மனிதன் தந்திரமிகுந்தவன். வாழ்வியல் ஆதார அமைப்பில் அத்தந்திரத்தை பயன்படுத்த அதற்கு தக்க அளவு உள்ளது. தந்திரமில்லையேல் ஜீவாதாரமே இல்லை என்ற நிலைக்கு மனிதமனம் தள்ளப்பட்டிருப்பது அல்லது அப்படியான ஒரு வழியை தேர்ந்தெடுத்திருப்பது மகா அவலம்.
இதை வெகுஜன, குடும்ப, காலை, மாலை செய்தி பத்திரிக்கைகளின் தலைப்புக்களிலேயே அறியலாம்.
இந்த வலைப்பூவிலும்... (வலைப்பூ-ஆஹா, இந்த மென்மை உங்களுக்கு அறியவருகிறதா?) அநேக எல்லா எழுத்துக்களிலும் தந்திரம். இந்த அளவில் 'வந்து, படித்துப்பாருங்களேன்' என்று அழைப்பு... ஐயோடா!
எப்படி தந்திரத்தை செயல்படுத்துவது என்று அறிந்தவர், எப்படி வலைப்பூவில் எழுதுவது, எப்படி ஒரு விசயத்தை எழுதுவது என்பதை அறியவேண்டுகிறேன்.
கூடுதலாக...
இப்படி யோசிக்கலாம்...
1) மொக்கையா இது?
2) இந்த பதிவின் அழைப்பு யாருக்கு?
3) இதன் மூலமாக அறியத்தருவது?
4) கடின, சுடு சொற்கள் இருக்கிறதா?
5) தனிநபரின் விமர்சனமிருக்கிறதா?
6) பதிவு என் எண்ணத்தை அழுத்தமாக பிரதிபலிக்கிறதா?
7) மாற்றுக்கருத்திற்கு இடமிருக்கிறதா?
8) வேறு யாரேனும் இதை இப்படியே பதிவிட்டிருப்பார்களா? வேறொரு வழியிலும் இதை சொல்ல இயலுமா?
9) இந்த பதிவின் மூலமாக எனக்கு வேண்டியது... பொருள், புகழ், செல்வாக்கு, இன்பம், அறியத்தருவது, செய்தி, ஆதங்கம்... வேறு என்ன? (வகை படுத்தவும்)
10) இது எனக்கு களங்கம் தருமா?
11) இது குறித்து விளக்கம் கேட்டால், விவரம் தர இயலுமா?
12) இதை சொல்லத்தான் வேண்டுமா?
அடுத்தாக...
எண்ணம், சொல் என்பதெல்லாம் எழுத்திலடங்கும்போது ஒரு முறையிருக்கிறது. அந்த அற்புதம் மிகச்சிலருக்கே கிடைக்ககிறது. இந்நாள், அநுபவம் வாய்ந்த பதிவர் குழுக்கள் வழங்கும் 'வலைப்பூ - பயிலரங்கத்தில்' கலந்து கொண்டால் நலம்.
இல்லையேல்...
அப்படியே பதிவு வேலையை நிறுத்திவிட்டு, பதிவு அறுவடை செய்யுங்கள்... சிறிது காலங்களில் ஒரு தெளிவு கிடைக்கும். அநுபவமே ஒரு ஆசான்தான்.
பொன்னான உங்களின் நேரமட்டுமல்ல, எங்களின் நேரத்தை மதிக்க அறியுங்கள்...
உங்கள் பதிவை இன்னொரு பதிவரும் படிப்பார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
உங்களின் பதிவை நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள்...
பதிவேற்றும் பொழுது, எண்ணம், சொல், எழுத்து ஒற்றுமை கவனியுங்கள்...
மிகச்சரியானதாக இருந்தால் மட்டுமே, பதிவேற்றுங்கள். இல்லையேல் தாமதிக்காமல் அழித்து விட்டு, மீண்டும் முயற்சியுங்கள்...
சிலர்... ஓரே ஆள், ஓரே விசயம், பல வலைப்பூக்கள் காணக்கிடைக்கிறது... இதெல்லாம் என்னா?
இத்தகைய விசயங்களை கவனித்துக்கொண்டால் நலம். இல்லையேல்... உங்கள் பதிவை நீங்களே படித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்... எப்பூடி?
இறுதியாக...
'யோவ்!. நான் சரியாத்தான்யா பதிவிடுறேன், அதுக்கு நீ என்னா பண்ற?'
அடுத்த பதிவில் பதில் தருகிறேன்...
தமிழோடு, தமிழருக்கு மட்டுமில்லாது... உலகோருக்கான அக்கறையோடு பதிவிடுவோமாக!
2 comments:
உங்களுக்கும் அந்த தந்திரம் தெரிந்திருக்கிறது:))1000னு அறியும் ஆசை வரும்.ஆஹ்ஹ்ஹா
//மிகச்சரியானதாக இருந்தால் மட்டுமே, பதிவேற்றுங்கள். இல்லையேல் தாமதிக்காமல் அழித்து விட்டு, மீண்டும் முயற்சியுங்கள்.//..
பிடித்தால் படிக்கப் போகிறோம் இல்லை ஒதுங்கிப் போகிறோம்.
hello sir i am santhosh.....
Post a Comment