Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, June 3, 2010

வேசோ - Mixed Thought

உங்கள் எதிரிக்கோ, முன்னாள் நண்பனுக்கோ சாபம் தர விரும்புகிறீர்களா? இப்படியான சாபம் தாருங்கள்...

'ஒருமணிநேரம் ஆட்டோ பின்புறமாகவே போகக்கடவது'

பாவம், மனிதர் நரக வேதனையை அநுபவித்து விடுவார்...

----------
சாலையில் ஒவ்வொரு சிக்னலில் நிற்கும் எல்லாருக்கும் தனித்தனியான யோசனைச்சூழல் இருப்பதை உணரமுடிகிறது. மடைதிறந்த வெள்ளம் போன்ற வேகம், சட்டென தடை போட்டதில் 30 வினாடி பதட்டம்... அடுத்த 10 வினாடி அமைதி... அதாவது MASS... குழுவாக ஒரே நோக்கத்திற்காக காத்திருத்தல்... ஆகா! அற்புதம்... அதனால்தான் சிக்னலில் பச்சை ஒளிர்ந்த பிறகும் இரு வினாடி தாமத விரைவாரம்ப பயணம்...

ஒரு முடிவாக, சிக்னலைக்கூட வாழும் கலை குருவாக மதிக்கலாம் போலிருக்கிறது...

----------
நீண்ட நாட்களாக ICICI வங்கி ஏடிஎம் மட்டுமே உபயோகித்து வந்திருக்கிறேன்... இரண்டு நாள் முன்பும் அப்படித்தான்... இந்த வங்கி ஏடிஎம் மில் கார்டை நுழைத்து சட்டென வெளியே எடுத்துவிட்டால் மட்டுமே வரவேற்பு நடத்தும்... இல்லையேல்... நாட்டாமை தீர்ப்புத்தான்... செல்லாது, செல்லாது...

அன்று அப்படித்தான் ஏடிஎம் நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்... பலமுறை முயன்றும்... ம்ஹூம்... நாட்டாமை அசைந்து கொடுக்கவில்லை... கொடுமை என்னவென்றால் அங்கே மூன்று நாட்டாமைகளில் இரண்டு நாட்டாமைக்கு பேதியாகி விட்டது... சரி... வேறு யாரவது முயற்சிக்கட்டும் என நான் விலக...

அடுத்தவருக்கும் அதே நிலைமை...

ஆனால் மூன்றாவது முயற்சியில் நாட்டாமை மனமிறங்கினார்... இதற்குள் மற்றொரு நபரும் உள்ளே வந்துவிட்டார்... அவர் பெயர் புண்ணாக்கு... (நான் இட்டதுதான்)... அடுத்தும் நானே முயற்சித்தேன்... இரண்டு முறையும் நாட்டாமை தீர்ப்புத்தான்... உடனே புண்ணாக்கு சொன்னது...

'பக்கத்தில IOB இருக்கு அங்க டிரை பண்ணுங்க... வெளியே ஏழு பேர் நிக்கறாங்க... போங்க, அப்புறம் அவங்கள்ளாம் எடுக்க வேணாமா?'

அப்போதுதான் புண்ணாக்கு என்று பெயரிட்டேன்...

வெளியே மூன்று நபர்களிருந்தார்கள்...

'எல்லா கார்டும் இப்படித்தான் பிரச்சனையாகிறது...' இது நான்...

'உங்க கார்டுல ஏதோ பிராப்ளம் இருக்கும் சார்' புண்ணாக்கு சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே நாட்டாமை, புண்ணாக்கு முகத்தில்
காறி துப்பினார்... நான் மெலிதாக நகைத்தேன்...

புண்ணாக்கு சொன்னது... 'மிஷின்ல ஏதொ பிராப்ளம் போல...'

வழக்கம் போல மூன்றாம் முயற்சியில் சரியானது... புண்ணாக்கு இரண்டு கார்டு வைத்திருந்தார்... தப்பாக நினைக்கவேண்டாம்... ஒரு கணக்கில் 407 ரூபாயும், இன்னொரு கணக்கில் 1004 ரூபாயும் மீதமிருந்தது... கொய்யால... இதுக்கே இவ்வளவா?...

மீண்டும் நான்... தோல்விதான்...

'IOB டிரை பண்ணுங்க' புண்ணாக்கு சொல்லிவிட்டு போய்விட்டது...

நான் யோசித்தேன். சட்டென 'சீச்சி, இந்த பணம் புளிக்கும் என்ற கதையாக திரு. புண்ணாக்கு சாருக்கும், வெளியே நின்றிருந்த மேலும் மூன்று பேருக்கும் மதிப்பளித்து வெளியேறினேன்...

அடுத்த இரண்டு கட்டிடங்களுக்கு பிறகானதில் IOB நாட்டாமை... சரி இவராவது நல்ல நாட்டாமையாக இருக்கமாட்டரா? என்ற யோசனையில் அறையின் முதல்படியில் கால்வைக்கப்போக...

ஒரு அவசரக்குடுக்கை... நான் இட்ட பெயர்தான்... ;-)

 நான் அவசரக்குடுக்கைக்கு 'போங்கடா, சீக்கிரம் போய்ச்சேருங்க...' மனதிற்குள் சொன்னபடி இடமளித்தேன்...

யார் என்னை முந்த நினைத்தாலும் அவருக்கு இடமளித்து வழியனுப்பி வைப்பேன்... அதனால் என் ஆயுள் கெட்டியாகலாம் தானே... வேற வழி... :-(((

ஒரு ஐந்து நிமிடத்தில் இருவர்... எனக்குப்பின்னே... அவசரக்குடுக்கை நீட்டி, நெளித்து ஏழு நிமிடமாயிற்று வெளியே வர...

நான் அறைக்கு நுழைந்தவுடன், சற்று திகைத்துப்போனேன்... ஆம்... IOB நாட்டாமை, சுமோ பயில்வான் போல இருந்தார்... இதிலே வேடிக்கை... எங்கே அட்டையை செலுத்துவதென்றும் குழப்பமாக இருந்தது... பதட்டப்படாமல் கண்களால் தேடி அட்டை அதற்கான இடத்தில் வைத்து நுழை..க்க.. IOB நாட்டாமை முழுங்கிவிட்டார்... எனக்கோ முதல் முதலாக அட்டை செலுத்தினபொழுது ஏற்பட்ட பயம் மீண்டும் ஒருமுறை உண்டானது...

ஆனால் திரை ஒளிர்ந்து IOB நாட்டாமை அட்டையை ஏற்று நல்ல தீர்ப்பளித்து அட்டையை திருப்பி அளித்து... ஒப்புதல் ஓலை தந்தார்... அந்த நிமிடம் IOB நாட்டாமை, ஏழுமலையானாக காட்சியளித்தார்...

------------
இரண்டு நாளாக அடிக்கிற வெயில் போதாதென்று, நம்ம ஆற்காட்டாரும் வறுத்து தள்ளிவிட்டார்... நம்மை பேக் செய்து விலைக்கு தராத குறைதான்...

இன்னமும் இரண்டு நாள் நீஈஈஈஈடிக்குமாம்...

பேசாமல் இன்னொரு சூரியன் கேட்போமா?...

இன்று சூரியனுக்கு பிறந்தநாள வேறு...

சூரியனுக்கெல்லாம் வாழ்த்து... அட... நான் ரொம்ப சின்னவன்ங்க...

------------

அநேகமாக அடுத்த பதினைந்து நாட்களுக்கு... பதிவிருக்காது... புதிய வேலைப்பளு எதிர்பார்க்கிறேன்... இதனால் தாமதமாகலாம்...

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...

.

Post Comment

1 comment:

Anonymous said...

மனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com/