கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக கணினியை கட்டி அழுதுகொண்டிருக்கிறேன். (வாழ்க்கைக்காகத்தான்) ஆரம்பத்தில் மென்துறையை தேர்தெடுத்து விட்டு பிறகு பல்துறை உபயோக மென்பொருளை கற்று இப்போது அதுவே முழுதுமாகிவிட்டது. தந்தையின் ஓவிய ஆர்வம் என்னையும் தொற்றி விட்டதால் மிகச் சுலபமான ஓவியம் என் கைகளில் மறைந்து இருந்தது. காலப்போக்கில் அது அனிமேஷன் வரை கொண்டுவந்து விட்டது.
முன்று வருடத்திற்கு மேலான கட்புல தொடர்பியலில் (அதாங்க Visual Communication) விரிவுரையாளர் பணி அனுபவம் என் வாழ்வில் ஒரு சிறப்பான அம்சம். இன்னமும் வருகை விரிவுரையாளராக தொடர்கிறேன். தனியார் கணினி நிறுவனத்தில் முதன்மை கணினி கல்வியாளராக பணியாற்றுகிறேன். நானும் சொந்தமாக தனி ஆவர்த்தனமும் செய்கிறேன். ஒஹெடஸ் (Ohedas Technologies) என்ற யாருமே காப்பி அடிக்காத, அடிக்க பிடிக்காத (!) பெயரில் மல்டிமீடியா உதவிகளை செய்து வருகிறேன். குறிப்பாக வலை, அனிமேஷன் நன்கு செய்து தருகிறேன்.
கட்புல தொடர்பியல், கணினி பல்துறை மென்பொருள் மாணவ, மாணவியருக்கு வரைகலை, அனிமேஷன் வரைகலை, ஒளிப்பட பயிற்சி குறுகிய கால அடிப்படையில் நானும் எனது நண்பரும் வழங்கி வருகிறோம். ஆர்வமுள்ள அனைவரையும் வாரீர், வாரீர் என அழைக்கிறேன்.
இந்த வலை பூ, பல்வேறு முகங்களை கொண்டுள்ளது. எல்லாமே சிறப்பு என்று சொல்ல இயல விட்டாலும் எது சிறப்போ அதிலிருந்து என்னை அறிய வேண்டுகிறேன். நன்றி.
No comments:
Post a Comment