Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label course. Show all posts
Showing posts with label course. Show all posts

Sunday, August 28, 2011

Monday, July 12, 2010

போட்டோஷாப் - வாருங்கள் கற்கலாம் - Photoshop Ebook -- Free Link

கடந்த பதிவுக்குப்பின் போட்டோஷாப் அநுபவ அறிவுமிக்கோர், ஆர்வமிக்கோர் பலர் மின்னஞ்சல் வழி என்னை தொடர்புகொண்டு, முழுமையான பதிவாக போட்டோஷாப் மென்பொருள் உபயோக வழிமுறைகளைத்தர வேண்டுகோளிட்டு இருந்தனர்...

சரியாகச்சொன்னால் முப்பத்திரண்டு (32) ஆர்வலர்கள்... இதில் ஆறு நபர்கள் மாணவராக சேரவும் ஆர்வமாயிருக்கின்றனர்... ('எவ்வளவு கட்டணம்னு சொல்லுங்க சார்...') இரண்டு நபர்களுக்கு மேலே கைதூக்கினாலே விசயம் பலமானதாகிவிடும்... ஆக நானும் தயார்தான்...

நிற்க...!?

விரிவுரையாளர் வகுப்பில் நுழைகிறார்... மாணவர் வரிசைக்கு முன்னே நின்று...

'ம்மம்... நேற்று என்ன பார்த்தோம்...?'

மாணவரின் பதிலுக்குப்பின்... 'சரி, அடுத்த பகுதியை பார்க்கலாம்' என்ற ரீதியில் கணிணி மென்பொருள் பாடங்களை தந்தால் கண்டிப்பாக உங்களுக்குப்புரியாது... கொஞ்சம் மெனக்கெடல் (எனக்கு) வேண்டியிருக்கிறது. சரியாகத்தர வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறேன்...

நான் தயாராயிருக்கிறேன்... நீங்கள்...?

ஆனால் இங்கே, மரத்தடி வேலைக்கும்... மாளிகை வேலைக்கும் வித்தியாசம் தெரியாதிருப்பவர்கள் நிறைய நபர்களிருக்கிறார்கள்... பேதம் பார்க்காது தந்தாலும், ஏணியின் வழியேறிவிட்டு எட்டி உதைக்கும் மாற்றுத்திறனாளர்கள் (உடல் ஊனமுற்றோரென சொல்லக்கூடாதே!)... ஏராளம்... ஏராளம்...

இது எனக்குமட்டுமல்ல... வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், இத்தகைய மாற்றுத்திறனாளர்கள் உங்களை தங்கள் காரியத்திற்காக மட்டும் சந்தித்து, உங்களுக்கோர் அநுபவ பாடத்தை தந்திருப்பார்கள்... உண்மைதானே?...

ஆனால் இவர்களிடம் பொதுவான ஒரு அம்சத்தைக்காண இயலும்... அது 'வாயச்சொல்லில் வீர்ரடி' தான்...

என்னைப்பொறுத்தவரை பசியுள்ளவருக்கே விருந்து... புளி ஏப்பக்காரனுக்கல்ல... அதேபோலவே, பக்கத்து இலைக்கு பாயாசம் நான் ஆற்றுகிறேன்... உனக்கு வேண்டுமென்றால் நீயே கேள்... என் பயிற்றுவித்தல் இங்ஙனமே...

நான் என்பாடங்களை வாரம் இரண்டாக தர தயாரக உள்ளேன்... வலைப்பதிவின் வழியாக அல்ல...

உங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட அறிவிப்பு என்னை வந்தடைந்த நிமிடத்தில் உங்களுக்கான பாடம் மின்னஞ்சல் வழியாக கிடைக்கும்.

அந்த வாரத்தில் ஒரு நாளில் அவ்வாரத்திற்கான பாடங்கள் குறித்த கலந்துரையாடல் நடத்தப்படும்... கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களுக்கு, கலந்துரையாடலின் சாரம் மின்னஞ்சலில் தரப்படும்.

அதிகபட்சமாக நூறு (100) பாடங்களும்... குறைந்தபட்சமாக ஐம்பது (50) பாடங்களும்... கிடைக்கும்... ஆர்வலர்களின் வேண்டுகோளின் தேவையான பாடங்களும் வழங்கப்படும்... இதன் மூலமாக மற்றொருவரின் ஆர்வத்தில் நீங்களும் புதிய செய்திகளை அறியலாம்...

கண்டிப்பாக கட்டணம் உண்டு...

இரண்டு பாடங்களுக்கான கட்டணம் (ஒரு வாரத்திற்க்கான பாடம்)... இந்திய ரூபாய்... 100.00 மட்டுமே. (Rs. 100.00 INR)

எத்தனைப்பாடங்கள் வேண்டுமோ... அத்தனை பாடங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தலாம்... முழுமையான பாடங்களுக்கான கட்டணம் செலுத்தவேண்டியதில்லை.
அந்தந்த வாரங்களில் மட்டுமே செலுத்தினால் போதுமானது...
சேர்க்கைக்கான முடிவு உங்களுடையது... கட்டாயப்படுத்துதல் இல்லை.
இடைப்பட்ட காலத்தில் வலைவழி அல்லது நேரிடையான கலந்துரையாடல் வழிவகை செய்யப்படலாம்.
கட்டணம் செலுத்தப்பட்ட காலத்திற்கு மட்டுமே பாடங்கள் கிடைக்கும்.
செலுத்தப்பட்ட கட்டணம் எவ்வகையிலும் திரும்ப பெறத்தக்கதல்ல.

செலுத்தப்பட்ட கட்டணம் வழியே பாடங்கள் தர சுகுமார்ஜியான நான் உறுதியளிக்கிறேன்.

இலவசமாகத்தர எனக்கும் ஆசைதான்... ஆனால் எனக்கு பிழைப்பு இருக்கிறது... உங்களிடமிருந்து மீண்டும் ஓட்டு வாங்கி ஆட்சியிலமர ஆசையில்லை... ஆனால் இந்த நுட்ப அநுபவத்தினாலேதான் என் வயிற்றுப்பாடு நடந்து கொண்டிருக்கிற காரணத்தால் இத்தகைய முழுமையான விசயங்களை முழுமையான பாடங்களை இலவசமாகத்தர இயலாதிருக்கிறேன்...

இப்போதைய பாடத்திற்கான மென்பொருள் - அடோபி போட்டோஷாப் CS4
தலைப்பு - ஒளிப்படவேலைகளும், வடிவமைப்புக்களும்...
பாடங்களின் எண்ணிக்கை - நூறு (100) கூடுதலாக 10 (கட்டமில்லா பாடம், பயிற்சியின் இறுதியில்) இணைக்கப்படலாம்...

ஒரு பாடம், உங்கள் பார்வைக்கு... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்...

இணையவழி இங்கே!... இலவச கோப்பு இறக்கம்... உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்க!

First Choice:
AlongwithSugumarje 

Second Choice:
AlongwithSugumarje


இந்த யுவதிதான் மாதிரி பாடத்திலும் இருக்கிறாள்...


வாருங்கள் இணைந்து கற்றுத்தேர இருகரமேற்றி அழைக்கிறேன்... என்கைகளை பற்றிக்கொள்க...

.

Post Comment

Wednesday, June 30, 2010

போட்டோகிராஃபியும், போட்டோஷாபும் அல்லது ஜாக்கிசேகர் - சுகுமார்ஜி - Photography, Photoshop or Jackiesekar - Sugumarje

நேற்று பதிவர் ஜாக்கிசேகர் பதிவை கண்டேன். ஒரு நல்ல நிழற்படக்காரரை அவர் பதிந்த படமே காட்டிக்கொடுக்கும். நான் ஜாக்கிசேகரை பாராட்டினேன். கை தொலைபேசியிலேயே மெகா பிக்சல் கேமரா புழங்கினாலும் நானும் கேமரா வைத்திருக்கேன் பேர்வழி உதாரெல்லாம் வேலைக்காகாது... கண்களால் காணும் காட்சி வேறுவகை... கேமரா வழிகாணும் காட்சி வேறுவகை... அதோடு அக்காட்சியை பதிவு செய்யும் முறை மிக முக்கியம்.

ஒளிப்படம்
= ஒளியை பதிவுசெய்தல் அல்லது நிழற்படம் = நிழலை பதிவுசெய்தல் என்றெல்லாம் சொன்னாலும்... CAMERA என்றால் இருட்டறையில் நிழலை சிறைப்படுத்துதல் என்பதே சரியானதாகும். எனவே நிழற்படம் என்பதுதான் சரி...

