Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Tuesday, July 14, 2009

The Mask

நாய் எலும்புக்காக தோண்டிய தானே புதைந்து போனால், அப்படித்தான் இருக்கிறது இப்போதைய பொருளாதாரமும், மக்களின் வாழ்வும். வரவேண்டியதும் வருவதில்லை, கேட்டாலும் கிடைப்பதில்லை. தவறிய வார்த்தைகள் கிடைப்பதுபோலவே நமது வார்த்தைகளும் தவறுகின்றன. ஒரு நியாயம் ஒரே நியாயமாக இருப்பதில்லை.

என்ன சிக்கல் என்றால், நாணயத்தோடு, நாணயமும் சேர்ந்து கொள்வதால் 'பேரு' தள்ளாட்டம் ஆடுகிறது. இக்கரைக்கு அக்கரை ப(ச்)சை போல, ஒவ்வொரு வாசலும் ப(ச்)சையாகவே தெரிகிறது.

தகவல் தொடர்பியலில் ஒரு வார்த்தை உண்டு, மனிதன் என்பவன் வாழும் மிருகம், (உபயம் சாக்ரெடீஸ்)

வேட்டை அறிந்த, தன் இனத்திற்குள்ளேயே வேட்டையாடும் குணமறிந்தவன். அடேங்கப்பா! எத்தனையாயிரம் வேட்டைகள், இன்னமும் முடிந்தபாடில்லை. இப்போதைய மனிதன் தானே காணச் சகியாத முகமூடி அணிந்திருக்கிறான், வெளியே அல்ல, தனக்குள்ளே.

அது ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்கதையாகிப்போவதுதான் வேதனை.

Post Comment

No comments: