இந்திய குடியரசு தின வாழ்த்துகள்
ஓவியம்: சுகுமார்ஜி
Some of interesting Experience at Trichy Care School of Architect, Art Exhibition...in Tamil :)
புகழ் பெற்ற ஓவியர் _ சுகுமார்ஜி
அதுக்குள்ளயா? என்று கேட்காதீர்கள்... நம்மள நாமளே உயர்த்தலேன்னா வேற யாரு உயர்த்துவா? ஒரு பயலும் வரமாட்டானே. :)
என் நண்பர் கேட்டார்... “வேற எவனும் கேள்வி கேக்க மாட்டானுதானே இப்படியெல்லாம் தலைப்பு போடுற?” ஹி. ஹி.., உண்மை அதான்... ஆனால் எனக்குத்தெரிந்த விசய, அனுபவங்களின் வாயிலாகவேதான் என்னை அறியத்தருகிறேன்... உலக தத்துவ மேதை என்று சொல்லிக் கொள்ளவில்லையே :) ( அடப்பாவி... அதுவேறயா?)
சரி. விவாதத்தை யாரேனும் மறுப்பு தெரிவித்தால் மறு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளலாம்... இல்லையேல் ஒன் சைடு ஆப் தீர்ப்புதான் :)
இதை ஏன் சொல்லவந்தேன்னா... எனக்கு அழைப்பு தராமலேயே... அதும் திருச்சில... ஓவிய கண்காட்சி நடத்திட்டாங்க... எனக்கு ஒரே வெக்கமா போச்சு... என்னடா இது நாமளும் ஒரு நல்ல ரேஜ்ச்ல இருக்கோம்... உலக தர கேரிகேச்சர்லாம் பண்றோம்... சுகுமார்ஜின்னு கூகுள்ள தேடினாலே ஓவியமட்டுமல்லாம, பதிவும், வீடியோவுமா வந்து கொட்டுது... அப்பேர்பட்ட என்ன கண்டுக்காம என்ன இது? ம்...
“கேர் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்” அப்படின்னு ஒரு கல்வி நிறுவனம், அமைச்சர் கே.என். நேருவோட தம்பி, கே.என். ராமஜெயம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஓவிய கண்காட்சி பற்றி எனக்கு முன்னமே கொஞ்சம் விபரமறிந்தாலும் முறையான அழைப்பாக இல்லாததால் என்னமோ பண்ணுங்கப்பா என்று என் வேலைகளில் மூழ்கிவிட்டேன்...
முக்கியமாக “நேரடி கேரிகேச்சருக்கு வாய்ப்பு” கிடைக்கலாம் என்ற செய்தியும் கிடைத்தது... அழைப்பில்லா விருந்தாளியாக கலக்க விருப்பமில்லை... (அவ்வளோ பெரிய ஆளா நீ... நீங்க கேட்பது எனக்கு கேட்கிறது :))
கண்காட்சியை பார்ப்பதற்கும், கலந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறதே...
அதோடு ஓவியத்தை விறபனைக்கும், காட்சிக்கும் வைப்பதென்றால் அது இம்சை... அது...
1) உயிர் கொடுத்து வரைந்த ஓவியத்தை விற்க மனமிருக்காது
2) அப்படியான ஓவியத்திற்கு விலை குறிக்கவும் முடியாது.
3) பணமிருக்கிற எந்த _ம் வாங்கிருவாங்க... அதோட மதிப்பறியாமல்
4) ஓவியம் வரைவதைவிட அதை சரியானபடி சட்டத்தில் (LAW இல்லீங்க FRAME) அமைப்பதற்கு நிறைய செலவாகும்.
5) எதாவது ஒரு _ வந்து இது நீங்க வரைஞ்சதா? இதை இப்படியா போடுவாங்க... இப்படி வரக்கூடாது சார் ( நீ எல்லாம், ஏனய்யா, காட்சிக்கு வர்ரீங்க...)ன்னு பாடம் நடத்துவார்கள்.
