Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label 2d. Show all posts
Showing posts with label 2d. Show all posts

Thursday, February 3, 2011

Good Things God Thinks

Good Things God Thinks



Based on Moral. I have to number of Hats by on this 2D animation Movie. Yes...

Character Designing
Background Artist
Music
Voices for Crow and Elephant
Editing
Supervising 
and Direction


Say Your Comments :)

நம்ம விஜய டி.ராஜேந்தர் போல எல்லாமே என் தலைமேல :)  கிட்டதட்ட இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட 2டி அனிமேசன் திரைப்படம். கால அவகாசமில்லததால் இதுவே போதுமென்று முடித்துக்கொள்ளப்பட்டது :)

தங்களின் பொன்னான பின்னூட்டங்களினால் விமர்சியுங்கள்...
:)

Post Comment

Monday, April 5, 2010

தொடரோவிய வரைகலை பயிற்சி - Animation drawing course in Trichirappalli

கிட்டத்தட்ட ஒரு மாதம்...பிப்ரவரி 26 ஆம்   தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை... இந்த வலை மனை எனக்கு மட்டும் கழன்று விட்டது. கணக்கில்லா இணைப்பு வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இப்படி ஒரு நிலைமை. இந்த ஒரு மாதத்திற்குள் காவி கந்தலான கதை உட்பட நிறைய நடந்து விட்டது. அகத்தாய்வு என்றொரு வார்த்தையின் செயற்பாடு இந்த நாட்களில் நிகழ்ந்தது.

இந்த சுகுமார்ஜி சுய முகம், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதாக உலகை விட வலை மனை நம்பிக்கை உடையதான தோற்ற மாயை  என்பதை அறிய நேர்ந்தது  . அப்படியாக நான் நம்பியதும் தவறாக இருக்கலாம். ஆனால் ஓட்ட பந்தயத்தில் நாம் கட்டாயம் கலந்து கொண்டிருப்பதால் வேற வழியே இல்லை. தோற்றுபோகிறவனும் ஓடத்தான் வேண்டும். 

ஆனாலும் இதெல்லாம் புலியை பார்த்து பூனை சுடுபோட்டுக்கொண்ட கதைபோலத்தான். விலகி நின்று பார்ப்பது முடியவே முடியாது... தனிமனிதனுடைய வாழ்க்கை எதோ ஒரு கேள்விக்காகவோ, அல்லது கேட்கப்போகும் கேள்விக்காகவோதான் நிகழ்ந்து கொண்டிருகிறது.

கூடுதலான ஒரு மணி நேர அலுவலக பணி கொஞ்சம் ஆயாசம் தருவதால் நிறைய எழுதவோ, வரையவோ, வடிவிக்கவோ நேரமில்லை. வலையை மேயவே நேரம் போதுமானதாக இருக்கிறது...

சரி, ஒரு சொந்த அலுவல்... விளம்பரம்... தொடரோவிய வரைகலை பயிற்சி...நம்ம திருச்சியில் முதன் முறையாக... செய்முறை பயிற்சிகளோடு... கோடை கால சிறப்பு வகுப்புக்கள். நீங்களோ , உங்கள் குழந்தைகளோ உங்கள் மனதோடு, மனதின் உணர்வுகளை ஓவியமாக தருவியுங்கள்.

* ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வகுப்பு.
* தனிக்கவனம் 
* எப்போது வேண்டுமானாலும் சந்தேக நிவர்த்தி
* வரைகலை முன் அனுபவம் தேவை இல்லை
* தொடரோவிய வரைகலை அதற்க்கான மென்பொருளில் பயன் படுத்தும் வழி முறைகள் 
* அரசு, தனியார் அலுவலக மாணவர்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் வகுப்புகள்
* குழந்தைகளுக்கு எளிய வரைகலை வழி முறைகள் 
* மிக குறைந்த கல்வி கட்டணம்
* வரைகலை கல்விக்கான சான்று
* வேலை வாய்ப்பு - பரிந்துரை 








அன்புடன் அழைக்கிறேன்..

