தனி அறிவியலுக்கும், கணித அறிவியலுக்கும் இனி நிரந்தர காலியிடம் வந்துவிடும் போல இருக்கிறதாக ஒரு செய்தி. இளையவர்கள் தொழில் நுட்ப கல்வி தேடி படை எடுக்கிறார்கள். (கணினி நுட்ப கல்வி பருவ காலம் திசை மாறி போவிட்டது).
நான்கு வருடத்திற்கு முன்னே இருந்த நிலை வேறு. பெற்றோரையும், மாணவர்களையும் குறை சொல்ல ஏதும் இல்லை. ஓடுமீன் ஓட உரு மீன் வரும் வரை வாடி இருக்க நான் என்ன கொக்கா? என்ற நிலை. இதுமட்டுமல்ல கலை, இலக்கிய கல்விக்கும் நிறைய காலி இடம். இதிலே வேடிக்கை கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கும் காலி இடம். அரசு கொஞ்சம் கவனிக்க வேண்டியது அவசியம். ஆனால் பள்ளி இறுதி தேர்வில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அமோகம். அதற்கு அரசின் பாராட்டும் கவனத்திற்கு உரியது. இது மேலும் வளர்ச்சி தரும்.
பெற்றோர்க்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் பணம் தரும் வசதி பழகி விட்டது. பணம் என்ன பணம், அது ஓர் பொருட்டும் அல்ல என்று இப்போது மட்டுமல்ல எப்போதும் சொல்ல இயலாது. பொருளிலார்க்கு இவ்வுலகம் .....
மனிதனின் தேவைகள் வானளவு உயர்ந்து விட்டது. மனமும் எல்லை கடந்து விட்டது, மிக அருகிலே இப்போதெல்லாம் அதற்கு கண் பார்வை போய்விட்டது. வேலைக்கு கல்வி வேண்டும். இப்போதெல்லாம் என் சம்பளத்துக்கு மிக அருகிலே என் மாணவரும் வாங்குகிறார். அப்புறம் என்ன?
பாவம் இந்தியா. தன் பிள்ளைகளை தனக்கு ஏற்றபடிக்கு வளர்க்க அறியாமலிருக்கிறது, நீண்ட காலமாக...
No comments:
Post a Comment