Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Tuesday, December 22, 2009

திரைப்படத்துறை - சினிமா தொழில் நுட்பம்

திரைப்படத்துறையும், கணிணிதுறையும் பிண்ணி பினைந்துவிட்ட இந்த நாட்களில் கணிணிதுறைச்சார்ந்த எனக்குத்தெரிந்த திரைப்படத்திற்க்கான சில செய்திகளை தர விழைகிறேன்...

எந்த ஒன்றும் கணிணிக்குள் நுழையும் போது 1, 0 வாகவே இருக்கும் என்பது அறிந்து மறந்துபோன ஒன்று...அல்லது சைபர்... ஆனால் அது காட்சி வடிவாக மாறவேண்டின் இன்னுமொரு பரிணாமம் பெறுகிறது. அதுதான் Pixel - a Minute area of illumination on a disply screen, one of many for which an image is composed. ஒரிரு நொடிக்குள் பல கோடி புள்ளிகள் இணைந்து உருவாக்கும் ஒரு மாயப்பிம்பம்.

காத்தெடு CRT,தொல்லைகாட்சி, மானிட்டர் ஒருரகம், பிளாஸ்மா ஒருரகம், ஹை-டெஃபினிசன் ஒருரகம், LCD ஒருரகம். ஒவ்வொன்றும் எவ்வளவு குறுகிய வினாடியில் எவ்வளவு அதிகமான புள்ளிகளை இணைத்து மாயப்பிம்பத்தை உருவாக்கும் என்பதுதான் வித்தியாசம். அந்த பிக்சல் எந்த கணக்கில் இருக்கிறது? ஒரு இன்ஞ் அளவான சதுரத்தில் 72 புள்ளிகள் முதல் 600 புள்ளிகள் வரை. உங்கள் அலை (பயணத்தின் போது கொலை) பேசியை சோதியுங்கள், எத்தனை லட்சம் புள்ளிகள் என்று. உங்கள் அலைபேசி திரை 240x320 பிக்சல் அளவுகள் கொண்டதாக இருந்தால்... அது 0.76 mega pixel கொண்ட அலை பேசி.

திரைப்படத்துறை நேரடியான பதிவு, காட்சி என்றிருந்த வரையில் பிக்சல் திரைப்படத்துறையில் கண்டுகொள்ளப்படவில்லை. திரைத்தொகுப்புக்காக திரைப்படத்துறை கணிணியை நாடிய போது... திரைப்படத்துறையை கணிணிதுறை வசீகரித்துக்கொண்டது. இதற்கிடையே NTSC System, PAL System வேறு மட்டையடித்தன. அதெல்லாம் கடந்த நிலையில் அதனுடைய விளக்கம் தேவையில்லாத ஒன்று. குறிப்பாக ஒரே ஒரு வித்தியாசம் PALக்கு 25 ஃபிரேம், NTSCக்கு 29.97 ஃபிரேம். என்னங்க...25, 29.97? ஒரு நொடிக்குள் நாம் காணும் மாயப்பிம்பங்களின் எண்ணிக்கை. நிற்க...

என்னிடம் எங்கேயாவது திரைப்படம் ஓடுகிறது என்று சொன்னால் அடி பின்னிடுவேன்...காட்டப்படுகிறது என்பதே உணமை. தொடர்சியாக பதியப்பட்ட நிழற்படங்களை அதே வேகத்தில் ஒவ்வொன்றாக பார்க்கிறீர்கள், அவ்வளவுதான். உங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு குமரி இருக்கிறார் அல்லவா? அவரை (சொல்லிவிட்டு) ஒருநொடி பாருங்கள்... டிக்... இப்போது உடனே கண்களை முடிவிட்டு (ஐயா.. உங்கள் கண்களை சொன்னேனய்யா) இல்லம் வாருங்கள். உங்கள் கண்களுக்குள் இன்னமும் குமரி தெரிகிறாள் அல்லவா? இவ்வளோதான் சினிமா...

தொடர்சியாக பதியப்பட்ட நிழற்படங்களின் வேகம்... Fps - Frame per second... 12, 24, 29.97, 48 என்ற வரிசையில் அமையும். அப்படியானால் ஒவ்வொன்றுக்கும் என்ன வித்தியாசம்? கண்களுக்கு ஊறு விளைவிக்காமல், ஆஹா! அற்புதமான நிழற்பதிவு, திரைப்படம் என நம்மை சொல்லவைப்பதுதான்.

உதாரண Fps காண்க...

12 Fps


24 Fps


25 Fps


29.97 Fps


48 Fps
(எல்லாமே நானே உருவக்கியதாக்கும்... )


இது 3d மாக்ஸ் ல் உருவாக்கிய 48 Fps....

இது 30 Fpsஅடுத்தது...

இப்போதெல்லாம் 2K பிலிம் என்று சொல்ல கேட்டிருக்கலாம்... ஹாலிவுட் பாலா- அக்கரைச்சீமை தொடராளிகளுக்கு இது பரிச்சயமிருக்கலாம். 2K என்பது 4:3 என்ற விகிதாசாரத்தில் 2048x1536 பிக்சல் கொண்டதான ஒவ்வொரு ஃபிரேம் மாயப்பிம்பம்... கிட்டதட்ட 28.4x21.3 இன்ஞ். இதன் அளவு 3.1 மெகா பிக்சல்...

Render பண்ணிணா எத்தனை நாளாகும்?... ஹை-டெக் கணிணியாக இருந்தாலும் சுமாராக 24 மணி நேரத்திற்கும் மேலாக...

அட போங்கய்யா... ரூபாய் 100 டிக்கெட்ல எல்லாம் அடங்கிபோகுதல்லவா?
இவ்வளோ விளக்கம் தேவையா?...

வேண்டியதுதான்....

Post Comment

6 comments:

ஹாலிவுட் பாலா said...

Sir...!

திரும்ப ஒரு முறை படிக்கணும். ஆனாலும்.. முதல் முறையில்.. ஒரு தவறு தெரிஞ்சது.

////////
NTSCக்கு 24 ஃபிரேம், PALக்கு 29.97 ஃபிரேம். என்னங்க...24, 29.97
////////

NTSC, PAL -ன் frame rate! நீங்க மாத்தி அடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

NTSC = 29.97
PAL = 25
====

இந்த வித்தியாசம் இல்லாமல், இந்த இரண்டின் வெர்டிகல் ஸ்கேன் லைன்களின் எண்ணிக்கையிலும் வித்தியாசம்.

பின்னூட்டம் எழுத ஆரம்பிச்சேன்னா.. பதிவை விட பெரிசா எழுதிடுவேன். அதனால்.. இதையெல்லாம் உங்களிடம் விட்டுடுறேன்.

இந்த தொழில் நுட்பங்களை.. சொல்லிக் கொடுங்க. தெரிஞ்சிக்கிறோம்.

---

அப்புறம்.. அந்த வீடியோக்களை பார்க்க முடியலை. Insufficient Permission -ன்னு எரர் வருது.

ஹாலிவுட் பாலா said...

இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துவிட முடியுமா?

Sugumarje said...

ஹாலிவுட் பாலா --- தவறு திருத்தப்பட்டது. நன்றி. அந்த இணைப்புக்கள் பிளாஷ் கோப்புக்கள். அது என் அக்கவுன்டுக்கு மட்டும் காண்பிக்கிறது. ஒரு நாள் காத்திருக்கவும்

ஹாலிவுட் பாலா said...

ஸார்...,

PAL = "25" !!!

rajeepan said...

நன்றாக இருக்கின்றது பதிவு..தமிழிஸ் கருவிப்பட்டையை இணைத்துவிடுங்கள் உங்கள் வலைத்தளத்தில்..வாக்களிக்கவும் இலகுவாக இருக்கும்..பதிவுகளும் பலரை சென்றடையும்..

ஜாக்கி சேகர் said...

ரொம்ப அற்புதமா எழுதி இருக்கிங்க வாழ்த்துக்கள்...