Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Wednesday, August 3, 2011

Caricaturist Sugumarje


Who is Sugumarje?

நீண்ட நாட்களாக இதை அல்லது இப்படி எழுத நினைத்திருந்தேன். அதற்கான காலம் இப்பொழுது தான் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.


ஒவ்வொரு மனிதனுக்கும் தன் சுயம் என்ன? என்பதை கண்டுபிடிக்கும் முன்னதாக அவன் ஆயுளில் சராசரியாக பாதியை தொலைத்து விடுகிறான். ஒரு சிலருக்கு அந்த சுயத்தை கண்டு பிடிப்பதற்குள் அவன் காலம் முழுதும் கூட காணாமல் போக, அவனைப்பற்றிய ஒரு அடையாளமும் இல்லாதும் போகிறது. அவனின் குழந்தைகளைத்தவிர...

மனிதாக பிறந்த எல்லோருக்குமே தன்னை இந்த உலகத்தின் பக்கங்களில் பதிவு செய்துகொள்ள ஆசை... அதை விளக்க இந்த பக்கங்கள் போகாது. சில கோவில்களில் இருக்கக்கூடிய குழல் விளக்கு பட்டைகளில் மட்டுமல்ல... கற்தூண்களிலும், புத்தகத்தின் பக்கங்களிலும், சுவரோவியங்களிலும், சிற்பங்களிலும், பாத்திரங்களிலும், நடனங்களிலும், இப்படு பலவிதமான வகைகளில் தன்னை பதிந்து கொள்ள மிகுந்த ஆசைப்படுகிறான்.

அந்த ஆசையின் சில விகாரங்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

Artist Sugumarje!

இப்பொழுது என் ஆசைகளுக்கு வருவோம். அது பற்றிச்சொல்லத்தான் எனக்கு உரிமை இருக்கிறது. நான் அடிப்படையில் எனக்குள் ஒரு ஓவியன் இருக்கிறான் என்று உணர்ந்தது என் ஆறு வயதுகளில். அது மட்டுமே என் தொழிலாக அமைத்துக்கொள்வேன் என்று நான் திட்டமிட்டதில்லை. என்னுடைய பல திறமைகளில் இதுவும் ஒன்று என கருதியபடியே என் வேலைகளை நான் செய்து வந்தேன்.
ஒரிஜினல் கிடைக்காததால் அது போல் இதை நினைத்துக்கொள்ளவும் :)

ஓவிய அறிவு எனக்கு கருவின் வழியாகவும் வந்திருக்கும், ஏனெனில் என் தந்தையும், அவரின் தந்தையும் நல்ல ஓவிய திறமை கொண்டவர்கள்தான். ஆனால் அவர்களில் அன்றாட வேலைகள் வேறு. எனவே அது என்னிடம் முழுவதுமாக வந்துவிட்டதாக கருதுகிறேன். என் தந்தை ஓவியத்தில் வல்லவர்... அவர் சில முறைகளை எனக்கு கூறி வரைந்தும் காட்டுவார். நான் முதலில் வரைந்த ஓவியம் ஒரு யானை.... பிறவி ஓவியன் தான், ஓவியன் என்றெல்லாம் சொல்லுவது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். ஆனாலும் மிகச்சிறப்பான பயிற்சிகள் மூலமாக எல்லோரும் ஓவியராக மாற இயலும். சித்திரமும் கை பழக்கம் தான்...

குறிப்பிட்ட காலத்தில் என் ஓவியத்தில் இருக்கக்கூடிய குறைகளை, எனக்கு பழக்கமான பிற ஓவியர்களிடம் பரிமாறிகொண்டு, தேவையான திருத்தங்களை செய்து கொண்டேன். அடிப்படை ஓவியத்திற்காக அவர்களிடம் பாடம் படித்ததுண்டு.

இப்பொழுது இருப்பது போல வார மாத இதழ் பத்திரிக்கை ஓவியர்களின் வறட்சி அப்பொழுது இல்லை. சில பெயர்களை நான் இங்கே நினைவு கூறுகிறேன். ஓவியர் மணியம், சில்பி, கோபுலு, ஸ்ரீதர், சுதர்ஸன், ஜெ, மாருதி, மாயா, மணியம் செல்வன்,  ஜி.கே. மூர்த்தி, ராமு, அரஸ், மருது, அம்புலிமாமா சங்கர், செல்லம், புஜ்ஜாய், மதன்... இன்னும் நிறைய ஓவியர்கள்... இவர்களிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

Graphic Designer Sugumarje!

