வலுவான கனவோடு இளைஞர்களும், இளைஞிகளும், கலை வல்லுனர்களாக, அறிவு, அறிவியல் வல்லுனர்களாக, தொழில் நுட்ப வல்லுனர்களாக, மிக முக்கியமாக லாஜிக்கில் உலகின் முன்மாதிரியாக வேலை எனும் புதிய உலகில் நுழைகின்றனர். உள்ளே வரும் போதே டிமாண்ட் தருகிறார்கள். (இல்லையென்றால் போ, வேற ஆளைப்பாரு) ஒரு சொல் பொறுக்கக் கூட மன உறுதியின்றி, இதுக்கு இது போதும் என்றபடி பரபரப்பாக உலாவருகின்றனர்.
கஜினி என்பதின் அர்த்தம் சூர்யாவோ, அமீர் கானோ அல்ல. விடாமுயற்சி என்பதுதான். கையிற் கிடைத்த ஒரு காகிதத்தில் பேட்டி, அதில் 'குழந்தைகள் தெருவில் விளையாடி காயம் கண்டு நின்றால் பின்வரும் வாழ்விற்கு தன்னம்பிக்கை வரும் தானே' என்றது.
கொஞ்சம் விளையாடிப் பாருங்களேன், ரத்தம் சொட்ட!
No comments:
Post a Comment