நிழல் வேண்டுமென்றால் ஒளி வேண்டும்... ஒளியில்லா இடத்தில் CAMERA வுக்கு வேலையில்லை. இன்னமும் விளக்கமாக... இருளில் நீங்களே தடுமாறும் போது பாவம் CAMERA எப்படிங்க?

ஏறக்குறைய கண்களும், CAMERA வும் ஒரே அடிப்படை...

ஆனால் நிழற்படம் சிறப்பாக பதிக்கவேண்டுமென்றால் தேவையான வெளிச்சம் வேண்டும். கவனிக்க ஒளி அல்ல... சூரியனிலிருந்து நமக்கு வருவது ஒளி... அவ்வொளி பொருட்களில் பட்டுத்தெறிக்கையில் வருவது வெளிச்சம்.

தலை சுற்ற ஆரம்பித்து விட்டதா என்ன?

கல்லூரியில் கட்புல தகவல் தொடர்பியலில் (Visual Communication) எனக்கு PHOTOGRAPHY (இரண்டாமாண்டு பருவத்தில்) பாடமுண்டு. எனது மாணவர்களில் சிலர் சென்னையில் தொலைக்காட்சிக்கூட ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகின்றனர்... அவர்கள் இன்னமும் தொடர்பிலிருப்பதுவே... நான் அவர்களுக்கு சிறப்பாக கற்றுத்தந்ததின் சாட்சி... பொதுவாக நான் பாடவேளைகளில் அவ்விசயம் குறித்த கலந்துரையாடலாகவே பாடத்தை சொல்லுவதுண்டு.

என்னிடம் NIKON FM10 கேமரா உள்ளது. இன்னமும் சந்தையில் நல்ல விலைக்கு மட்டுமே கிடைக்கும் வகை இது... அற்புத நிகழ்வைக்கூட... ஒரு மொட்டு மலராவதையே 60 நொடிகளில் காணப்பொறுக்காத அவசர மனிதர்கள் மத்தியில் NIKON FM10 போன்ற FILM CAMERA பற்றியெல்லாம் விளக்கமளித்தால் அவர்களால் தாங்க முடியாது. ஆனால் இந்த அவசர உலகில் தமிழடிக்க தெரிந்தவரெல்லாம் பதிவர் போல CAMERA வைத்திருப்பவரெல்லாம் நிழற்படக்காரராகி விட்டனர்.

ஒரு நிழற்படக்காரர் இரண்டாம் வாய்ப்பை தேடாதிருந்தால் மட்டுமே, அவரை நல்ல நிழற்படக்காரர் என்று நான் ஏற்றுக்கொள்வேன். என்னிடம் நிறைய நிழற்படங்கள் தெரிவுக்கு வரும்... அது பற்றிய விளக்கமளித்தால்
நிழற்படக்காரர் (!?) தலை தொங்கிப்போய்விடும்... கூடவே... அவர்கள் மனதில் இப்படியான குரலை என்னால் கேட்க முடிகிறது... இவனுக்குத்தான் ரொம்ப தெரியும்னு மமதைல இருக்காண்டா!, இவரென்ன வானத்தில இருந்து கத்துகிட்டே வந்தாராமா!...

அடப்பாவிகளா!

எனக்கு இதெல்லாம் யாரும் சொல்லித்தரலைடா! நீங்க அப்படியான விசயங்களை தெரிந்து கொண்டால் என்னைவிடவும் சிறப்பா செயல்படலாமில்லையா...

இதனால் என் ஒரே வார்த்தை... Superpa!...ரொம்ப அருமையான ஷாட்... (இவ்வளோதான்)

PHOTOGRAPHY கற்க ஆவலிருப்பின்  என்னை தொடர்பு கொள்ளலாம்... எனது கை.தொ.எண். 9442783450 (கட்டணம் உண்டு)

Three Types of Lessons... 1) Film Camera 2) Digital Camera 3) Editing the Images
Weekend Classes Available

சரி... பதிவர் ஜாக்கிசேகரின் நிழற்படங்கள் அருமையான சட்ட அமைப்பை கொண்டிருந்தது. (அதான்க... FRAME) அப்பதிவில், எடுத்த படங்களை இன்னமும் சிறப்பிக்கலாமென்றால் PHOTOSHOP மென்பொருள் தனக்குத்தெரியாது... ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவது போல பாடம் நடத்த யாராவது இருந்தால் கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்க... நான் உடனே பின்னூட்டமிட்டேன்....

கற்றுத்தர நான் ரெடி... நீங்க ரெடியா? என்று....

அடுத்த பத்து நிமிடங்களில் எனக்கு மின்னஞ்சல்.... 'உங்கள் கை. தொ. எண் தாருங்கள் நான் பேசுகிறேன் என்று...'

அதற்குள் நான் பதிவர் ஜாக்கிசேகரின் நிழற்படங்களில் சிலவற்றை எடுத்து PHOTOSHOP மென்பொருள் மூலமாக மேலும் செம்மைபடுத்தி அவருக்கே அனுப்பினேன்...

முதல் மூன்று குறைகள்... இதெல்லாம் இயல்பானதாகும். பதிவர் ஜாக்கிசேகரின் தவறல்ல...
1) இயல்பான வண்ணமில்லாமை
2) ஃபிளாஷ் உபயோகிக்காததால் குறை ஒளி வண்ணபாதிப்பு
3) மிகச்சரியான படத்திற்கான ஒளி, வெளிச்சமில்லாமை...

இக்குறைகள் நிவர்த்தி செய்து, இதன்பிறகு அறியப்படாத தொழில் நுணுக்கங்கள் தரப்பட்டன. (Professional Touch-ups)
முந்தைய நிலையிலும்... நிவர்த்திக்கப்பட்ட படமும்...




(நிழற்படங்களுக்கு நன்றி! to பதிவர் ஜாக்கிசேகர்)

மாலை ஐந்து மணிக்கு பதிவர் ஜாக்கிசேகரிடமிருந்து அழைப்பு... பதிவுகள் மூலமாகவே அறிமுகமான பிறகு யாரென்ற கேள்வியென்ன... ஏற்கனவே நண்பர்கள் போலவே பேசிக்கொண்டோம்...

PHOTOSHOP க்காகவே பதிவாற்றிவரும் பதிவர் வேலன் பற்றியும் பகிர்ந்து கொண்டோம்... பதிவர் வேலன் அவர்கள் தொழில்ரீதியான வகையில் சற்றே தடம் மாறியிருப்பதாக (பதிவர் வேலன் - என்னை மன்னிப்பராக!) நான் கருதினேன்... ஆனால் நானே கூட செய்ய விழையாத PHOTOSHOP மென்பொருள் பற்றி அக்கறையோடு செய்முறை பாடங்கள் தரும் பதிவர் வேலன் அவர்களின் பணி மிகுந்த பாராட்டுக்கும், வணக்கத்துக்குமுரியது. இந்த உலகில், இப்போதெல்லாம் அட்வைஸ் கூட இலவசமாக கிடைப்பதில்லை... பாடங்கள் அதுவும், PHOTOSHOP மென்பொருள் பாடங்கள் தரப்படுவது அபூர்வம். பதிவர் வேலன் அவர்கள் வாழ்க வளமுடன்...

இறுதியில்... பதிவர் ஜாக்கிசேகருக்கு மின்னஞ்சல் பாடங்கள் தர ஒப்புதல் அளித்துள்ளேன்... நான் சென்னைவாசி (CHENNAI) என்று நினைத்தாக சொன்னார்... நான் திருச்சிராப்பள்ளிக்காரனப்பா! (TRICHY).

அப்பறம்? வேறென்ன, வழக்கம்போல...

PHOTOSHOP - PHOTO RETOUCH SOFTWARE கற்க ஆவலிருப்பின்  என்னை தொடர்பு கொள்ளலாம்... என் கை.தொ.எண். 9442783450 (கட்டணம் உண்டு - இல்லாமலா?!)

Six Types of Lessons... 1) Basic Tools 2) Read the Images 3) Best Exposure 4) Retouch - Editing 5) Adding Effects 6) Album Designs
Weekend Classes Available

திருச்சியை சார்ந்தவர்களுக்கு நேரடி பாடங்கள் கிடைக்கும்...