6) என்ன சொன்னாலும் கேட்காமல் வெளிச்சமே இல்லாத இடத்திலும், எதாவது கோடிப்பகுதியிலும் போட்டிருப்பார்கள்... பார்வையாளர்கள் “போங்கடா... எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கு... போலாம் போ... அதை அப்புறமா பார்க்கலாம்” என்று மனதில் நினைத்துக்கொண்டு வாசல் நோக்கி போய்விடுவார்கள்.
ங்கப்பா... கண்ண கட்டுதப்பா :)
கடந்த 21, 22, 23 தேதி வரை நடந்து முடிந்தது... 23ம் நாள் என் மாணவர்... (தற்பொழுது சென்னை அரசினர் நுண்கலை கல்லூரியில் வண்ணம் பிரிவில் படித்துக்கொண்டிருக்கிறார்.) மாலை 6.00 மணிக்கு... “சார்... என்ன சார்...நீங்க இருப்பீங்கன்னு நினைச்சோம்... வாங்க, உங்க நண்பர் கூட... இருக்கார்” என்றழைக்க... LADY ANDYBELLAM POP இசைக்குழு கேரிகேச்சரை வரைந்து கொண்டிருந்த நான் உடனே என் அலுவலகத்தின் மிக அருகில் தான் இருக்கிற ஓவிய கண்காட்சிக்கு போனேன்...
வாசலிலே காத்திருந்த என மாணவரோடு படியேறினேன்... எனக்கு முன்னாளில் செய்தியளித்தவரும், என் நண்பரும் அங்கேதான் இருந்தனர்... (!?)
ஓவியங்கள் நிறைய வந்திருந்தன... அடப்பாவிகளா... இதையெல்லாம பார்தால் கூட என் நினைவு வரலாமே... ஒரு அழைப்பு தந்திருக்கலாமே :( ஆனால் கேட்டால் மறுமொழி தயாராக இருக்கும்... ரைட் விடு... (சென்னை ஸ்டைலு)
எல்லா ஓவியங்களும் விலைக்கும் கிடைத்தன... ஓவியம் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் நின்று நிதானமாக நகர்ந்தனர். ஒவ்வொன்றும் அருமை... ஓவியங்களை ரசிக்கவும் ஒரு தன்மை வேண்டும்... எவராவது... இது சூப்பர், இது நல்லாவே இல்லை என்றால் அவரை கூப்பிட்டு நாலு அறை வைத்து வெளியே போகச்சொல்லிவிடலாம்...
கிட்டதட்ட ஒரு 200 ஓவியங்களிருக்கலாம் என்பது என் எண்ணிக்கை... திருச்சிராப்பள்ளி மக்களுக்கும், ஓவிய ஆர்வலருக்கும் இப்படியான ஓவிய கண்காட்சி நல்ல மாற்றம் தரும். குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும்.
ஏற்பாடு செய்திருந்த “கேர் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்” கே.என். ராமஜெயம் அவர்களுக்கு என் நன்றி...
அடுத்து...
நிறைய பேரு... அனேகமாக நான் பார்க்கிற எல்லோருமே இப்படி செய்கிறார்கள்... ஏன் என்றுதான் தெரியவில்லை... ஆனால் எனக்குத்தெரிந்து ஒரு கையால் சட்டையை முன்னோக்கி பிடித்துக்கொள்ளும் கலாச்சாரம் இப்பொழுது இல்லை... YOU CAN SEE NOW! மாதிரி போய்க்கிட்டே இருக்காங்க...
இதற்க்காக...
அடுத்து
ஒரு கார்டூன்...
என் பதின் வயதில் இப்படியான ஓவியம் காணப்பெற்றேன்... அது இன்ன்மும் நினைவில் இருப்பதால் பகிர்ந்துகொள்கிறேன்...
:)
No comments:
Post a Comment