Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Sunday, March 8, 2009

Prof.S.Ramasamy_Visual Communication

ஒரு நீண்ட முயற்சிக்கு பின் கல்லூரி விரிவுரையாளராக வாய்ப்பு அளித்த என்துறைத் தலைவரை (திரு. பேரா. எஸ்.ராமசாமி _கட்புல தொடர்பியல். பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி, திருச்சிராப்பள்ளி. ) என்றும் மறக்க இயலாது.

அவர் எனக்கு சில வகையில் முன்மாதிரி. சில நேரம் இரண்டுபேரும் ஒரே மாதிரியான யோசனையை பகிர்ந்து கொள்வோம். சில நேரம் பார்வையாலேயே பேசிக் கொள்வோம். எது நம்மிடம் சிறப்போ அதை அப்படியே வாங்கிக்கொள்ளும் ஆற்றல் அவரிடம் உண்டு. அவரின் மிகப்பெரிய அங்கீகாரம் நான் வேறங்கும் கண்டறியாத ஓன்று. தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக தலைவராக பணியில் இருந்தவர், நிறைய அரசு ஆசிரியர் போராட்ட காலங்களில் தன்னை பகிர்ந்துகொண்டவர். அபராமான ஆங்கில அறிவு. அளவான, வலிமையான சொற்கள். பேசும்போது நம் கண்களில் உண்மை தேடும் அவரது கண்கள், தன்னை, தன் துறையை பெயருக்கு ஏற்றவாறு பொறுத்திக்கொள்வதில் இருக்கக் கூடிய வேகம். சிறப்பாக, பொருத்தமான பிரெஞ்சு குருந்தாடி. எல்லாம் ஒருநாள் சுவாசமின்றி போனது. எதிர்பாராமல் நாங்கள் அவரை இழந்துவிட்டோம். ஒரு உதாரண மனிதரை இழந்ததில் அவர் குடும்பத்தினரை போலவே எனக்கும் வருத்தம் உண்டு.

Post Comment

No comments: