Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label iPhone 4. Show all posts
Showing posts with label iPhone 4. Show all posts

Saturday, June 4, 2011

Retina Display in iPhone 4

Retina Display in iPhone 4



"ரெடீனா டிஸ்பிளே" என்பது ஒரு தொழில்நுட்பம். ஏற்கனவே இருக்கும் ஒன்றிலிருந்து சற்று வித்தியாசப்படுத்தி இதை நாங்கதான் கண்டுபிடிச்சோம்ங்கற மாதிரி செய்வது கார்பரோட் கம்பெனிகளின் வேலை...

அப்படியான ஒன்றுதான் “ ரெடீனா டிஸ்பிளே” அதாவது வழக்கமாக நம் கண்கள் பார்க்கும் காட்சியை வகைப்படுத்தாது அப்படியே வாங்கிக்கொள்ளும். கணிணியை பொறுத்தவரை எல்லாமே பிக்சல் தான். அதாவது ஒரு இஞ்ச் அளவிலான சதுரத்தில் எத்தனை புள்ளிகள் என்பதுதான். அந்த புள்ளிகளின் நெருக்கத்தைக் கொண்டே நாம் காணும் காட்சியின் தெளிவு நமக்கு அறியவரும். இது கணிணி சார்ந்த காட்சிகளுக்கு மட்டுமே. இன்னமும் பிலிம் கேமராவுக்கு ஈடு இணைக்கு இந்த டிஜிடல் புரட்சி வரவே இல்லை...ஆனால் அதற்கு மேலாக வர துடித்துக்கொண்டிருக்கிறது.

பிலிம் வெர்சஸ் டிஜிடல்
சிறியது + தெளிவானது + பெரிதுபடுத்துனாலும் படத்தின் தரம் குறையாது
பெரியது + பெரிதாக இருப்பதால் தெளிவு + மேலும் பெரிதுபடுத்த இயலாது

எனவே நீங்கள் உங்கள் டிஜிடல் கேமராவில் எந்த அளவிற்கு பெரிதாக எடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு படமும் தெளிவாக இருக்கும். அதனால் தான் மெகா பிக்சல் அளவு போய்க்கொண்டே இருக்கிறது. இப்பொழுது சராசரி கேமராவிலேயே 14.0 மெகா பிக்சலுக்கு படம் பதிய முடிகிறது. அதாவது சுமாராக 36 இன்ஞ் அல்லது 3 அடி அளவிற்கு படம் வருவதால், தாத்தாவையோ, அம்மாவையோ படம் பிடித்து வினைல் பிரிண்ட் போட்டு வீட்டில் மாட்டிவிடலாம். என்ன திருஷ்டிக்கா? அடப்பாவிகளா?

கம் பேக் டு தி iPhone 4 Retina Display :)

iPhone 2  போட்டாச்சி,
iPhone 3 போட்டாச்சி,
iPhone 3G  போட்டாச்சி,
iPhone 4  போட ஏதாவது புதுசா பண்ணனுமே? ஓகே, டிஸ்பிளே சிறப்ப இருந்தா கேமராவை, சினிமா பாடலை, சினிமாவை பார்கிறதுக்காகவே iPhone 4 வாங்கிறமாட்டாய்ங்க !? அப்படின்னு ஆப்பிள் நினைச்சு “ரெடீனா டிஸ்பிளே” ன்னு கூவ ஆரம்பிச்சுட்டாங்க.


ஒரு iPhone ல் டிஸ்பிளே ஸ்கிரீன் அளவு பார்த்தா 320க்கு480 தான், அதாவது குறுக்கும் நெடுக்குமா இருக்கக்கூடிய பிக்சல் அளவு. சாதாரணமாக நாம் வலைதளங்கள் வழியாக காணும் படங்கள் ஒரு இன்ஞ் அளவுக்கு சுமார் 72 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கிறது. அதனால் தான் யாரும் அவற்றை சுட்டு தங்கள் வேலைகளுக்கு உபயோகப்படுத்த இயலாது. பெரிசாக்கினால் பல்லைக்காட்டும்... அதாவது பிக்சல் என்ற பல்லை...