அப்பாடா... மூச்சு வாங்கிக்கிறேன்...

.

Post Comment

Monday, May 10, 2010

மருதாணி ஓவியங்கள் - Henna Arts - வாருங்கள் கற்றுத்தேறலாம்

அன்னையர் தினத்தில், மங்கையருக்காக...

மருதாணி ஓவியங்கள்...

மூலம் இங்கே காணக்கிடைக்கிறது... 4to40.com...

இது போன்று நீங்களும், புதிது, புதிதாக வரைகலை தீட்ட விரும்புகிறீர்களா? அடிப்படை ஓவியத்திறமை வேண்டியதில்லை...

CorelDraw, Adobe Illustrator வரைகலை கணிணி மென்பொருள் மூலமாக யாவரும் கற்றுத்தெளியலாம்... முப்பதே நாளில் (30 Days) அல்லது அறுபது மணி (60 Hours) நேர பாடங்கள் உங்களை முழுமையான படைப்பாளியாக்கும்.

மணப்பெண் அலங்காரம் முதற்க்கொண்டு எல்லா வகையான விழாக்காலங்களிலும் மருதாணி ஓவியங்கள் சிறப்புச்செய்யும்...

மூன்று வகையான பாடங்கள்...

1) கணிணி இல்லா ஓவிய முறை
2) வரைகலை கணிணி மென்பொருள் அறிமுகம். (CorelDraw, Adobe Illustrator)
3) மருதாணி ஓவியங்கள் படைப்பாக்க வழிமுறைகள்

நேரடியான, தனித்தனி நபர்களுக்கு பாடங்களில் கவனம் செலுத்தப்படும்.

அதிக நபர்கள் தேர்வாகியிருந்தால்... கால, நேரம் மாற்றியமைக்கப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது... ஓரே ஒரு தடவை... ஒரு மூலதனம்... விதைப்பு... இந்திய ரூபாய்... ஆறாயிரம் மட்டும்... பிறகு எல்லாமே உங்களுக்கு அறுவடைநாள் தான்.

Online - வலைவழி பாடம் வேண்டுவோருக்கு தினம் ஒரு பாடம், ஒளி, ஒலி காட்சி தொகுப்பு, மின்னஞ்சலில் கிடைக்கும்... ஆனால் இத்தகைய மாணவ, மாணவியர் கூடுதலாக... இந்திய ரூபாய்... ஆறாயிரம் மற்றும் கூடுதல் இரண்டாயிரம் (ஒளி, ஒலி காட்சி தொகுப்புக்காக) செலுத்த வேண்டும்.

தனியாக ஒளி, ஒலி காட்சி தொகுப்பு வேண்டுவோர் தனியே தொடர்பு கொள்க.

முன்பதிவுக்கு விரைந்து வரலாம்... இந்திய ரூபாய்... ஐநூறு மட்டும்... மாணவ, மாணவியர் அனைவருக்கும் பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும்...

அனைவரும் வாரீர்... ஆர்வமுள்ளவருக்கு செய்தியளிக்கவும்...

மின்னஞ்சல்: sugumarje@gmail.com

கைபேசி: +91 94427 83450

இனி மருதாணி ஓவியங்கள்...




காத்திருக்கிறோம்,

.

Post Comment

Thursday, May 6, 2010

கண்ட-கேட்ட-நினைத்த-அநுபவித்த-நான் 2 - KKNAN

ஏதேனும் கணிணி பாடங்கள் நடத்திக்கொண்டிருக்கும் போது சில வேடிக்கைகள் நிறைவேறும்... உதாரணமாக...

'சார்...எப்படி சார்? பண்ணி காமிங்க சார்..!'
'இங்க எப்படிப்பா காட்ட முடியும். வெளியவா.. பன்னி காட்டறேன்'

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

நேற்று திருச்சிராப்பள்ளியில் நல்ல மழை... என்பதை விட மழை இப்படித்தான் இருக்கும் என்பதாக அமைந்திருந்தது. மழையில் ஒரு பத்து நிமிடம் நனைந்து கொண்டே இல்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆஹா... மனமும் நனைந்து மகிழ்ந்தது.

எனக்கென்னமோ... மழை என்கிற வார்த்தையே மகிழ்வாய் இருப்பதாக உணர்கிறேன்.

