Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label numbers. Show all posts
Showing posts with label numbers. Show all posts

Wednesday, September 1, 2010

சுகுமார்ஜி பக்கங்கள்_ At the EndPoit

கிட்டதட்ட நூறாவது பதிவுகளுக்கான விளிம்பில் இருக்கிறேன்... இது தொண்ணூற்றி எட்டு. உங்களுக்குத் தெரியுமா... 98 ஐ தொண்ணூற்றி எட்டு என்று சொல்லக்கூடாது... எண் 9 க்கான சம்மான சொற்கள் யாரோ ஒரு ____மாற்றிவிட 9 அல்லது ஒன்பு என்ற சொல்லே இல்லாமற் போய்விட்டது...

கவனிக்க...

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பு, பத்து...

பத்து அடுத்ததாக வரும்பொழுது முன்பாகவே எப்படி ஒன்பு + பத்து = ஒன்பது வரும்?...

அப்படியானால் தொண்ணூற்றி எட்டு இல்லை, ஒன்பத்து எட்டு...

அய்யோ. அடிக்கவராதீங்கப்பா! எனக்கென்ன போங்க :(

இனிமேலாக இந்த வலையில் எழுத்துக்களையும், கட்டுரைகளையும் கொஞ்சநாள் காண இயலாது...  நான் இப்பொழுது வேலை என்கிற ராட்ஷசனிடம் மாட்டிக்கொண்டேன்... வேறு ஒன்றுமில்லை... மணலை எண்ணுகிற வேலை போல ஒய்வில்லாத வேலை...

என் வழி தொடரும் நண்பர்கள் வாழ்க வளமுடன். அவர்கள் நீள் ஆயுள், நிறைசெல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று வாழ குருவின் ஆசியோடு நான் வாழ்த்தி மகிழ்கிறேன்...

இனி இந்த வலையில் என் தொழில்துறைச்சார்ந்த செய்திகள் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும்.

ஆர்வமுள்ளோர் தொடரலாம், இடித்துரைக்கலாம், கேள்விக்கணைகள் தொடுக்கலாம்...

குறிப்பு; கவிதை07 என்ற வலைப்பூவில் சோதிடவியல் குறித்த என் கட்டுரைகள் 'சுகுமார்ஜி பக்கங்கள்' என்ற பெயரில் வெளிவருகின்றன. வாரத்திற்கு மூன்று பதிவுகள் திட்டமிடப்பட்டுள்ளது...

இணைப்பு ; கவிதை07

.

Post Comment