நான் அவருக்கு சிறு விளக்கமளித்தேன். ' உண்மையில் நீங்கள் மட்டுமே உயிர்ப்போடு இருந்திருக்கிறீர்கள். உயிர்ப்பும், இயக்கமும்தான் இந்த பிரபஞ்சம். மிகப் பெரிய உண்மைகள் நாம் அறிவதில்லை, ஆர்வமும் கொள்வதில்லை. தீதும், நன்றும் பிறர் தர வரா என்பது மூதோர் வாக்கு. வயதும் அநுபவமும் தெள்ளறிவைத் தரவேண்டும். முன்னரக் கரவாது தன் பிழை... உபயோகமேயில்லை'.(வள்ளுவன் மனுசனே இல்லப்பா!_தெய்வம்) என்றபடியே என் அநுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.
இது போன்றதொரு எனது புலம்பலின் போது நான் நண்பரிடம் சொன்னேன் ' எலும்புகளுக்காக பறித்த குழியில் நானே புதைந்து விட்டேன்' என்று.
பொதுவான ஒன்று... தவறு என்பதுதான் பின்னாளில் அநுபவமாகிறது.
தவற்றை அநுபவமாகக்கொள்வோம், அநுபவத்திற்காக தவறு செய்யாமலிருப்போம்.
No comments:
Post a Comment