Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label blogger. Show all posts
Showing posts with label blogger. Show all posts

Wednesday, February 2, 2011

Jackiesekar _ Tamil blogger _Caricature


Name: Dhanasekar (Jackiesekar)
Birth: 01-01-
Place: Cuddalore (Pondicherry)
Occupation: Photographer (Flim), Tamil Blogger


All of my drawing has takes one day only, this one Caricature Takes my two days...  so...
கடவுளோட பிரச்சனை ஒண்ணு எனக்கு இப்பத்தான் தெரிஞ்சது... அது என்னான்னா... இந்த முகத்தை படைக்கிறதுக்கு அவரு எவ்வளோ கஷ்டப்பட்டிருக்கணும் :(


Post Comment

Monday, January 10, 2011

Truetamilans _Caricature


உண்மைத்தமிழன்

பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..  
 
(அவரே சொன்னதுதான்)
 
மேலும் அறிய ... காண்க
:)

Post Comment

Saturday, October 16, 2010

The Tamil Bloggers Welcomes _by Sugumarje

 தமிழ் உலக வலை பிரியர்களே... இப்பொழுது நாம் பல வழிகளில் நம்மை, நம் எண்ணங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்... பிளாக்கர், வேர்ட்பிரஸ் வலைப்பூக்களை அதிகம் விளைவிப்பது, அதை அறுவடை செய்வது நம் தமிழ் மக்கள்தான். நான் மட்டுமே 20 வலைப்பூக்களுக்கு மேல் கையாண்டு வருகிறேன்...

உங்கள் எண்ணங்களுக்கு மேலும் உயிரூட்ட நான் உதவ காத்திருக்கிறேன்.

என்னைப்பற்றி மேலும்  அறிந்து கொள்ள...
Profile
by Search

by Graphic Design Search
Search by Ohedas

உங்களின் வலைப்பூக்களுக்கு, டிவிட்டர், பேஸ்புக், ஜிடாக் இவற்றிலும் உங்கள் ஒளிப்படத்தோடு... (Blogger, Wordpress, Blogs,Facebook, orkut, Twitter, Avatar, Forum, Social Sites, chat, Gtalk, MSN, Skype and all)

தோரண அலங்காரம் (Banner - 900 x  220px - 1)
அவதாரம் (Avatar - 300 x  300px -1)
விளம்பரம் (About Me- only - 220 x  320px - 1)
அனிமேசன் (Animation - 220 x  120px - 1)

ஒவ்வொரு பிரிவுக்கான டிசைன் ஒன்றும் இந்திய ரூபாயில் 100/- (INR 100/-) மட்டுமே...

வெளி வாழ் தமிழர்களுக்கும், பிறருக்கும் அமெரிக்க டாலர் 5/- (US $5/-) மட்டுமே...

உங்கள் ஒளிப்படம், தேவையான விபரம், உங்கள் எண்ணங்கள் உடனே பகிர்ந்து கொள்ளவும்... உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசாகவும் தரலாம்... எனக்கும் நீங்கள் வேலை தந்ததாகவும் இருக்கும் :) பணம் பெற்றுக்கொண்ட சில மணி நேரத்தில் உங்களுக்கான வேலை முடித்து தரப்படும். (கண்டிப்பாக, ஓரே ஒரு சரிபார்ப்பு மட்டுமே செய்ய இயலும்.)

பிற எந்தவகையான டிசைன் தேவையென்றாலும் என்னை அணுகலாம்...

சந்தேகங்கள் கேட்க...
sugumarje@gmail.com அல்லது +91 9442783450

வங்கி விபரம்...
My Account No:_ 056801502515
My Account Name: J.Sugumaran
Bank Name: ICICI
Branch: Woriyur

PAYPALல் செலுத்தலாம்... முகவரி...
sugumarje@gmail.com


அலுவலக முகவரி ...
A.22. S.V.V Complex, Sastri Road, Tennur, Tiruchirappalli - 620017, Tamilnadu, INDIA

அன்புடன் அழைக்கிறேன் :)

Post Comment

Wednesday, February 24, 2010

ஆயிரம் ஓட்டு பதிவர் - 1000 Votes Blogger

எல்லோரிடமும் படைப்பாக்கத்திறன் வரவேற்கத்தக்கதே! ஆனாலும் கத்தியெடுத்தவரெல்லாம் அறுவை சிகிச்சை செய்ய இயலாமற்போகலாம். கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாகிறது... நான் வலைப்பூ விதைக்க ஆரம்(பித்து). இப்போது ஆயாசமாக வருகிறது. என் காலங்களில் களமிறங்கிய பலர் இப்போதில்லை. அவர்கள் விலகிச்செல்ல சொல்லப்பட்ட காரணங்கள், அப்படியெல்லாமில்லை என்று அறிவுறுத்திய எனக்கும் மெல்ல புரிய ஆரம்பித்துவிட்டது.

