ஒஹெதாஸ் "OHEDAS". அப்படின்னா? நிறைய நண்பர்கள் விளக்கம் கேட்டனர். ஊஹெட் (OOHED) என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து வருவித்தது. உங்களை யாராவது திடீரென பயமுறுத்தினால்... ஒரு சப்தம் தருவீர்கள் அல்லவா? அதை 'ஊஹெட்' என்று கொள்க.
அதாவது The word "OOhed" is used to express pleasure, satisfaction, surprise, or great joy. அப்போ AS? அது Artificer Studio, A skilled worker; a craftsperson's Studio. நிபுணத்துவம் வாய்ந்த கலைக் கூடம் என்பதாக பொருள்.
இப்போதைய நிமிடங்களில் இன்னமும் ஊழியர்களின்றி தனி நபராகவே சமாளிக்கிறேன். உரமிட்டு, நீர் விட்டு பருவத்திற்காக காத்திருக்கிறேன், மிக அளவில் வளர்வதிற்கு.
என் நண்பரில் ஒருவர், ஜக்கு (அடைமொழிக்காக),
'உனக்கு, எங்க விசயம் தெரியுமா?' என்று கேட்டார்.
'சொல்லுங்க'
'எங்க அப்பா தன்னோட நிறுவனத்திற்கு நேசமணின்னு பேரு வச்சார். அதை வாசற் பலகைல எழுதியும் வச்சார். அந்த பேரை ஆங்கிலத்தில எழுதும் போது NASA MANI ன்னு எழுதிட்டதாகவும், அதை அமெரிக்காகாரன் பார்த்துட்டுத்தான் NASA ன்னு பேரு வச்சதா சொல்லுவாருப்பா'
'உங்க அப்பா இருக்காரா?'
'எங்க, அவரு போயி முப்பது வருசம் ஆச்சு'
'நல்ல வேளை', என்றேன்.
Oohed: source and according to The American Heritage Dictionary.
No comments:
Post a Comment