Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Tuesday, September 8, 2009

Self Understands _Boon or Curse?

தனக்கு தானே புரிந்து கொள்ளுதல், அல்லது அறிந்து கொள்ளுதல் வரமா இல்லை சாபமா? என் வாழ்வு முழுதும் எனக்கு விடை கிடைக்காது போலும். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வரத்தையும், சாபத்தையும் தருகின்றன. சாபமாக இருக்கும் போது நான் என்னை முட்டாளாக உணர்கிறேன், வரமாய் இருக்கும் போது என்னை நானே புகழ்ந்து கொள்கிறேன். ஆனால் பொதுவாக என்ன நிலை என்றால் நாயகன் கமல் போல "தெரியலயேப்பா !".

எனக்கு கணினியும், மென்பொருளும், வடிவ அமைப்புகளும், குறுகிய கால அவகாச வேலைகளும் அத்துப்படி. சும்மா முடிந்த வேலையே பார்த்துக்கொண்டே இருப்பது நல்ல படைப்பாளிக்கு ஒரு சாபக்கேடு. உண்மை என்னவெனில் என்னும் ஏதேனும் செய்து என்னும் சிறப்பாக வடிவிக்க முடியுமா? என்பதுதான்.

ஆனால் அடுத்தவர் புரிந்து கொள்வர் என்று நினைத்தால் அந்தோ, "யோவ், ஆசிரியரே, போதுமப்பா"

ஆனால் நான் தாமதமாக இல்லம் செல்கிறேன். என் இல்லாள் உணவு உண்டிருப்பாள் என்று நினைத்தால் அந்தோ பரிதாபம்.

நாளை இந்த வேலைகளில் ஓன்று முடித்தல் போதுமானது, இதை முதலில் முடிப்போம் என்று நினைத்தால் அந்தோ பரிதாபம். "இத ஏன்யா இப்ப தாரே, அது தான்யா மொதோ தரணும் "

வெறும் காய்ச்சல் தானே, சரி அதனால் என்ன? என்று நினைத்தால் அந்தோ பரிதாபம்.

தேதி 10 ஆச்சு. கண்டிப்பா இந்த மாணவர் கல்வி கட்டணம் தருவர் என்று எதிர்பார்த்தால் அந்தோ பரிதாபம்.

8 மணிக்கு வரச்சொன்னார், மணி 7.50 ஆகிறது, சரி கண்டிப்பா இருப்பார், அதற்குள் நாம போய்விடலாம் என்று நினைத்தால் அந்தோ பரிதாபம்.

பாடங்கள் என் விளக்கங்கள் வாயிலாக மாணவ, மாணவிகள் கண்டிப்பாக நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள் நினைத்தால் அந்தோ பரிதாபம்.

"யோவ், இது ஒன்வே தெரியாதா?" " ஹெவி வெஹிக்லெக்கு மட்டும்னு நினைத்தேன் சார்" "நினைப்பையா நினைப்ப"

வரும்போது வாங்கிட்டு வரச்சொன்னேன், வாங்கிட்டு வருவான் பார்ப்போம். என்று நினைத்தால் அந்தோ பரிதாபம்.

நேரங்கெட்ட நேரத்திலே போறேன், ஏதும் சாப்பிட கிடைக்காது வெளிய. சரி வீட்லயாவது இருக்கும் என்று நினைத்தால் அந்தோ பரிதாபம்.

எப்படி ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் ஒருநேரம் சாபமா இருக்கு, இன்னொரு நேரம் வரமா இருக்கு, என்னங்க வாழ்க்கை பூரா இருந்தா எப்படிங்க?

நீங்களே சொல்லுங்க!

Post Comment

1 comment:

வடுவூர் குமார் said...

தேடி/தோண்டிப் பாருங்க‌ள் கிடைத்தாலும் கிடைக்க‌லாம்!!