திரைப்படத்திற்கும் எனக்கும் தூரம் அதிகமில்லை. ஒரு பத்து வரிசைக்கு பிறகு என்று கொள்ளலாம். ஆனாலும் என்துறை தொடர்பானதால் (Photography, Guide to Student's Projects, web and multimedia) அடிக்கடி நல்ல திரைப்படங்கள் பார்ப்பது உண்டு. நான் திரைப்பட துறையில் (AD) துணை இயக்குனர்களை நண்பர்களாக பெற்றுள்ளேன். சில குறும்பட தயாரிப்பளர்களையும், விமர்சகர்களையும் நண்பர்களாக பெற்றுள்ளேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்...
"திரைப்படம் எடுத்து முடித்துவிட்டு அப்படியே பெட்டிகள் வைத்து அனுப்பிவிடுவர்களா?, மறுமுறை சோதனை (நமக்குத்தான்) செய்யமாட்டர்களா? "
"இல்லை " என்று பதில் வந்தது.
காரணம் சிலர் (இயக்குனர்கள் )அதிலேயே வாழ்ந்து விடுகிறார்கள். தன் கருத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சரியானதை கொடுத்துள்ளோம், வெற்றி, தோல்வி, தானாகவே அமையும் என்ற நிலை.
முன்று கோடி முதல் போட்டு எடுக்கும் திரைப்படத்தை, முப்பது ரூபாய் ரசிகன் விமர்சனம் (நான் கூடத்தான்) செய்வது ஏற்பு இல்லாததுதான்.
சரி, சென்னையில் நடிகர், இயக்குனர் பார்த்திபனிடம் ஒரு கேள்வி கேட்டேன். ("பச்ச குதிர " ஞாபகம் இருக்கா? நமீதா ஞாபகம் இருக்கா? )
சும்மா பொத்தாம் பொதுவாக கேட்டால் நல்ல பதிலா வரும்? நான் கேட்ட கேள்வி பார்த்திபனுக்கே புரியல... ஆமா. கேள்வி இதுதான்.
"நல்ல திரைப்படம் வேணும்னா, நல்ல கதை வேணும், ஆனால் அதை திரைப்படமா மாற்றும் போது கருத்துமாற்றம் (Compromise ) செய்வீர்களா? செய்துதான் ஆகனுமா?" (குழப்பலே?)
"இன்னொருதடவ கேளுங்க"
"நல்ல திரைப்படம் வேணும்னா, நல்ல கதை வேணும், ஆனால் அதை திரைப்படமா மாற்றும் போது கருத்துமாற்றம் (Compromise ) செய்வீர்களா? செய்துதான் ஆகனுமா?"
"ஆமா, சிலநேரம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு ..." பார்வையாளர்களுக்கு என்னபுரிந்ததோ நான் அறியேனில்லை.
நடிகர் ராஜேஷ் அவர்களோடு உரையாடினோம். நான் வாளா இருந்தேன்.
நடிகர் நோசரை, இல்லை நாசரை கண்டோம். அங்கே ஒரு முட்டாள் தனமான காரியம் செய்தேன். ஒரு சராசரி ரசிகன் போல நாசரின் கையெழுத்து கேட்டேன். நாசரின் முகம் (!) சட்டென மாறியது. என்னை மேலும் கீழும் ஒரு அளப்பார்வை. நான் அங்கேயே கரைந்து போக விரும்பினேன். ஸாரி நாசர் சார்.
சரி எதுக்காக இந்த விஷயம்? எல்லாம் பதிவுக்காகத்தான்.
No comments:
Post a Comment