Post Comment

Sunday, December 20, 2009

Avatar Technical - அவதார் விளக்கம்

அவதார் திரைப்படம் குறித்த விமர்சனங்களின் வலைப்பூக்கள் நிறைய எழுதி குவித்தவண்ணமே இருக்கிறார்கள்... எங்களைப்போன்ற விரிவுரையாளர்களின் பணிச்சுமை இப்போதெல்லாம் குறைந்துவிட்டதென கருதுகிறேன். நண்பர் ஹாலிவுட் பாலா... விமர்சனங்கள் கடந்த தொழில்நுட்ப செய்திகள் சுனாமி போல ஒவ்வொரு பதிவிலும் வந்து தாக்குகிறது. பதிவு காண ... அவருக்கு அது தொழில் சார்ந்த துறையாக இல்லாதிருப்பினும் அளவு சாராத ஆர்வம் என் புருவம் உயர்த்துகிறது. இப்போதைக்கான அவதார் திரைப்படம் தொழில்னுட்ப விளக்கத்தில், அவருக்கு முடிந்த அளவில் விளக்கியிருந்தாலும் கூட, நானும் அவரோடு கலந்து கொள்ள விரும்பினேன்.

சொல்லப்போனால்... நானும் விளக்கம் சொல்ல முயற்சித்துள்ளேன் என்பது தான் உண்மை. இந்த 2டி, 3டி விசயங்கள் என் பதின்வயதுகளில் ரஷ்யா இதை இதை மூலமாக கட்டாயம் இதை... கட்டாயம் இதை இதை, 'இதோ இப்படியாக பாருங்கள், 3டியை அனுபவியுங்கள்' என்றழைத்தால் பத்து நபர்களில் ஒருவருக்குத்தால் (இறை) விளக்கம் கிடைக்கும். ஆமாம்... இறைவனை காணுதல் போலத்தான். (அடிக்க வராதீர்கள்... சும்மா உதாரணம்தான்)

இப்படியான கடின முறைகள் இனியில்லை. அவதார் புதிய அவதாரமாக ஒன்றை உருவாக்கிவிட்டது... அது, Fusion 3D Camera / Vince-Cameron System
நண்பர் ஹாலிவுட் பாலா... சொன்னதன் விளக்கம் படித்தபிறகு, இதிலுள்ள செய்திகளை காணுங்கள்... ஆப்படி.. இல்லை அப்படியும் உங்களுக்கு புரியவில்லையானால் இவ்விளக்கத்தில் எனக்குத்தோல்விதான்.

சரி...இங்கே கவனியுங்கள்...

மனித வாழ் உயிரின (நாம்தான்) கண்களின் சிறப்பு, இருகண்கள் ஒருமித்த காட்சி... நான்கு கண்கள் ஒருமித்த காட்சி... காதலர்களுக்கு மட்டும்.
அருகாமையை பார்த்தால் தூர இருப்பது விலகுவதும், தூர இருப்பதை பார்த்தால் அருகிலிருப்பது விலகுவதும் என்றாவது அறிந்திருக்கிறீர்களா?

காட்சி காண்க...

காட்சி ஓன்று..


காட்சி இரண்டு..

அடுத்து...

அவதார் புதிய அவதாரமகிமை உணர்த்துவது இதுதான்... (Fusion 3D Camera / Vince-Cameron System)

காட்சியில் நீங்களும், நானும் பார்ப்பதைப்போல காமிரா (காண்பிப்பதானால் = காமி!?) பார்த்துக்கொள்வதை தனக்குள் இருக்கக்கூடிய பிலிமூளையில் பதிந்து கொள்கிறது. அவ்வளவுதான்...(ம்...அப்பாடா...)

காட்சி காண்க...







சரி.. இதையும் பார்த்து ரசிங்க, அனுபவிங்க...

இதை கட்டாயமாக ரம்பா கண்களாலேயை (வார்த்தை உபயம், நண்பர் ஹாலிவுட் பாலா) பார்க்க வேண்டும்... நன்றி யாகூ ஃபிளிகர்










கேள்வி கேட்க யோசிக்காதீங்க... சிந்தனை குதிரைய தட்டி எழுப்புங்க... அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்க...


sugumarje@gmail.com

Post Comment

Tuesday, October 6, 2009

Visual Communication _ Educator

எதன் பொருட்டு எழுதுகிறாய்? என்று என்னிடம் கேட்கப்பட்டது.

