Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Wednesday, July 1, 2009

Alertness and Quitness

உழைப்பவனை விட வெறுமனே இருப்பவனுக்குத்தான் அதிகம் பசி உணர்வு இருக்கும். அது போலவே என்னைப் போல கணினியாளர்களுக்கும் அதிகம் பசிக்கும், மூளை நியூரான்களின் அதீத உழைப்பால். எனவே சாப்பாடு கூடவே சகட்டு மேனிக்கு (!) எதையாவது வயிற்றுக்குள் தள்ளுதல் கொஞ்சம் சுகம் தரும். அப்படியாக அன்று மாலை நான்கு மணிக்கு அருகிலிருக்கும் தேனீர் கடைக்குச் சென்றேன். புதிய எண்ணை பலகாரங்கள் தயாராக இருந்தன. எனக்கு சூடு ஒவ்வாது. (பொதுவாக எண்ணை பலகாரங்கள் வீடு தவிர எங்கும் தவிர்க்கும் குணமுடையவன்). என் கண்ணில் பஜ்ஜி பட, இரண்டு மட்டும் கேட்டு வாங்கினேன். இது நன்கு அறிமுகமான கடையும் கூட. சட்னியும், குருமாவும் கலந்து தட்டில் வாங்கிய மறு நிமிடமே அது சுட்டு வெகுநேரமாகிவிட்டதை காண்பித்தது. ஒரு துண்டு வாயிலும் வைத்து விட்டேன். அப்படியே கடைக்காரரிடம் ' ஏன்யா, காலைல சுட்டதை தலைல (எதுகை, மோனை) கட்டிட்ட பார்த்தாயா?' என்றேன். அசராமல் ' சார், அது மதியம் சுட்டது சார் ' என்றார் கடைக்காரர். ' சரியா, எனக்கு எதுக்குயா கொடுத்த? ' பாதி குரலில் ' கேட்ட பிறகு தானே கொடுத்தேன்.'

"ஏன்யா இளநில தண்ணியே வரலிங்க" " போடா, அவனவன் ஒன்னுக்கே வரலேனு இருக்கான், இவனுக்கு தண்ணி வரலியம்" கவுண்டமணி சொன்னது போல பதில் தரவும் தயாராக இருப்பார்கள்.

அடப்பாவிகளா? குடிக்க கேட்டால் தேனீருக்குப் பதிலாக வேறு ஏதாவதா தருவீர்கள்? எனக்கு இதை மையப்படுத்திக்கொண்டெல்லாம் வாக்குவாதம் செய்து பழக்கமில்லை. வாங்கியதற்காக காசை அழுது விட்டு(!) வந்தேன்.

காலம் தோறும், நிமிடம் தோறும், நொடிகள் தோறும் ஒரு செஸ் வீரனைப்போல எவனோ என் காலை வாறிடுதலுக்கு முன் எதிராளியை வாறிட தயாராக இருத்தலை இவர்கள் விரும்புகிறார்கள். எல்லோருமே அப்படியே இருந்திடவும் சொல்லுகிறார்கள். நித்திய கண்டம், பூரண ஆயுள் என்பதைப்போல ஒவ்வொரு நாளுமாக வாழ்வதற்கு பிறவாமலிருந்திடலாம்.

இத்தகையோர் மட்டுமல்ல, எல்லோருமே யாவருடனேயும் இப்படித்தான். இழப்பது எது என்று தெரிந்தே இழக்கிறார்கள், இழக்க தயாராகவும் இருக்கிறார்கள்.

என் நண்பரிடம் இது பற்றி கூறிவிட்டு "நீங்கள் எப்படி? அலர்ட்வதியா, அப்பாவியா ?" என்று கேட்டேன்.
"நான் அப்பாவிதான்ங்க"
"எப்படி சொல்றீங்க"
"காதலிச்ச பொண்ணையே, கல்யாணமும் பண்ணிகிட்டேனே" .

Post Comment

1 comment:

Anonymous said...

????