கல்லூரி படிப்பின் பகுதிநேரத்தில் கணிணி வழி பாடம் படித்தேன். எனக்கமைந்த வேலையும், கணிணித்துறை வேலையாக அமைந்தது.


கணிணி வடிவ வேலையில் கடந்த 1996 ம் ஆண்டு முதலாக வேலைகள் செய்துகொண்டிருக்கிறேன். ஓவியத்தின் அடைப்படையில் நான் வரிவடிங்கள் சிறப்பாக செய்ய முடிந்ததே அன்றி முழுதாக ஓவியத்தை நம்பி வாழ்வில் இறங்கவில்லை.
ஆனாலும் என் ஓவியங்கள் என் முதலீடாக என் பக்கங்களை நிரப்பிய வண்ணமாக இருந்தன.

Lecturer in Visual Communication

திடீரென ஒரு நாளில் வடிவமைப்பு வேலையிலிருந்து சட்டென விலகி கட்புல தொடர்பியலில் (Visual Communication)ஒரு ஆசிரியனாக, விரிவுரையாளராக கல்லூரிக்கு சென்றுவிட்டேன்.  அங்கேயும் எனக்கு தரப்பட்ட பாடங்கள், இன்னொரு நண்பரோடு இணைந்த ஓவியப்பாடம், தனித்த ஒளிப்படக்கலை, ஒளிப்பட பத்திரிக்கை கலை, கணிணி தொழில் நுட்பம் மற்றும், வலைத்தளங்கள் பயிற்றுவித்தல் இவைகள்தான். (Drawing, Photography, Photojournalism and Multimedia, web developmemts)

Guest Lecturer and Faculty for multimedia Institution 

மூன்றாண்டுக்கால பணிக்குப்பின் அங்கிருந்து விலகி, குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட பாடங்கள் நடத்தும் முறைக்கு மாறிவிட்டேன். இதோடு வேறு சில கல்லூரிகளுக்கும் சிறப்பு விருந்தினராக இன்னமும் கூட கலந்து மாணவர்களுக்கான செய்திகளை தந்து கொண்டிருக்கிறேன். கல்லூரிக்கு சென்று திரும்பிய பகுதி நேரத்தில் சில கணிணி பயிற்சி மையங்களுக்கும் சென்று மென்பொருட்களுக்கான பாடங்கள் நடத்திவந்தேன்.

Ohedas Technologies

2007 ஆண்டில் சொந்தமாக ஓகதஸ் கணிணி தொழில் நுட்ப நிறுவனம் தொடங்கினேன். என் தனிப்பட்ட வேலைகளுக்கு மட்டுமல்லாது, சில வேலைகளை தகுதியுள்ளோரிடம் கொடுத்து வாங்கும் முகமாகவும் இப்பொழுது வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. Ohedas (ஓகதஸ்) என்பதில் Ohed என்பது தகவல் தொடர்பு வார்த்தை. நாம் ஓகோ என்று சொல்லுகிறோம் அல்லவா, அதைப்போலவே :)

Entering to Caricature

என் வழக்கமான மரபு வழி ஓவியங்களில் சில மாற்றங்களை செய்த வேளையில் சில வித்தியாசங்களை காண முடிந்தது... வலைபக்கங்களை மேய்ந்த பொழுது இதும் ஒரு கலையாக “கேரிகேச்சராக” இருப்பதை காண முடிந்தது.

What is Caricature?

