ஆனால் என்னிடமிருந்து விசய, ஞானங்களை பெற்றுக்கொண்டு தேர்ச்சியில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.
பொதுவாக நான் நேர்முகதேர்வுக்குச் சென்றால் அதன் அநுபவம் என் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.
இன்று காலை ஒரு நேர்முகதேர்வு. அநுபவசாலியை பார்த்த உடனே தெரிந்துவிடும் தானே!. சுற்றி வளைக்காமல் நேரடியாக தேர்வு. தலைப்பு இதுதான். ஒரு ஸ்டீல் கம்பெனி விளம்பரம். கதையும், ஸ்டோரி போர்டும் (தமிழில் என்ன?) தயாரிக்கச் சொன்னார்கள்.
இப்பொழுது என் முன்னே இரண்டு விசயங்கள். 1) சரியாக செய்யாவிட்டால் தேர்ச்சி கிடைக்காது. 2) சரியாகச்செய்தாலும் விசயம் திருடப்பட்டுவிடும், தேர்ச்சி கிடைக்காது என்பதுதான் உண்மை நிலை. ஆக, இருந்தாலும் என் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறேன். முடிவு? ஆண்டவனுக்கும் தெரியாது. காத்திருக்கிறேன்.
சரி. என்ன கதை, காட்சி அமைப்பு? நானே அதை வடிவமாக பிறகு தரவிழைகிறேன்.
ஒரு சில நிறுவனங்கள் கண்துடைப்பு நேர்முகதேர்வும் நடத்துவதுண்டு. நான் நேர்முகதேர்வுக்கு வெறும் கையோடுதான் செல்வது வழக்கம். அந்நிலை நமது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். தேர்வு செய்த பிறகு கல்வி சான்றிதழ் உட்பட எல்லாம் காண்பித்தல் நலம். நிறுவனத்தின் செயல்பாடுகள் நன்கு அறிந்த பிறகு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
எக்காரணம் கொண்டும் உண்மைச்சான்றிதழை ஒப்படைத்தல் தேவையில்லை.
தற்போது எல்லா நிறுவனங்களும் முன் பயிற்சி தருவதில்லை. தகுதியும், திறமையுமே முன்னுரிமை. எல்லாம் எனக்குத்தெரியும் என்றில்லாமல், இது, இதை என்னால் சிறப்பாக செய்ய இயலும் என்ற முடிவில் உறுதியாயிருங்கள். உங்கள் அறிமுகத்தை விதவிதமாக, நிறுவனத்திற்கு ஏற்றவாறு திருத்தம் செய்ய தயாராயிருங்கள். ஆன்லைன் விண்ணப்பம் எப்போதும் இருக்கட்டும்.
சில நினைவிற்கு...
1) உள்ளே நுழைந்ததும் கண்டவருக்கெல்லாம் வணக்கம் (போடாதீர்கள்) செய்யாதீர்கள்.
2) ஏசி குளிர்த்தினாலும் நடுங்காமல் வார்த்தையாடுங்கள்.
3) கேள்விக்கு முன்பே பேசாதீர்கள்.
4) யார் மூலம், எதன் மூலம் தெரியும் என்பதைச்சொல்லி, என்ன வேலைக்கு என்பதை தெரிவியுங்கள்.
5) உங்களைப்பற்றி ஒரு சில வார்த்தை, தெளிவாக இருக்கட்டும்.
6) திருட்டு முழி, தேடுதல் வேட்டை விழிகளில் தேவையில்லை.
7) உட்காரச்சொல்லாமல் அமரவேண்டம். நுனி இருக்கையும், அளந்த இருக்கையும் கூடாது.
8) அழகான பெண் கேள்வி கேட்டால் அவர் கண்கள் பார்த்தபடி, அசடு வழியாது பேசுங்கள்.
9) அவசியமின்றி கை பாவனை செய்யாதீர்கள்.
10) கைகளை கட்டியபடியோ, மேஜையை தாங்கியபடியோ பேசாதீர்கள்.
11) காத்திருங்கள், என்று சொல்லி அவர் நகர்ந்தவுடனே, எழுந்து ஆடாதிருங்கள். 12) அலைபேசியை அணைத்திருங்கள்.
13) சந்தேகமிருந்தால் கேளுங்கள். (பொருளாதாரம் தடுக்கிருச்சே, சம்பளம் ஒழுங்கா வருமா? நல்ல மணம், குளிக்கவே மாட்டீங்களா? கூடாது)
14) அவர் இன்னமும் நண்பராகி விடவில்லை. எனவே நெருக்கமான பேச்சுக்கிடமில்லை.
15) நிராகரிக்கப் படலாம், நான் அதற்கெல்லாம் கவலைப்படுபவனல்ல என்றிருங்கள் (மனதிற்குள்)
16) தன்னம்பிக்கையோடு இருங்கள்.
17) அடுத்த வாய்ப்புக்கும் காத்திருங்கள்.
No comments:
Post a Comment