நனையும் போது திரு. வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவில் வந்தன...

'இது தேவதையின் பரிசு, யாரும் விலகிச்செல்ல வேண்டாம்..
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்..
அந்த மேகம் சுரந்த பாலில் நீ நனைய மறுக்கிறாய்,
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்.
கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்...'

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

மழையின் தீவிரம் பற்றிய விமர்சனத்தின் போது திண்டுக்கல் ஐ. லியோனியும் ஞாபகம் வருவார்...

எப்படியா இருந்துச்சு நேற்றைய மழை?

புரட்டு, புரட்டுன்னு புரட்டிருச்சுல்ல... (புரோத்தா மாஸ்டர்)
மாமுலான மழைதானப்பா... (காவல்துறை அதிகாரி)
சடசடன்னு, படபடன்னு சரியான மழைதான்... (தமிழாசிரியர்)
ஊத்து, ஊத்துன்னு ஊத்திருச்சுல்ல... (குடிமகன்)
வெளுத்து கட்டிருச்சுல்ல... (சலவைக்காரர்)

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

இன்றும் மழைதான்... நேற்றை ஒப்பிடும் பொழுது... ஒன்றுமில்லை. ஆனால் ஊரை குளிர்வித்தது...

இந்த ஒப்பிடல் எனும் பொழுது 'ஓஷோ' என்னை மிரட்டுவார்... அவர் சொன்னது போல... 'ஒரே ஆற்றில் இருமுறை நனைய இயலாது' உண்மைதான்... வாழ்வின் ஒவ்வொரு கணமும் புதிதுதான்... இன்றைய ரோஜா மலரை கைகளில் வைத்துக்கொண்டு, நினைவில் நேற்றைய ரோஜா மலரோடு வாழ்வது தவறுதான்...

'இந்த ரோஜா மலர் அழகாயிருக்கிறது என்றே சொல்லாதே' என்பார் 'ஓஷோ'

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

இன்றைய 3G உலகில் எல்லாமே "Just Like That". கணிணி பாடங்களின் பாடத்திட்டப்படி செல்லவே முடிவதில்லை... "Youth" அவ்வளவு வேகம்... ஆனால் மறு நிமிடம்....

"Not get right meanwhile I apply as correct"

"Computer device never Wrong..." Just I replied.

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ



அக்கினி நட்சத்திர 26 நாட்கள் என்பது... பூமியின் நீள் வட்ட பாதையில் சூரியனுக்கு மிக அருகாமையான பூமியின் காலமாகும்...

நிறைய நீர் அருந்துங்கள்... உணவில், நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்...

தலையை நேரடியான சூரிய ஒளியில் காட்டாதிருக்கலாம்...

நண்பகல் கடின வேலைகளை தவிர்க்கலாம்...

ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ

தொடருவேன்...

.

Post Comment

Saturday, February 6, 2010

Fired - ச்சும்மா

அடடா, விலைவாசி ஏற்றத்தாழ்வு, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் விலை உயர்வு கொடுமையே தேவலை போல இருக்கேன்னு நீங்க புலம்புகிறது எனக்கும் கேட்கிறது... என்னங்க பண்றது... நானும் இத்தனை ஆண்டுகளாக இந்த முகத்தை(!?) காண்பிக்காமல் தான் இருந்தேன்... ஆனால் முகம் காட்டாமல் வலையெழுதி தப்பிக்க எண்ணமா? அப்படீன்னு என் மாணவமணிகள் கேட்டுட்டாங்க... இப்பொழுது நீங்க மாட்டிகிட்டீங்க...

பெரிய ஜேம்ஸ் பாண்ட் 007 ன்னு நினைப்பு... (!?)

;-)

பின் குறிப்பு; இப்படியெல்லாம் வித்தை காண்பிக்காவிட்டால்... ஒருத்தரும் என்கிட்ட படிக்க வரமாட்டார்கள்.

Sugumarje@gmail.com - Lecturer in Visual Communication -

Professional Courses on web - multimedia - graphic arts and animation drawing...

Contact:-
Ohedas Technologies
education - copywriting - Consultant - freelancer
A.22. S.V.V Complex, Sastri Road, Tiruchirappalli - 620 017
Phone: 0431 2741714 / mobile: 9442783450

Post Comment