மனிதன் தந்திரமிகுந்தவன். வாழ்வியல் ஆதார அமைப்பில் அத்தந்திரத்தை பயன்படுத்த அதற்கு தக்க அளவு உள்ளது. தந்திரமில்லையேல் ஜீவாதாரமே இல்லை என்ற நிலைக்கு மனிதமனம் தள்ளப்பட்டிருப்பது அல்லது அப்படியான ஒரு வழியை தேர்ந்தெடுத்திருப்பது மகா அவலம்.

இதை வெகுஜன, குடும்ப, காலை, மாலை செய்தி பத்திரிக்கைகளின் தலைப்புக்களிலேயே அறியலாம்.

இந்த வலைப்பூவிலும்... (வலைப்பூ-ஆஹா, இந்த மென்மை உங்களுக்கு அறியவருகிறதா?) அநேக எல்லா எழுத்துக்களிலும் தந்திரம். இந்த அளவில் 'வந்து, படித்துப்பாருங்களேன்' என்று அழைப்பு... ஐயோடா!

எப்படி தந்திரத்தை செயல்படுத்துவது என்று அறிந்தவர்,  எப்படி வலைப்பூவில் எழுதுவது, எப்படி ஒரு விசயத்தை எழுதுவது என்பதை அறியவேண்டுகிறேன்.

கூடுதலாக...
இப்படி யோசிக்கலாம்...

1) மொக்கையா இது?
2) இந்த பதிவின் அழைப்பு யாருக்கு?
3) இதன் மூலமாக அறியத்தருவது?
4) கடின, சுடு சொற்கள் இருக்கிறதா?
5) தனிநபரின் விமர்சனமிருக்கிறதா?
6) பதிவு என் எண்ணத்தை அழுத்தமாக பிரதிபலிக்கிறதா?
7) மாற்றுக்கருத்திற்கு இடமிருக்கிறதா?
8) வேறு யாரேனும் இதை இப்படியே பதிவிட்டிருப்பார்களா? வேறொரு வழியிலும் இதை சொல்ல இயலுமா?
9) இந்த பதிவின் மூலமாக எனக்கு வேண்டியது... பொருள், புகழ், செல்வாக்கு, இன்பம், அறியத்தருவது, செய்தி, ஆதங்கம்... வேறு என்ன? (வகை படுத்தவும்)
10) இது எனக்கு களங்கம் தருமா?
11) இது குறித்து விளக்கம் கேட்டால், விவரம் தர இயலுமா?
12) இதை சொல்லத்தான் வேண்டுமா?


அடுத்தாக...

எண்ணம், சொல் என்பதெல்லாம் எழுத்திலடங்கும்போது ஒரு முறையிருக்கிறது. அந்த அற்புதம் மிகச்சிலருக்கே கிடைக்ககிறது. இந்நாள், அநுபவம் வாய்ந்த பதிவர் குழுக்கள் வழங்கும் 'வலைப்பூ - பயிலரங்கத்தில்' கலந்து கொண்டால் நலம்.
இல்லையேல்...

அப்படியே பதிவு வேலையை நிறுத்திவிட்டு, பதிவு அறுவடை செய்யுங்கள்... சிறிது காலங்களில் ஒரு  தெளிவு கிடைக்கும். அநுபவமே ஒரு ஆசான்தான்.

பொன்னான உங்களின் நேரமட்டுமல்ல, எங்களின் நேரத்தை மதிக்க அறியுங்கள்...

உங்கள் பதிவை இன்னொரு பதிவரும் படிப்பார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

உங்களின் பதிவை நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள்...

பதிவேற்றும் பொழுது, எண்ணம், சொல், எழுத்து ஒற்றுமை கவனியுங்கள்...

மிகச்சரியானதாக இருந்தால் மட்டுமே, பதிவேற்றுங்கள். இல்லையேல் தாமதிக்காமல் அழித்து விட்டு, மீண்டும் முயற்சியுங்கள்...

சிலர்... ஓரே ஆள், ஓரே விசயம், பல வலைப்பூக்கள் காணக்கிடைக்கிறது... இதெல்லாம் என்னா?

இத்தகைய விசயங்களை கவனித்துக்கொண்டால் நலம். இல்லையேல்... உங்கள் பதிவை நீங்களே படித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்... எப்பூடி?

இறுதியாக...

'யோவ்!. நான் சரியாத்தான்யா பதிவிடுறேன், அதுக்கு நீ என்னா பண்ற?'

அடுத்த பதிவில் பதில் தருகிறேன்...

தமிழோடு, தமிழருக்கு மட்டுமில்லாது... உலகோருக்கான அக்கறையோடு பதிவிடுவோமாக!

Post Comment