கேரிகேச்சர் என்பது ஒரு வித ஓவிய முறை... அது ஒரு வித்தியாமான வெளிப்பாடு. மனிதரை, அவரின் குணங்களை, செயல்பாடுகளை தனியாக, மிகைப்படுத்தி காட்டும் ஓவிய முறை.
அந்த மிகைப்படுத்தலில் அவரின் முகம் தப்புவதில்லை. அவர் கண்கள், மூக்கு, பற்கள், காதுகள், தாடை, கண்ணங்கள். இமைகள், நெற்றி இப்படி எல்லாமே அவரின் தனித்தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருக்கும்.

www.sugumarje.com

உடனே அது பற்றி முழு ஆராய்ச்சி செய்ய தொடங்கினேன். 2006க்கு மேலாகவே நான் ஏர்டெல் வலை இணைப்பு பெற்று விட்டதினால், கூகுள் எனக்கு முகப்பெரும் பலம் தந்தது.... sugumarje.blogspot.com எனபது தான்  நான் 2006ல் ஆரம்பித்த வலை பக்கம். அப்பொழுதும் நான் என் ஓவியங்களை வலை ஏற்றியதில்லை.  அடுத்த 2007ல் என் ஓவியங்கள் ஒவ்வொன்றாக வலையில் ஏற்றத்தொடங்கினேன்... பிறகு அந்த வலைத்தளம் sugumaarje.com ஆனது. இன்று வரை தினம் ஒரு ஓவியம் என்ற கணக்கை நான் சரிசெய்து கொண்டிருக்கிறேன்.

ஒரு நாளில் அதிகபட்சமாக எவ்வளவு நேரம் கேரிகேச்சர் பற்றிய தகவல்கள் திரட்ட முடியுமொ அவ்வளவு திரட்டியாகிவிட்டது. அடுத்து என் கைகள் வலி எடுக்குமளவுக்கு கேரிகேச்சர் வரைந்து தள்ளினேன். எனக்கென்ற ஒரு முறையை நான் பிடித்தாக வேண்டுமே அதற்காக...

ஒரு குறிப்பிட்ட நாளில் என்றில்லாமல், எனக்கே கூட தெரியாமல், ஒரு முறை சுகுமார்ஜியின் கேரிகேச்சர் இப்படித்தான் இருக்கும் என்று வந்து சேர்ந்தது.

Caricature - Freelancer!

எனக்கென்று அமைந்த அந்த கேரிகேச்சர் முறை பெரும்பாலான உலக மக்களை கவர, ஜெர்மனி, அமெரிக்கா, எகிப்து, இந்தோனேசியா, ஆஸ்திரியா, ரூமேனியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வேலைகள் வரத்தொடங்கின. அவர்கள் எதிர்பார்ப்பதை தந்து கொண்டிருந்தாலும், இன்னமும் நான் கேரிகேச்சருக்கான சில விசயங்களை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.


Live Caricature!


எனக்குத்தெரிந்து நேரடியாக நபர்களை அப்படியே வரைதல், Live Caricature நான் மட்டுமே செய்வதாக கருதுகிறேன். ஒரு ஒளிப்படத்தை கொடுத்தாலும் சில நாட்கள் கழித்தே ஓவியமாக தரும் ஓவியர்கள் மத்தியில், எதிரே அமரும் எந்த ஒரு நபரின் முகத்தையும், ஐந்து நிமிடத்திற்குள் கேரிகேச்சராக தரும் வழக்கத்தை தமிழ்நாட்டில், நான் மட்டுமே நடத்திவருவதாக அறிகிறேன்.

வேறு ஓவியர்களும் செய்கிறார்கள் என்றாலும் நாம் மகிழ்வே அடைவேன்.

இந்த ஓவியங்கள் இப்பொழுதான் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது... அது பற்றி என் வலைதளத்திலேயே நிறைய விபரங்கள் இருக்கின்றன. நான் சென்னை, சேலம், கோவை திருச்சி போன்ற நகரங்களில் இந்த Live Caricature நடத்துகிறேன். இந்த வகை ஓவியங்களை பார்த்தமாத்திரத்தில் மனம் தானாகவே குதூகலம் கொண்டு முகுந்த நகைப்பை ஏற்படுத்தும்... அந்த ஓவியத்தோடு சம்பந்தப்பட்டவரே கூட மகிழ்வார். இந்த Live Caricature விழாக்காலங்களை மேலும் சிறப்புச்செய்வதாக அமைகின்றது. வயது வித்தியாசமின்றி எல்லோராலும் விரும்பப்படுகிறது.

உலக அளவில் இருக்கும் எண்ணற்ற Caricature ஓவியர்களில் நானும் இடம் பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் வலைத்தளமான sugumarje.com தினமும் குறைந்தப்பட்சமாக 350 பேரும், அதிகபட்சமாக 650 பேரும் பார்வையிடும் விசயங்களை கொண்டதாக இருக்கிறது.

Service!


ஓவியம் அனைத்து நபர்களுக்கும் பிடித்த ஒன்று. குழந்தைகளிக்கோ இன்னும் அதிகம். ஓரு ஓவியத்தில் நாம் கவனம் செலுத்த முடிந்தால் அது நம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் நம் அறிவுத்திறனை வளர்க்கும். ஓவியத்தால் மனம் இலகுவாகும். சந்தோசம் பிறக்கும். பாராட்டு எதிர்பாராது தனக்கே திருப்தி அளிக்கும் ஒரு துறை ஓவியம். கை, கண், மனம், மூளை ஆகிய அனைத்தும் ஒருங்கே செயல்படும் வரை ஓவியம் கொஞ்சம் தடுமாறும். ஆனால் எல்லாம் சிறப்பானால் நம் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் ஓவியம் பழக விரும்பினால், என்னை தொடர்புகொண்டு அழைக்கலாம்... நேரடி வகுப்புகள் மட்டுமே... சனி, ஞாயிறு வகுப்புகளும் கிடைக்கும்.

அடிப்படை பாடங்கள் கை வழியே நடக்கும்... அதன் வழியே கணிணி ஓவிய பயிற்சியும் நடக்கும்... பல வகையான தலைப்பிலான பாடத்திட்டம் இருப்பதால் உங்களுக்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுக்க என்னோடு பேசலாம்...

வயது தடையில்லை - முன் அனுபவம் தேவையில்லை

கைபேசி: 91 9442783450 மின்னஞ்சல்: sugumarje@gmail.com

குறிப்பு:  இந்த கல்விப் பணியை நான், மிக விரும்பி கேட்டுகொள்வோருக்கு மட்டுமே நடத்துகிறேன். மற்றபடி இதை முழுநேர கல்வியாக தர வேலைப்பளு காரணமாக முடியாமலிருக்கிறேன்.

Caricaturist Sugumarje


ஆக... இனிமேல் மட்டுமல்ல, இனி எப்பொழுதுமே எனக்கான அடையாளம், கேரிகேச்சர் எனும் கேலிச்சித்திர ஓவியர் ...
(Caricature+Artist = Caricaturist) என்பதே ஆகும். இந்த பயணத்தில் எனக்கு உதவிய எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Hire Caricaturist Sugumarje

உங்கள் இல்ல நிகழ்வுகளில், பிறந்தநாள், திருமணநாள், திருமண வரவேற்பு இவற்றில் Live Caricature நடத்தி, விழாவை என்றென்றும் ஞாபகத்தில் நிலைக்கச்செய்யலாம். உங்கள் உறவுகளை இன்னும் மகிழச்செய்யலாம்.

இதனோடு, Gift Caricature, Portrait, Family Cartoon போன்றவையும் கிடைக்கும்.

எப்பொழுதும் என்னோடு தொடர்பு கொள்ளலாம்...

கைபேசி: 91 9442783450 மின்னஞ்சல்: sugumarje@gmail.com

Post Comment

2 comments:

MANI said...

ஜீ உங்கள் Life Story அருமை.

அப்புறம் ஒரு கேள்வி. நீங்க முதன் முதலாக அந்த யானையை எந்த வயதில் வரைந்தீர்கள்.

ஆமாம் எல்லாவற்றையும் எழுதிவிட்டு கடைசியில் நம்ம விஷயத்தை சொல்லாமல் விட்டுட்டீங்களே ஜீ.

என்னது என்ன விஷயமா?! இன்னுமா ஞா. வரலை. அதான் ஜோதிடம். ஹி! ஹி! உங்களுக்குதான் புதன் உச்சமாச்சே அதுஇல்லாம எப்பூடி.

Sugumarje said...

வாருங்கள் மணி... அந்த யானை வரைந்து பழகியதும் ஆறு வயதில் தான்...:)

புதன் உச்சம் என்பதை தனிப்பட்டு சொல்லாமலிருந்தாலும், உங்களுக்குத்தான் தெரிந்துவிடுமே... இந்த தலைப்பு கேரிகேச்சரிஸ்ட் என்பதால் ஜோதிட தகவல்கள் சேர்க்கவில்லை...

ஞாபகமூட்டியதற்கு நன்றி :)