'சார்...எப்படி சார்? பண்ணி காமிங்க சார்..!'
'இங்க எப்படிப்பா காட்ட முடியும். வெளியவா.. பன்னி காட்டறேன்'
ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ
நேற்று திருச்சிராப்பள்ளியில் நல்ல மழை... என்பதை விட மழை இப்படித்தான் இருக்கும் என்பதாக அமைந்திருந்தது. மழையில் ஒரு பத்து நிமிடம் நனைந்து கொண்டே இல்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆஹா... மனமும் நனைந்து மகிழ்ந்தது.
எனக்கென்னமோ... மழை என்கிற வார்த்தையே மகிழ்வாய் இருப்பதாக உணர்கிறேன்.
நனையும் போது திரு. வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவில் வந்தன...
'இது தேவதையின் பரிசு, யாரும் விலகிச்செல்ல வேண்டாம்..
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்..
அந்த மேகம் சுரந்த பாலில் நீ நனைய மறுக்கிறாய்,
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்.
கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்...'
ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ
மழையின் தீவிரம் பற்றிய விமர்சனத்தின் போது திண்டுக்கல் ஐ. லியோனியும் ஞாபகம் வருவார்...
எப்படியா இருந்துச்சு நேற்றைய மழை?
புரட்டு, புரட்டுன்னு புரட்டிருச்சுல்ல... (புரோத்தா மாஸ்டர்)
மாமுலான மழைதானப்பா... (காவல்துறை அதிகாரி)
சடசடன்னு, படபடன்னு சரியான மழைதான்... (தமிழாசிரியர்)
ஊத்து, ஊத்துன்னு ஊத்திருச்சுல்ல... (குடிமகன்)
வெளுத்து கட்டிருச்சுல்ல... (சலவைக்காரர்)
ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ
இன்றும் மழைதான்... நேற்றை ஒப்பிடும் பொழுது... ஒன்றுமில்லை. ஆனால் ஊரை குளிர்வித்தது...
இந்த ஒப்பிடல் எனும் பொழுது 'ஓஷோ' என்னை மிரட்டுவார்... அவர் சொன்னது போல... 'ஒரே ஆற்றில் இருமுறை நனைய இயலாது' உண்மைதான்... வாழ்வின் ஒவ்வொரு கணமும் புதிதுதான்... இன்றைய ரோஜா மலரை கைகளில் வைத்துக்கொண்டு, நினைவில் நேற்றைய ரோஜா மலரோடு வாழ்வது தவறுதான்...
'இந்த ரோஜா மலர் அழகாயிருக்கிறது என்றே சொல்லாதே' என்பார் 'ஓஷோ'
ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ
இன்றைய 3G உலகில் எல்லாமே "Just Like That". கணிணி பாடங்களின் பாடத்திட்டப்படி செல்லவே முடிவதில்லை... "Youth" அவ்வளவு வேகம்... ஆனால் மறு நிமிடம்....
"Not get right meanwhile I apply as correct"
"Computer device never Wrong..." Just I replied.
ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ
அக்கினி நட்சத்திர 26 நாட்கள் என்பது... பூமியின் நீள் வட்ட பாதையில் சூரியனுக்கு மிக அருகாமையான பூமியின் காலமாகும்...
நிறைய நீர் அருந்துங்கள்... உணவில், நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்...
தலையை நேரடியான சூரிய ஒளியில் காட்டாதிருக்கலாம்...
நண்பகல் கடின வேலைகளை தவிர்க்கலாம்...
ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ_ஃ
தொடருவேன்...
.
No comments:
Post a Comment