ஆனால், iPhone ஒரு டிவைஸ், தனிப்பட்ட ஒரு கருவி. அதனால் 72 என்ற சதுரப்புள்ளிகளுக்கு பதிலாக 126 சதுரப்புள்ளிகள். அதாவது கிட்டதட்ட 26 ஆயிரம் புள்ளிகள்கள் இணைந்து காட்சியை உருவாக்குகின்றன. எனவே வலைதளங்கள் வழியாக காணும் படங்களை விட தெளிவான காட்சியை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் iPhone 3G வரை மட்டும் நின்றுவிட்டது. இதுவரை வாங்கதவர்கள் பாக்கியசாலிகள்.



இந்த தொழில்நுட்ப புரட்சி மனிதர்களிடையே புது மன அழுத்த நோயை பரப்பிவருவதாக அறிகிறேன்... இல்லாதவனுக்கு இல்லையே என்ற கவலை. இருப்பவனுக்கோ இதைவிட அது நல்லாயிருக்கேன்னு கவலை...

இந்த காட்சி பரவசத்தை மேலும் அதிகமாக்க  Phone 4 க்கு ஒரு புதிய தொழில் நுட்பம் போல ரெடீனா டிஸ்பிளே அறிமுகப்படுத்தி விட்டது ஆப்பிள் நிறுவனம். டிஜிடல் படங்கள் மட்டுமில்லாது, பாடல் காட்சிகள், திரைப்படங்கள் முதற்கொண்டு ஸ்கிரீனில் பார்க்கிற அனைத்துமே நான்கு மடங்கு துல்லியமாக தெரியும் பொழுது அதை வாங்காமலிருக்க முடியுமா?



Phone 4 ல் 26 ஆயிரம் புள்ளிகளுக்குப்பதிலாக 106 ஆயிரம் புள்ளிகள் இணைந்து காட்சியை தருகின்றன. ஸ்கிரீன் சைஸ் பார்த்தோமானால் 640க்கு 960 என்பதாகவும் 326 சதுரப்புள்ளிகள் கொண்டதாகவும் இந்த "ரெடீனா டிஸ்பிளே" இருக்கிறது. இது சாதாரணமாக கண்களுக்கு தெரியக்கூடிய பல்லை, அதாங்க பிக்சலை தவிர்க்கிறது. எனவே துல்லியம் சாத்தியமாகிறது.



இந்த படங்கள் ஓரளவு தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்.

மேலும் விபரங்கள் அறிய...
www.apple.com


--------

Hire Sugumarje, Caricaturist for Live Caricature on Your Event and Parties. Make unforgettable movement for Your Parents, Brothers, Sisters, Lovers, Relatives, Friends, kids and Children, Club Members, Official Members and Your well wishers. Coffee Mug Caricature, Gift Caricature Avail... 

Call to: +91 9442783450 / mailto: sugumarje@gmail.com


Post Comment

Friday, June 3, 2011

iPhone 4_ Tamil Review by Sugumarje

Iphone 4_in Tamil Review



ஆப்பிள் நிறுவனம் புதிய வெளியீடாக ஐஃபோன் 4 வெளியிட்டு இருப்பது நமக்குத்தெரியும். அதில் சில புதிய நுட்பங்கள் பற்றி இங்கே...

முந்தைய வெளியீடான ஐஃபோன் 3G யை விட மிக சிறப்பான இடத்தை ஐஃபோன் 4 பெற்றுவிட்டது. ஆப்பிள் நிறுவனமே இதை ஒப்புக்கொண்டது.

ஐஃபோன் 3G இப்பொழுது சந்தையில் கிடைக்கும் விலை விபரம்... (மே மாத நிலவரம்)

ஐஃபோன் 3G S

Apple iPhone 3GS 16GB Rs 29,135 /-
Apple iPhone 3GS 32GB Rs 34,904 /-

புதிய ஐஃபோன் 4


Apple iPhone 4 16GB Rs 34,500 /-
Apple iPhone 4 32GB Rs 40,900 /-

இதை கொஞ்சம் சிரமமில்லமல் வாங்கியே ஆகவேண்டும் என்பவர்களுக்காக ஏர்செல்லும், ஏர்டெல்லும் மல்லுகட்டு, நம்ம தலையில் கட்ட ரெடி. அதிலும் ஏர்செல் மணிபேக், கேஷ் பேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களின் வழமையான அழைப்பு திட்டங்களோடு iPhone 4 வாங்கிக் கொள்ளலாம்.





