக்கு இந்த நாள்ள பிரசுரம் பண்ணியாகனும், இப்படியெல்லாம் இருக்கக்கூடாது."
"அதுக்காகத் தானே, நான் சொன்னேன்"
"சும்மா பேசினதே பேசாதீங்க, ஆசிரியரே?"
இப்படி சிலநேரம் வாக்குவாதம் போல நடப்பதுண்டு...
இது கூட ஒரு விபத்துதானே? ... ம்ம், அனுபவம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்...
1 comment:
நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Post a Comment