Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Saturday, July 23, 2011

Kovai Kalaimagal College of Arts and Science _ Part 2



திருச்சியிலிருந்து கோவைக்கு செல்ல கிட்டதட்ட ஆறு மணிநேரம் ஆகிறது. உண்மையில் ஒரு மணிநேரம், கரூரிலும், காங்கேயத்திலும் நிறுத்தி, சரியான நேரத்திற்கு போய்ச்சேர வேண்டுமே என்ற எண்ணம், பயம் ஏற்படுத்தி விடுகின்றனர்.

என்னை கல்லூரி வரை அழைத்துச்செல்ல கார் 9 மணிக்கே காந்திபுரம் அருகே நிற்பதாக, எனக்கு தகவல் அளித்தனர். அதோடு எனக்காக மாணவரும் அங்கே காத்திருக்கிறேன் என்று அலைபேசியில் சொன்னார். ஒரு வழியாக 10 மணிக்கு கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்து, உடனடியாக, மாற்று பேருந்தில் ஏறி எனக்கு தெரிவித்திருந்த சுங்கம் என்ற நிறுத்தத்தை அடைந்தேன். சிறிய தேடலுக்குப்பின் என்னை அவர்கள் அடையாளம் கணடனர்.

கோவையின் வெப்பமில்லாத காற்று, திருச்சியை ஞாபகப்படுத்தியது... உக்கடம் வழியாக நரசிபுரம் நோக்கி கார் விரைந்தது... வழி எங்கும் பச்சை பசேல் காட்சி... பேரூர் வழியாக இன்னும் கொஞ்சநேர பயணத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அருகில் வரத்தொடங்கின. சுற்றுப்புற காட்சிகள் மனதை ரம்மியமாக்கின. பயணத்தின் போது கல்லூரி பற்றிய தகவல்களை மாணவர்களிடம் மேலும் அறிந்து கொண்டேன்.

மேகம் கவிழ்ந்த அந்த மலைச்சாரலின் கீழே அமைந்திருந்த அந்த கல்லூரி வளாகம் அற்புதமாக இருந்தது. படிப்பதற்கு மட்டுமல்ல, விடுமுறை காலத்தைலும் பொழுதை அங்கே கழிக்கலாம் போல. அவ்வளவு அற்புத சுற்றுப்புறச்சூழல். இந்த சூழல் மனதை மேலும் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளத் தூண்டும் என்பது உண்மை. இந்த கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றே கருதுகிறேன்.

நான் உள்ளே நுழைந்ததும், கணிணி தொழில்நுட்பத்துறை தலைவர் என்னை வரவேற்றார். கூடவே தகவல் தொழில்நுட்பத்துறை தலைவரும் இணைந்து கொண்டார். நாங்கள் மூவருமாக கல்லூரியின் முதல்வரை சந்திக்கச் சென்றோம்.

வழக்கமான முதல்வராக இல்லாமல் இன்முகத்தோடு என்னை வரவேற்று மகிழ்ந்தார். அடுத்த 10 நிமிடத்தில் விழா அரங்கினுள் நுழைந்தோம். வரவேற்பு பலமாக இருந்தது. தரையில் மாணவியர் குழு வரைந்திருந்த வண்ண மயில் அருமை. இந்த மாதிரியான வரவேற்பு விசயங்கள் ஒரு மனிதருக்கு கூச்சத்தை ஏற்படுத்தும்... அதுவே எனக்கும் தோன்றியது. விழா மேடையில் நான் அமர்ந்தேன்.

சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பேற்றல் நிகழ்விற்கு பிறகு... இந்த கூட்டம் பற்றியும், என்னைப்பற்றியும் அறிமுக விழா உரையை கல்லூரி முதல்வர் பேசினார். அடுத்ததாக கணிணி தொழில்நுட்பத்துறை தலைவர் என்னை பேச அழைத்தார்.

நான் முதலில் கேரிகேச்சர் என்றால் என்ன என்பது பற்றி ஒரு விளக்கம் தந்துவிட்டு, நான் என் உரையை தொடங்கினேன். நான் தகவல் தொடர்புத்துறையில் கில்லாடியாக இருந்தாலும்... என்னைப்பற்றி “இவர் எப்படி இந்த உரையை சிறப்பாக தருவாரா?”என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலாது... அதற்கு ஒரு காரணமும் உண்டு... :)

ஆனால் நான் பேசப்பேச முதல்வர், துறைத்தலைவர், மாணவர் கூட்டம் கவனிக்க ஆரம்பித்தனர். மாணவர்களின் கவனத்தை நான் ஈர்க்க முடிந்தது... கவனம் ஈர்த்தாலே அவர்களுக்கு தேவையான விசயம் அதில் இருப்பதை நாம் உணர முடியும்.

ஒரு மணிநேரம் Opportunity from Unknown குறித்து தகவல் அளித்தேன். அதன் முக்கிய தலைப்புக்கள் வருமாறு...


Introduction, Where we stand in our Life, Generation - 3 Types, Absorbtion, More Interest, Learning fron Others, Need Clear Approach, Getting friendship, build Your Sketch and Structure, What happen after Complete the Degree, Challange is Arise, Entering new World, Struggle with Real World, Confident, Getting Attitude, Clear in Ignorance, Clear in Communication, Online and Offline, Virtual World Welcomes, Entring IT form and Freelance, Give the Stuff and Success. 

இதோடு என் சிங்கம் கதை சொன்னேன். ஒரு கார்டூனும் சொன்னேன்.

நிகழ்வின் இறுதியில் Live Caricature பற்றிய விளக்கமளித்து வரைந்தும் காட்டினேன். மாணவ, மாணவியர்கள் ரசித்தனர். நான் இந்த விழாவில் என்பங்கை நிறைவு செய்து நன்றி தெரிவித்தேன்.

மதியம் கல்லூரியின் உணவகத்தில் அருமையான விருந்து, துறைத்தலைவரோடு பகிர்ந்து கொண்டேன். அடுத்தும் கணிணி, தொழில் நுட்பத்துறையில் எந்த வகையான தலைப்பிலும் நான் பேச தயாராக இருப்பதாக அவருக்கு உறுதி அளித்தேன். வாய்ப்பு இருக்கும் நிலையின் நான் வருவதாக சொன்னேன்.

மீண்டும் கல்லூரி தலைவரை சந்தித்து என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டு, நல்ல அனுபவத்தை பகிர்ந்தளித்த கோவை கலைமகள் கல்லூரியை வாழ்த்தியபடி, மீண்டும் அவர்கள் வாகனத்தில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.


Post Comment

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

கவனம் ஈர்த்தாலே அவர்களுக்கு தேவையான விசயம் அதில் இருப்பதை நாம் உணர முடியும்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

SNR.தேவதாஸ் said...

அன்பு நண்பரே வணக்கம்.
தங்களது அற்புதமான தளத்தை இன்றுதான் முதன் முதலாக வாசித்தேன்.
தங்களது பதிவுகளை எனது இ.மெயலுக்கு அனுப்பித் தர இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்.
snrmani@rediffmail.com