iPhone 4 சிறப்பம்சங்கள்

வீடியோ அழைப்பு, பகிர்தல்
ரெடீனா டிஸ்பிளே எனும் சிறப்பு திரை (960X640 px)
மிக துல்லியமான வீடியோ பதிவு
5 மெகா பிக்சல் காமிரா
இரைசலை விலக்கும் இரட்டை ஒலிவாங்கி,
புதிய ஆப்பிள் A4 சிப்
ஒளிப்பட தகவல் பரிமாற்றம்
குரல்தேர்வு அமைத்தல்
வேகமான செயல் திறன்.



iPhone 4 னோடு கிடைக்கும் முக்கிய உபயோக தொகுப்புக்கள்...

Folder and apps
உபயோக மென்பொருள், கோப்பு பிறவற்றை பாதுக்காக்க தனியான அமைப்பு

Game Center
விளையாட்டு தொகுப்புக்கள்

Phone
வழக்கமான நுன்திறன் கைபேசி

Mail
மின்னஞ்சல்

Safari
ஆப்பிள் சஃப்பாரி உலவி

iPod
இசை வாங்க, கேட்க

Home Screen
மிகவிரைவாக தெரிவு செய்ய முதன்மை இல்லம் அமைப்பு.

Photos
ஒளிப்படங்களை சேமிக்க, காண்க

Air Print
கம்பியில்லா, விரைவான அச்சிட தொகுப்பு

Air Play
கம்பியில்லா, இசை தேர்வு, விளையாட்டு, தொலைகாட்சி,

Voice Control
குரல்வழியாகவே நண்பரை அழைக்கலாம்...
“வாடா நாய்” என்றே என் நண்பர் இன்னொரு நண்பரை அழைக்க... “ எப்படிடா இருக்கே என்று அவர் பதில் அளிக்கிறார் :)
பாடலை, உங்கள் குரலில் நீங்களே கேட்க (சகிக்காவிட்டாலும்)

Messages
குறுந்தகவல்

Maps + Compass
GPRS உலக, உள்ளூர் வரைபடம்.( உங்கள் மனைவி உங்களை கண்டு பிடிக்காதிருக்கட்டும்)

Keyboard
உங்களுக்கான சில தேவையான தொகுப்புகள்
QWERTY தட்டச்சு

Search
தேடு பொறி, எங்கே iPhone ஐ வச்சேனு தேடமுடியாது :(

Find My iPhone
காணமற்போனால் தேடலாம் iPhone மட்டும்

App Store - Features
இதற்கு மேலும் சிறப்பான அம்சங்களை உங்கள் iPhoneல் இணைத்துக்கொள்ளும் வசதி...

iMovie
ஆப்பிள் iMovie ல் திரைப்படங்கள், பாரல் காட்சி காணலாம் (ஜஸ்ட் 200 இந்திய ரூபாய் செலவழிக்கனும்)

ibooks
iPhone வழியாகவே நூல் படிக்க வசதி.

Pages
நீங்களே புகைப்படங்களோடு பக்கங்கள் தயாரிக்கலாம்

Numbers
உங்கள் அலுவலகத்திற்கு தேவையான (?) கட்டுரைகள் தயாரிக்கலாம்
அனிமேசன் போன்ற தொகுப்புகள் நீங்களே உருவாக்கி மகிழலாம்.


மேலும் விபரங்கள் தேவையானால்
http://www.apple.com/iphone/specs.html

நன்றி
ஆப்பிள் வலைத்தளம்

-------

அப்பாடா... டெக்னோ தமிழ் கிழியுது ( தவறிருந்தால் மன்னிக்கவும்)

------

அதென்ன ரெடீனா டிஸ்பிளே எனும் சிறப்பு திரை?

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

------
Hire Sugumarje, Caricaturist for Live Caricature on Your Event and Parties. Make unforgettable movement for Your Parents, Brothers, Sisters, Lovers, Relatives, Friends, kids and Children, Club Members, Official Members and Your well wishers. Coffee Mug Caricature, Gift Caricature Avail... 

Call to: +91 9442783450 / mailto: sugumarje@gmail.com

Post Comment