'நான் இவ்வகையில் முட்டாள்தனமாக இருக்கிறேன் என்று கூட கொள்ளலாம்' என்று பதிலுறுத்தேன். நம்ம வள்ளுவர் கு(ர)றல் 'ஒருவன்செய்கைகளே  அவனின்  உரைகல்' என்பதைப்போல, என் வார்த்தைகளின் மூலமாக என்னை அறியத்தரும் ஒரு சிறிய முயற்சி.

கட்புல தகவல் தொடர்பியல் துறை விரிவுரையாளராக இருந்தும் (Visual Communication), கட்புல தகவல் தொடர்பியல் என்றதும் 'திரைப்படம்' என்பது மட்டுமா? என்றால் இல்லை. தளத்தில் அது குறித்த செய்திகள் அருகியே காணப்பெறும். ஏன்? களத்தில் இருந்துதான் இது குறித்து தர என்னால் இயலுமே தவிர தளத்தில் தர இயலாது.

பசியாக இருப்பவனுக்குத்தான் விருந்தின் ஓம்பலும், சுவையும் உணர முடியும். திரைப்படம் என்ற ஊடகத்தின் பிரமிப்பிலிருந்து மீளா கூட்டத்திலிருந்து கொண்டே விமர்சனமோ, வியாக்ஞானமோ தருவதில் எனக்குடன்பாடில்லை. 

சில திரைப்படங்களின் விமர்சனங்களால் நைந்து போயிருந்த பாரதிராஜா,
'ச்சும்மா குறை சொல்லிட்டே இருக்காதைய்யா! நீ முதலா உள்ள, திரைப்பட துறைக்கு வா, அப்புறமா பேசு' என்றழைத்தார்... என்னையல்ல! பெரியார்தாசனை. அழைத்தது மட்டுமல்ல... தன் படத்தில் நடிக்கவும் வைத்தார்.

'கருத்தம்மா' கிழவன் நினைவிலிருக்கிறானா?

நடப்புகாலங்களில் 'குறும்பட' பயிற்சி பட்டறை நிறைய நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். திரைப்படம் என்ன? திரைப்படமாவது எது? என்பதில் கவனம் கொள்ளுங்கள். உங்களின் உணர்வுகளை திரைப்படமாக்குங்கள். திரைப்படம் என்ற ஊடகத்தின் உண்மை உங்களுக்கே அறிய வரும்... இனி சி.மு, சி.பி அறிவீர்கள்.

இப்பொழுது விதைக்க மட்டுமல்ல, களை (கலை அல்ல) அறுக்கவும் தயாராகிவிட்டீர்கள்.

அடுத்தவரின் விமர்சனங்களிலிருந்து விலகியிருங்கள், 'எனக்கும் தெரியுமைய்யா' என்றிருங்கள்.

விலகிப்போன ஆடாயிருங்கள்...

சரி, இங்கே நான் என்ன செய்கிறேன்?... நான் சில தலைப்புக்களில் வகுப்புகள் தருகிறேன். நீண்ட கால (பத்து வருடங்களுக்கு மேலாக) கணிணி உபயோக பணி காரணங்களால் திரைப்பட தொகுப்பு, அதற்குரிய கணிணி மென்பொருள் கற்றுத்தருகிறேன்... (Film Editing Software and Effects Software)கணிணி துணை கொண்டு தயாரிப்பதற்கான இரு பரிமான, தொடர் வரைகலை திரைப்பட கலை, முப்பரிமான திரைப்பட கலை மென்பொருள் கற்றுத்தருகிறேன். ( 2d drawing, Animation, 3d Animation)

அப்படியென்றால் தளத்தில் தருவதுதானே?

'இல்லை, இது என் வாழ்வாதாரம், நான் விருந்தே வைப்பேன், நீங்கள் கேட்டால்...'

Post Comment