Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Showing posts with label auto. Show all posts
Showing posts with label auto. Show all posts

Thursday, June 3, 2010

வேசோ - Mixed Thought

உங்கள் எதிரிக்கோ, முன்னாள் நண்பனுக்கோ சாபம் தர விரும்புகிறீர்களா? இப்படியான சாபம் தாருங்கள்...

'ஒருமணிநேரம் ஆட்டோ பின்புறமாகவே போகக்கடவது'

பாவம், மனிதர் நரக வேதனையை அநுபவித்து விடுவார்...

----------
சாலையில் ஒவ்வொரு சிக்னலில் நிற்கும் எல்லாருக்கும் தனித்தனியான யோசனைச்சூழல் இருப்பதை உணரமுடிகிறது. மடைதிறந்த வெள்ளம் போன்ற வேகம், சட்டென தடை போட்டதில் 30 வினாடி பதட்டம்... அடுத்த 10 வினாடி அமைதி... அதாவது MASS... குழுவாக ஒரே நோக்கத்திற்காக காத்திருத்தல்... ஆகா! அற்புதம்... அதனால்தான் சிக்னலில் பச்சை ஒளிர்ந்த பிறகும் இரு வினாடி தாமத விரைவாரம்ப பயணம்...

ஒரு முடிவாக, சிக்னலைக்கூட வாழும் கலை குருவாக மதிக்கலாம் போலிருக்கிறது...

----------
நீண்ட நாட்களாக ICICI வங்கி ஏடிஎம் மட்டுமே உபயோகித்து வந்திருக்கிறேன்... இரண்டு நாள் முன்பும் அப்படித்தான்... இந்த வங்கி ஏடிஎம் மில் கார்டை நுழைத்து சட்டென வெளியே எடுத்துவிட்டால் மட்டுமே வரவேற்பு நடத்தும்... இல்லையேல்... நாட்டாமை தீர்ப்புத்தான்... செல்லாது, செல்லாது...

அன்று அப்படித்தான் ஏடிஎம் நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்... பலமுறை முயன்றும்... ம்ஹூம்... நாட்டாமை அசைந்து கொடுக்கவில்லை... கொடுமை என்னவென்றால் அங்கே மூன்று நாட்டாமைகளில் இரண்டு நாட்டாமைக்கு பேதியாகி விட்டது... சரி... வேறு யாரவது முயற்சிக்கட்டும் என நான் விலக...

அடுத்தவருக்கும் அதே நிலைமை...

ஆனால் மூன்றாவது முயற்சியில் நாட்டாமை மனமிறங்கினார்... இதற்குள் மற்றொரு நபரும் உள்ளே வந்துவிட்டார்... அவர் பெயர் புண்ணாக்கு... (நான் இட்டதுதான்)... அடுத்தும் நானே முயற்சித்தேன்... இரண்டு முறையும் நாட்டாமை தீர்ப்புத்தான்... உடனே புண்ணாக்கு சொன்னது...

'பக்கத்தில IOB இருக்கு அங்க டிரை பண்ணுங்க... வெளியே ஏழு பேர் நிக்கறாங்க... போங்க, அப்புறம் அவங்கள்ளாம் எடுக்க வேணாமா?'

அப்போதுதான் புண்ணாக்கு என்று பெயரிட்டேன்...

வெளியே மூன்று நபர்களிருந்தார்கள்...

'எல்லா கார்டும் இப்படித்தான் பிரச்சனையாகிறது...' இது நான்...

'உங்க கார்டுல ஏதோ பிராப்ளம் இருக்கும் சார்' புண்ணாக்கு சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே நாட்டாமை, புண்ணாக்கு முகத்தில்
காறி துப்பினார்... நான் மெலிதாக நகைத்தேன்...

புண்ணாக்கு சொன்னது... 'மிஷின்ல ஏதொ பிராப்ளம் போல...'

வழக்கம் போல மூன்றாம் முயற்சியில் சரியானது... புண்ணாக்கு இரண்டு கார்டு வைத்திருந்தார்... தப்பாக நினைக்கவேண்டாம்... ஒரு கணக்கில் 407 ரூபாயும், இன்னொரு கணக்கில் 1004 ரூபாயும் மீதமிருந்தது... கொய்யால... இதுக்கே இவ்வளவா?...

மீண்டும் நான்... தோல்விதான்...

'IOB டிரை பண்ணுங்க' புண்ணாக்கு சொல்லிவிட்டு போய்விட்டது...

நான் யோசித்தேன். சட்டென 'சீச்சி, இந்த பணம் புளிக்கும் என்ற கதையாக திரு. புண்ணாக்கு சாருக்கும், வெளியே நின்றிருந்த மேலும் மூன்று பேருக்கும் மதிப்பளித்து வெளியேறினேன்...

அடுத்த இரண்டு கட்டிடங்களுக்கு பிறகானதில் IOB நாட்டாமை... சரி இவராவது நல்ல நாட்டாமையாக இருக்கமாட்டரா? என்ற யோசனையில் அறையின் முதல்படியில் கால்வைக்கப்போக...

ஒரு அவசரக்குடுக்கை... நான் இட்ட பெயர்தான்... ;-)

 நான் அவசரக்குடுக்கைக்கு 'போங்கடா, சீக்கிரம் போய்ச்சேருங்க...' மனதிற்குள் சொன்னபடி இடமளித்தேன்...

யார் என்னை முந்த நினைத்தாலும் அவருக்கு இடமளித்து வழியனுப்பி வைப்பேன்... அதனால் என் ஆயுள் கெட்டியாகலாம் தானே... வேற வழி... :-(((

ஒரு ஐந்து நிமிடத்தில் இருவர்... எனக்குப்பின்னே... அவசரக்குடுக்கை நீட்டி, நெளித்து ஏழு நிமிடமாயிற்று வெளியே வர...

நான் அறைக்கு நுழைந்தவுடன், சற்று திகைத்துப்போனேன்... ஆம்... IOB நாட்டாமை, சுமோ பயில்வான் போல இருந்தார்... இதிலே வேடிக்கை... எங்கே அட்டையை செலுத்துவதென்றும் குழப்பமாக இருந்தது... பதட்டப்படாமல் கண்களால் தேடி அட்டை அதற்கான இடத்தில் வைத்து நுழை..க்க.. IOB நாட்டாமை முழுங்கிவிட்டார்... எனக்கோ முதல் முதலாக அட்டை செலுத்தினபொழுது ஏற்பட்ட பயம் மீண்டும் ஒருமுறை உண்டானது...

ஆனால் திரை ஒளிர்ந்து IOB நாட்டாமை அட்டையை ஏற்று நல்ல தீர்ப்பளித்து அட்டையை திருப்பி அளித்து... ஒப்புதல் ஓலை தந்தார்... அந்த நிமிடம் IOB நாட்டாமை, ஏழுமலையானாக காட்சியளித்தார்...

------------
இரண்டு நாளாக அடிக்கிற வெயில் போதாதென்று, நம்ம ஆற்காட்டாரும் வறுத்து தள்ளிவிட்டார்... நம்மை பேக் செய்து விலைக்கு தராத குறைதான்...

இன்னமும் இரண்டு நாள் நீஈஈஈஈடிக்குமாம்...

பேசாமல் இன்னொரு சூரியன் கேட்போமா?...

இன்று சூரியனுக்கு பிறந்தநாள வேறு...

சூரியனுக்கெல்லாம் வாழ்த்து... அட... நான் ரொம்ப சின்னவன்ங்க...

------------

அநேகமாக அடுத்த பதினைந்து நாட்களுக்கு... பதிவிருக்காது... புதிய வேலைப்பளு எதிர்பார்க்கிறேன்... இதனால் தாமதமாகலாம்...

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...

.

Post Comment

Sunday, May 2, 2010

கண்ட-கேட்ட-நினைத்த-அநுபவித்த-நான் -1- KKNAN

"இந்த ரெட்டை திமிர்" ( உபயம் கவிப்பேரரசு வைரமுத்து)  நல்லா தெரிகிறாப்போல உங்க பொண்ணுக்கு ஆடை உடுத்திவிடுகிற பெற்றோர்களே... எங்களை யோசித்து பாருங்களேன்... எவ்வளவு கடின பட்டு அடக்க வேண்டியிருக்கிறது.....மனதை. நீங்கள் ரசிப்பதானால் வீட்டில் உடுத்தி அழகு பாருங்களேன்....
இப்படிக்கு
'பசங்க'
+^+^+^+^+^+^+^+^+^+^+^

முன்னெல்லாம்... முன்னால் சட்டையை இழுத்துக் கொண்டே செல்லும் குமரிகளைக்காண முடிந்தது... இப்போது வளர்ந்து (!) விட்டார்கள்...

 'என்னா? _ _ _ _ _ _ போய்கிட்டே இரு...'

எப்படிங்க முடிகிறது... பிள்ளையையும் கிள்ளிவிட்டு, ரெண்டு அடியும் கொடுத்தால் எந்த பிள்ளைதான் அழாமலிருக்கும்...

ராமாயணம் சொல்கிறது... முகமெடுத்து பாராதே...

இயேசு சொல்கிறார்... உன்னால் முடியுமானால் ஒரு பெண்ணையும் பாராதிருத்தல் நலம்...

குரான் வார்த்தைகளில்... முகம் காட்டாதிருத்தல் செய்க...

நம்ம மக்கள்... ஒருவகையில் சின்னதம்பி போல... எல்லாம் தெரியும்... ஆனா தாலின்னா என்னான்னு தெரியாது...

ம்.ம்.ம்... கஷ்டமடா...

ஒரு சில ஆடை... காண கிடைத்ததுதான்...



அப்படியே ஒரு மேளம் எடுத்து அடித்தால்... 'பங்கரா' ஆடுவார்களோ...?

இப்படியான ஆடை உடுத்தலில் பெற்றோர்கள் மகிழ்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது... தன்னால் முடியாததை மகள் செய்யட்டும்...

இதன் விரிவான பதிவை பிறகு காணலாம்...

+^+^+^+^+^+^+^+^+^+^+^


ஊரில் சில ஆட்டோக்கள் 4 stroke engineல் ஓடுகின்றன... மக்களை சுமந்து சென்று உதவி செய்வதுடன்... இன்னொரு உதவியும் செய்கிறது...கூடிய சீக்கிரம் நிறைய ஏ. ஆர். ரஹ்மான்களை உருவாக்கிவிடுமென்று நினைக்கிறேன்... எப்படி?...

சிக்னலில் நிற்கிறேன்... அருகில் அப்படியான ஒரு ஆட்டோ... அதன் என்ஜின் சப்தத்தை கவனிக்கிறேன்... ஆகா... அவ்வை சண்முகியில் வரும்... 'கல்யாணம் கச்சேரி... கால்கட்டு எல்லாமே...' பின்ணணி இசை... அருமை... அருமை... தேனிசை தென்றல் தேவா... இப்படித்தான் பாடல்களை உருவாக்குவாரோ...

கொஞ்சம், நின்று, கவனித்து கேட்டுப்பாருங்கள்... ஏ. ஆர். ரஹ்மான் ஆகவோ... அல்லது தேனிசை தென்றல் தேவாவாகவோ ஆகலாம்...

+^+^+^+^+^+^+^+^+^+^+^

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்....னு கேட்கிற குழந்தைகள், படிக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டுகிறேன்...

அடுத்து காண்போம்...

.

 

Post Comment