Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, March 19, 2009

Windows and Gates

மன்னிக்கவும், விண்டோஸ் மென்பொருள், திரு. பில் கேட்ஸ் அவர்களைப்பற்றி எல்லாம் இந்த பதிவில் சொல்ல வரவில்லை.

ஆரம்ப நாட்களில் எனக்கு வழிகாட்டி யாருமில்லை.

யாரையும் வழிகாட்டியாக வருவிதுக்கொள்ளும் அறிவும் எனக்கப்போது இல்லை. ஓவியமா? நம்மால் முடியாதா?சிறுகதையா? நாவலா? கவிதையா? ஹைகூவா ? இது போன்ற தா, யா, லா, மா, எல்லவற்றிக்குமே சகட்டுமேனிக்கு நம்மால் முடியாதா? என்று ஒரு வேகம். எல்லாமே சில காலம் என்னை பற்றி இருந்தது. காலம் கடந்ததுதான் மிச்சம். ஆனால் இது நல்லதில்லை என்று ஒரு நாளில் நானே அறிந்து கொண்டேன்.

சிதறும் கவனங்களை ஓன்று சேர்த்தால் சிறப்பாக செய்யலாம். என் சன்னல்களை முடிவிட்டு என் கதவை மட்டும் திறந்துவைத்துக்கொண்டேன். அதனால் தான் இப்போது பதிவு கூட எழுத முடிகிறது. என்நண்பர் ஒருமுறை சொன்னார் "சிங்கம் தன் குகையில் இருந்தால்தான் சிறப்பு "

அதேபோல மற்றவர்களை பார்த்து நாம் சூடுபோட்டுக்கொள்வது சரியாக வராது. அனுபவமும், உழைப்பும், ஆர்வமும், செலவுகளும் நாம் கண்களுக்கு தெரிவதே இல்லை, நாம் பார்ப்பதும் இல்லை. உயரமும், வெற்றியும் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. நான் எழுதாமல் நிறுத்தியதற்கு காரணம் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்தான். ஒரு கதையையும், அதன் காரணங்களையும் ஒரு தொடராக வார வாரம் எழுதிவந்தபோது நான் கூனி குறுகி போனேன். காந்தியின் குரங்கு பொம்மைகளில் ஒன்றாகிப்போனேன். அதற்கு பிறகு பேனா எழுத மட்டும்தான்.

இப்போதும் கூட நிறைய இளைஞர்கள், இளைஞிகள் சன்னல் கதவுகளை திறந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றே ஓன்று... கதவுகளை கவனியுங்கள்.

உங்களை ஒருமுகப்படுத்துங்கள்.

Post Comment

1 comment:

Nathanjagk said...

ரைட்டு..! ​பெரிய ஆதர்ஷங்களைக் கண்டு வியப்பதோடு இல்லாமல் அவர்களையும் தாண்டிச் ​செல்ல முயல​வேண்டுமல்லவா?
Success is nothing but checking the limits frequently.
என்னோட பிளாக் பேரு 'காலடி'.