இத்தனை நாட்களாக நான் எழுதாமல் இருந்ததிற்கும் உலகெங்கிலும் நிகழ்ந்த கெட்ட சம்பவங்களுக்கும், நல்ல சம்பவங்களுக்கும் நிச்சயமாக எந்த விதமான தொடர்பும் இல்லவே இல்லை.
நிகழ்வு என்பது முறுக்கி விடப்பட்ட ஊஞ்சல் போல, தானகவே இயங்கும். ஆனால் மனிதனாகப்பட்டவன் இயற்கையோடும், மனிதர்களோடும் முரண்பட்டிருப்பதே வாழ்வாகிப்போகிற்று. இயற்கையை போல வாரி வழங்கும் தன்மை மனதிற்கு இருப்பதில்லை. ஆதாயம் பார்த்து சேதாரமாகிவிடுகிறது. மனம் அப்படித்தான். வாழ்வியல், அரசியல், பொருளாதார அம்சமும் ஒரளவிற்கு மனதை பாதிப்பதும் ஒரு காரணமே.
இதனால், இதன் பொருட்டு எனக்கென்ன பயன் என்ற கேள்வியை பற்றிக்கொண்டிருக்கும் வரை ஒரு பயனுமில்லையென்று உங்களுக்குத் தெரியாமலிருக்காது.
பொதுவாக என் வாழ்வு என் சந்ததியினருக்கானது என ஒருவர் சொல்லும்போது இருக்கும் உண்மை, பலர் கூடி சொல்லும்போது தடம் மாறிவிடுகிறது. சில நிகழ்வுகளின் போது அவன், அவள், அது என்னுடைய உடமையல்ல என்று கேள்வி கேட்காமலேயே சொல்லிவிடுகின்றனர்.
ஆனால் இவ்வுலகம் இவர்களை விடவும், வேறு எதோ ஒன்றின் பொருட்டே இயங்கிக்கொண்டிருக்கிறது. எப்படியாயினும், எவ்வகையிலாயினும் யாரோ என்பொருட்டு, எனக்காக உண்ணும் உணவு முதலாக, எல்லாவற்றுக்கும் உ.ழைத்துக்கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்கொரு கைமாறு, என் பணி சிறக்கச்செய்வதே.
No comments:
Post a Comment