Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Sunday, December 20, 2009

Avatar Technical - அவதார் விளக்கம்

அவதார் திரைப்படம் குறித்த விமர்சனங்களின் வலைப்பூக்கள் நிறைய எழுதி குவித்தவண்ணமே இருக்கிறார்கள்... எங்களைப்போன்ற விரிவுரையாளர்களின் பணிச்சுமை இப்போதெல்லாம் குறைந்துவிட்டதென கருதுகிறேன். நண்பர் ஹாலிவுட் பாலா... விமர்சனங்கள் கடந்த தொழில்நுட்ப செய்திகள் சுனாமி போல ஒவ்வொரு பதிவிலும் வந்து தாக்குகிறது. பதிவு காண ... அவருக்கு அது தொழில் சார்ந்த துறையாக இல்லாதிருப்பினும் அளவு சாராத ஆர்வம் என் புருவம் உயர்த்துகிறது. இப்போதைக்கான அவதார் திரைப்படம் தொழில்னுட்ப விளக்கத்தில், அவருக்கு முடிந்த அளவில் விளக்கியிருந்தாலும் கூட, நானும் அவரோடு கலந்து கொள்ள விரும்பினேன்.

சொல்லப்போனால்... நானும் விளக்கம் சொல்ல முயற்சித்துள்ளேன் என்பது தான் உண்மை. இந்த 2டி, 3டி விசயங்கள் என் பதின்வயதுகளில் ரஷ்யா இதை இதை மூலமாக கட்டாயம் இதை... கட்டாயம் இதை இதை, 'இதோ இப்படியாக பாருங்கள், 3டியை அனுபவியுங்கள்' என்றழைத்தால் பத்து நபர்களில் ஒருவருக்குத்தால் (இறை) விளக்கம் கிடைக்கும். ஆமாம்... இறைவனை காணுதல் போலத்தான். (அடிக்க வராதீர்கள்... சும்மா உதாரணம்தான்)

இப்படியான கடின முறைகள் இனியில்லை. அவதார் புதிய அவதாரமாக ஒன்றை உருவாக்கிவிட்டது... அது, Fusion 3D Camera / Vince-Cameron System
நண்பர் ஹாலிவுட் பாலா... சொன்னதன் விளக்கம் படித்தபிறகு, இதிலுள்ள செய்திகளை காணுங்கள்... ஆப்படி.. இல்லை அப்படியும் உங்களுக்கு புரியவில்லையானால் இவ்விளக்கத்தில் எனக்குத்தோல்விதான்.

சரி...இங்கே கவனியுங்கள்...

மனித வாழ் உயிரின (நாம்தான்) கண்களின் சிறப்பு, இருகண்கள் ஒருமித்த காட்சி... நான்கு கண்கள் ஒருமித்த காட்சி... காதலர்களுக்கு மட்டும்.
அருகாமையை பார்த்தால் தூர இருப்பது விலகுவதும், தூர இருப்பதை பார்த்தால் அருகிலிருப்பது விலகுவதும் என்றாவது அறிந்திருக்கிறீர்களா?

காட்சி காண்க...

காட்சி ஓன்று..


காட்சி இரண்டு..

அடுத்து...

அவதார் புதிய அவதாரமகிமை உணர்த்துவது இதுதான்... (Fusion 3D Camera / Vince-Cameron System)

காட்சியில் நீங்களும், நானும் பார்ப்பதைப்போல காமிரா (காண்பிப்பதானால் = காமி!?) பார்த்துக்கொள்வதை தனக்குள் இருக்கக்கூடிய பிலிமூளையில் பதிந்து கொள்கிறது. அவ்வளவுதான்...(ம்...அப்பாடா...)

காட்சி காண்க...







சரி.. இதையும் பார்த்து ரசிங்க, அனுபவிங்க...

இதை கட்டாயமாக ரம்பா கண்களாலேயை (வார்த்தை உபயம், நண்பர் ஹாலிவுட் பாலா) பார்க்க வேண்டும்... நன்றி யாகூ ஃபிளிகர்










கேள்வி கேட்க யோசிக்காதீங்க... சிந்தனை குதிரைய தட்டி எழுப்புங்க... அப்படியே மின்னஞ்சல் அனுப்புங்க...


sugumarje@gmail.com

Post Comment

4 comments:

பாலா said...

மிக்க நன்றி சுகுமார் ஜி சார்!!

உங்களை மாதிரி தொழில் சார்ந்த, விஷயம் தெரிஞ்ச ஒருவர் என்னைக் குறிப்பிட்டு பேசுவது, சந்தோஷமாவும், பயமாவும் இருக்கு!! தகுதி இருக்கான்னு இன்னும் கேட்டுகிட்டேதான் இருக்கேன்.

நீங்க சொன்ன 1/10 -ல் ஒரு காலத்தில் அந்த மீதி 9 பேரில் ஒருவனாய் நான் இருந்திருக்கேன். நீங்க சொன்னப் பின்னாடிதான்... விகடன் புத்தகத்தின் பின்னட்டையில் வரும்... அந்த காட்சிகளை பார்க்க....

ரம்பா எஃபெக்ட் கொண்டு வர.. தடுமாறினது எல்லாம் நினைவிற்கு வருது!!! :) :)
===

மீண்டும் ஒருமுறை என் நன்றிகள் (நீங்கள் வடிவமைத்த லோகோவிற்கும்).

Keddavan said...

சூப்பாரா இருக்கின்றது உங்கள் தொழில்நுட்பவிளக்கம்..எங்கள மாதிரி ஆக்களுக்கு விளங்கிறமாதிரி எளிமையாக எழுதியமைக்கு நன்றிகள்...

Sugumarje said...

ஹாலிவுட் பாலா---வருகைக்கு நன்றி...

rajeepan ---வருகைக்கு நன்றி...

Anonymous said...

very nice & informative