Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Friday, July 3, 2009

Re Fresh Brain World

நான் மட்டுமே இந்த இல்லத்தின் முதுகெலும்பு என்று ஒரு செங்கல் கூறுமானால் அது பொருத்தமானதாகாது. அதைப்போலவே எனக்கு கணினி மென்பொருள் அத்துப்படி, ஆட்ட இயலாது, என்று கூறவே இயலாது. நொடிக்கு நொடி மென்பொருள் முன்னேற்றம் தன்னை புதுப்பித்துக்கொண்டே, ஒவ்வொன்றையும் பழசாக மாற்றிக்கொண்டே இருக்கறது. மாறுதலை நாமும் அவ்வப்பொழுது பதுப்பித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

ஆனால் திடீரென கண்களை கட்டிக்கொண்டு இருண்ட கானகம் கடப்பது போல சிறு ஆயாசமும் வருவது இயல்பு.

மிகப் பெரும் அணுவியல், அறிவியல் அறிஞரே கூட தனது மூளையை 15% மட்டுமே உபயோகம் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அப்படியென்றால் நமக்கு இன்னமும் மீதம் இருக்குமே. எனவே சலிக்காது ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

இதைத்தான் ஜக்குவிடம் தெரிவித்து விட்டு...

"உங்க மூளை உபயோகமெல்லாம் எப்படி?" என்று கேட்டேன்.

"அதுவா? எனக்கும் சரி, எங்க அப்பாவுக்கும் மூலையை சும்மா வச்சுக்கிறது பிடிக்காது. அதுனால 100% உபயோகிப்போம்."

"அட."

"ஆமா, சாமான்களெல்லாம் தூக்கி மூலைல போட்டாத்தான் வீடு நல்லா ஃப்ரீயா இருக்கும், இல்லையா?"

நீண்ட மௌனத்திற்குப் பிறகு...

"என்ன நான் சொல்றது?"

நான், "ஆமாப்பா, ஆமா" என்றேன்

Post Comment

No comments: