Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Tuesday, March 3, 2009

Sadistic_Masochistic

உதவியும் செய்யாமல்,உபத்திரமாகவும் தெரியாமல் காய் நகர்த்தும் ஆசாமிகள் நம்மிடையே நிறைய கலந்திருக்கிறார்கள்.அநேகமாக அரசியல்வாதிகளிடம் மட்டுமே இந்த குணம்(?) என்றால் அவர்கள் கோபித்துக்கொள்வர்.இவர்களை எங்கும்,எப்போதும் காணலாம்.இனம் காண இயலாதபடி நாம் பழக்கப்பட்டுள்ளோம் என்றே தோன்றுகிறது. நாட்டாமையும்,வேலைக்காரனும் போன்ற தொடர்பு.

மிக முக்கிய காரணம் இயலாமையும்,வறுமையும்,அவர்களையே சார்ந்து இருக்கும் நிலையும். ஆனால் சக மனிதனையும் சமமாக நினைக்கும் முழு விடியல் இன்னமும் வந்து சேரவில்லை.காலத்தினால் செய்த உதவி...புரிவதேயில்லை. மீனை ஒரு நேரம் தருவதற்கு பதிலாக மீன் பிடிக்க கற்றுத்தரலாமே...

இதற்கு பதில் இப்படி வந்தது 'எமகாதக பயலுக! அப்புறம் என் கோவணத்துக்குல்ல தூண்டில் போடுவான்கள்'. ஆம், நீங்கள் இத்தனைகாலமாக ஆளுமை செய்தவர்களாயிற்றே. அமைதி கொள்க! கோவணத்துக்குள்ளே இல்லையே.

அன்பர்களே!பிறரை இனம் காண பழகுங்கள்.எதிரியாகப் பழகி பிறகு நட்பு கொள்ள ஆயத்தமாகுங்கள்.

Post Comment

2 comments:

மதுரை சரவணன் said...

meen bitikka karrutharungkal / super . aanal nam aalim varkkam alume!

Sugumarje said...

நன்றி! நண்பரே!!