Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Sunday, March 15, 2009

with Writer Balakumaran...

கேள்வி என்றதும் இன்னொரு நிகழ்வு ஞாபகம் வந்தது. திரு. எழுத்தாளர் பாலகுமாரனிடம் ஒரு கேள்வி கேட்டேன். எங்களுக்கு அறிமுகமான பாலகுமாரனோடு நிகழ்கால பாலகுமாரனை ஒப்பிட்டு பார்த்ததின் விளைவுதான் அந்த கேள்வி.

அப்போது (?) சிநேகிதன் என்றொரு நாவல். நாயன்மார்களில் சுந்தரரை பற்றியது. இறைவனும், சுந்தரரும் கொண்ட நட்பை விவரிக்கும் கதை அது. எனக்கு என்ன தோன்றியது என்றால் எத்தனை பேர் எந்த நாவலையும், இதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்வார்கள் என்பதுதான். அதனால் தான்...

"உங்கள் சமீபத்திய நாவல் எத்தனை பேரை சென்று அடைந்திருக்கும்? இதை சொல்ல நீர் எதற்கு? பிரபலம் ஒரு காரணமா?" என்று கேட்டேன்.

பாலகுமாரன் பதில் அளித்தார் இப்படி " உங்களை விட எனக்கு இளைய தலைமுறைக்கு விசயங்களை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம், பெரும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. பிரபலம் ஒரு துணை."

ஒரு செய்தியோ, நிகழ்வோ கொண்டு கேள்வி கேட்பதற்கு மிகுந்த பொறுப்பும், பதில் தர அதைவிட மிகுந்த பொறுப்பும் அவசியம்.

ஆனால் அரசியலில் மட்டும் யாருமே கேள்வி கேட்பதே இல்லை. ஆமாம் தேர்தல் நெருங்கி விட்டது.

Post Comment

No comments: