அழகிய கதாநாயகர்களை பார்த்து பழகிய கண்கள் இந்த முகத்தையும் ஏதோ பார்க்கத் தயாராகிவிட்டனர். (ஐய்யயோ, தொடருமோ?) ஆனால் இதெல்லாம் ஒரு மூஞ்சியா? (முகமா) என்று ஒருவர் கூட சொல்ல வில்லை. அப்படி சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஏனெனில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று சொல்லும் போது அவர் இந்த முகத்தை நன்றாக கவனித்திருக்கிறார் என்பது உண்மையாகிறது. மற்றோரெல்லாம் அப்படியே ச்சும்மா பார்த்துச்சென்றுள்ளனர்.
இதிலிருக்கக்கூடிய ஒரு முக்கிய உண்மை காதலுக்கும் உதவும்... அப்பாடா! காதலர் தினத்திற்கு ஒரு பதிவு தயாராகிவிட்டது...
ஒரு விலக்கு... பெண்கள் எல்லோரும் அழகானவர்களாலதால்(!?) அவர்கள் இந்த கணக்கிலில்லை.
ஒரு கற்பனையான நிகழ்வு...
நீங்கள் ஒரு(ஆமா... ஒன்று) காதல் விழுந்துவிட்டீர்கள். ஆனால் பச்சை சிக்னல் கிடைக்கவில்லை. நீங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும், மீண்டும் பயணம் தொடர்கிறீர்கள்...
'உனக்கெல்லாம் அறிவே இல்லையா?' (இருந்திருந்தா உன் பின்னாடி வருவேனா?)
'இதெல்லாம் ஒரு மூஞ்சின்னு வச்சு கிட்டு பின்னாடி வர்ரியே? (எனக்காக கமலஹாசனா வருவாரு)
செருப்பு பிஞ்சுடும்' (ஆமா, அதுனால என்ன, வேற வாங்கித்தரேன்பா)
ஒவ்வொரு சந்திப்பிலும் இப்படியே சொல்வாளானால், அவள் உங்கள் முகத்தை முதல் பார்வையிலேயே அலசிப்பார்க்க ஆரம்பித்து விட்டார் என்பது உண்மை. கவலைப்படாதீர்... மனித மனம் எதை பிடிக்குமோ, அதை விலக்கும்; எதை விலக்குமோ, அதை பிடிக்கும். ஆக நீங்கள் திறந்திருக்கும் வாசலருகே நிற்கிறீர்... அவ்வளவே...
பரீட்சித்து பார்த்து என் புகழ் பரப்பாதிருக்க வேண்டுகிறேன்.
ஆனால் காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தானே... இதிலென்ன தனியாக ஒருநாள்....?
2 comments:
kathalarkalukku aumaiyaana varikal kadaisiyil thanthulleerkal. kaathal tholvi ena ninaippavarkalukku kathavu thirakkum enna nambikkai thanthulleerkal. valththukkal.
Madurai Saravanan@ வருகைக்கு நன்றி
Post a Comment