தன் நிலை மறப்பவனையும், மறுப்பவனையும் பிறகு எப்படி அழைக்க முடியும்?. இது போல எத்தனை மனிதர்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
என் இல்லம் செல்லும் வழியில் ஒருவர் தன்கைகளால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டே இருப்பதை பார்க்கிறேன். யாரைபர்த்தாலும் வணக்கம் வைத்துக்கொண்டு எதாவது சில்லறைகளை விரும்பும் ஒருவரை பார்த்திருக்கிறேன். ஆங்கில செய்தி பத்திரிக்கை ஹிந்து படிக்கும், பண்பலையில் செய்தி கேட்கும் ஒரு படித்த ஒருவரை பார்த்திருக்கிறேன். கையில் கொட்டங்குச்சி வைத்துக்கொண்டு யாராவது தேனிர் வாங்கிதருவர்களா என்று விழி நோக்கும் மனிதரை பார்த்திருக்கிறேன்.
பொதுவாக எல்லோரும் தன் நிலையிலேயே இருக்கிறார்கள். யாரும் யாருக்கும் தொந்தரவு தருவது இல்லை. தன் மொழி, தன் உலகம், தன் நட்புலகம் என்று வாழ்ந்துவருகிறார்கள். நிறைய தன்னலமற்ற தொண்டு நிறுவனங்கள் ஒரு நேர உணவாவது எல்லாருக்கும் கிடைக்க வழி செய்து வருகின்றன.
இங்கே நான் சொல்லவந்தது, ஒருவகையில் எல்லோருமே எதோ ஒரு வகையில் மன நோயாளி போலவே வாழ்ந்து வருகின்றனர். எப்போதும் குரல் உயர்த்தி அடுத்தவர்களை விரட்டும் மனிதர், குழாயடி சண்டை போல பழுதாகிப்போன வார்த்தைகளையே பேசுபவர், எந்த பெண் போனாலும் விழி விரிய ஆபாசத்தை வீசுபவர், தனக்கு தானே ஒரு வகையாக திட்டமிட்டுகொண்டே இருப்பவர். தன்னை தானே திட்டிகொள்ளும், அடித்துக்கொள்ளும் மனிதர் போன்ற பலரை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இதில் என்ன உண்மை என்றால் எல்லோருமே ஒரு வகையில் மன நோயாளிபோலத்தான் இருக்கிறோம்.
தனக்கு ஏற்படும், உருவாக்கிக்கொள்ளும் ஒரு பிரச்சனையை தாங்கிக்கொள்ளும் மனிதர் எப்போதும் போல இருக்கிறார். முடியாதவர் பிரச்சனையாக இருக்கிறார்.
இதில் வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால் எதோ தமிழ்நாட்டு மக்களில் இப்படியாக யாருமே இல்லை என்று நினைத்து இந்தியாவின் மாற்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான இத்தகைய மனிதர்களை அவர்களின் உறவினர்கள் (?) விட்டு விட்டு செல்வதை காண முடிகிறது.
அவர்களை பார்கையில் நாம் பரிதாபப்படத்தான் முடிகிறது. சிலவேளை ஒருநேர உணவளிக்கவும் முடிகிறது, பொருளளிக்கவும் முடிகிறது. ஆனால் முழுமையான உதவி?
நேரடியான உதவியில் அரசு இன்னமும் உதவலாம்.
ஆனால் இப்படியான மனிதர்களை அடையாளமும் காண்பதில் தற்போது கொஞ்சம் கவனமாக செயல்படவேண்டும். நானும் என் நண்பரும் நீண்ட பேச்சில் இருந்தபோது அவ்வழியாக ஒருவர் தனக்குதானே பேசிக்கொண்டு, கைகளிலும் ஒரு விசயத்தை வெளிப்படுத்திக்கொண்டு எங்கள் அருகில் எங்களை கடந்தார். அச்சமயம் என் நண்பர் அந்த நபரின் கைகளில் ஒரு ரூபாய் காசு ஒற்றை தர, அவரோ பேச்சை நிறுத்தி எங்களை ஒரு மாதிரி பார்க்க, நாங்களும் கவனிக்க அவரோ ப்ளு டூதில் பேசிக்கொண்டு வந்ததை மீண்டும் சைகைகளில் சொல்லிவிட்டு, திருப்பி என் நண்பரிடமே காசை கொடுத்து விட்டு தலையில் அடித்தபடி கடந்துபோனார் அந்த நபர். நான் கவனித்த போது அவரை ஒரு மன நோயாளி என்றே நினைக்கதோன்றியது. என் நண்பருக்கும் அப்படியே. எனவே கொஞ்சம் கவனமும் தேவை.
No comments:
Post a Comment