Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Saturday, June 4, 2011

Retina Display in iPhone 4

Retina Display in iPhone 4



"ரெடீனா டிஸ்பிளே" என்பது ஒரு தொழில்நுட்பம். ஏற்கனவே இருக்கும் ஒன்றிலிருந்து சற்று வித்தியாசப்படுத்தி இதை நாங்கதான் கண்டுபிடிச்சோம்ங்கற மாதிரி செய்வது கார்பரோட் கம்பெனிகளின் வேலை...

அப்படியான ஒன்றுதான் “ ரெடீனா டிஸ்பிளே” அதாவது வழக்கமாக நம் கண்கள் பார்க்கும் காட்சியை வகைப்படுத்தாது அப்படியே வாங்கிக்கொள்ளும். கணிணியை பொறுத்தவரை எல்லாமே பிக்சல் தான். அதாவது ஒரு இஞ்ச் அளவிலான சதுரத்தில் எத்தனை புள்ளிகள் என்பதுதான். அந்த புள்ளிகளின் நெருக்கத்தைக் கொண்டே நாம் காணும் காட்சியின் தெளிவு நமக்கு அறியவரும். இது கணிணி சார்ந்த காட்சிகளுக்கு மட்டுமே. இன்னமும் பிலிம் கேமராவுக்கு ஈடு இணைக்கு இந்த டிஜிடல் புரட்சி வரவே இல்லை...ஆனால் அதற்கு மேலாக வர துடித்துக்கொண்டிருக்கிறது.

பிலிம் வெர்சஸ் டிஜிடல்
சிறியது + தெளிவானது + பெரிதுபடுத்துனாலும் படத்தின் தரம் குறையாது
பெரியது + பெரிதாக இருப்பதால் தெளிவு + மேலும் பெரிதுபடுத்த இயலாது

எனவே நீங்கள் உங்கள் டிஜிடல் கேமராவில் எந்த அளவிற்கு பெரிதாக எடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு படமும் தெளிவாக இருக்கும். அதனால் தான் மெகா பிக்சல் அளவு போய்க்கொண்டே இருக்கிறது. இப்பொழுது சராசரி கேமராவிலேயே 14.0 மெகா பிக்சலுக்கு படம் பதிய முடிகிறது. அதாவது சுமாராக 36 இன்ஞ் அல்லது 3 அடி அளவிற்கு படம் வருவதால், தாத்தாவையோ, அம்மாவையோ படம் பிடித்து வினைல் பிரிண்ட் போட்டு வீட்டில் மாட்டிவிடலாம். என்ன திருஷ்டிக்கா? அடப்பாவிகளா?

கம் பேக் டு தி iPhone 4 Retina Display :)

iPhone 2  போட்டாச்சி,
iPhone 3 போட்டாச்சி,
iPhone 3G  போட்டாச்சி,
iPhone 4  போட ஏதாவது புதுசா பண்ணனுமே? ஓகே, டிஸ்பிளே சிறப்ப இருந்தா கேமராவை, சினிமா பாடலை, சினிமாவை பார்கிறதுக்காகவே iPhone 4 வாங்கிறமாட்டாய்ங்க !? அப்படின்னு ஆப்பிள் நினைச்சு “ரெடீனா டிஸ்பிளே” ன்னு கூவ ஆரம்பிச்சுட்டாங்க.


ஒரு iPhone ல் டிஸ்பிளே ஸ்கிரீன் அளவு பார்த்தா 320க்கு480 தான், அதாவது குறுக்கும் நெடுக்குமா இருக்கக்கூடிய பிக்சல் அளவு. சாதாரணமாக நாம் வலைதளங்கள் வழியாக காணும் படங்கள் ஒரு இன்ஞ் அளவுக்கு சுமார் 72 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கிறது. அதனால் தான் யாரும் அவற்றை சுட்டு தங்கள் வேலைகளுக்கு உபயோகப்படுத்த இயலாது. பெரிசாக்கினால் பல்லைக்காட்டும்... அதாவது பிக்சல் என்ற பல்லை...

ஆனால், iPhone ஒரு டிவைஸ், தனிப்பட்ட ஒரு கருவி. அதனால் 72 என்ற சதுரப்புள்ளிகளுக்கு பதிலாக 126 சதுரப்புள்ளிகள். அதாவது கிட்டதட்ட 26 ஆயிரம் புள்ளிகள்கள் இணைந்து காட்சியை உருவாக்குகின்றன. எனவே வலைதளங்கள் வழியாக காணும் படங்களை விட தெளிவான காட்சியை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் iPhone 3G வரை மட்டும் நின்றுவிட்டது. இதுவரை வாங்கதவர்கள் பாக்கியசாலிகள்.



இந்த தொழில்நுட்ப புரட்சி மனிதர்களிடையே புது மன அழுத்த நோயை பரப்பிவருவதாக அறிகிறேன்... இல்லாதவனுக்கு இல்லையே என்ற கவலை. இருப்பவனுக்கோ இதைவிட அது நல்லாயிருக்கேன்னு கவலை...

இந்த காட்சி பரவசத்தை மேலும் அதிகமாக்க  Phone 4 க்கு ஒரு புதிய தொழில் நுட்பம் போல ரெடீனா டிஸ்பிளே அறிமுகப்படுத்தி விட்டது ஆப்பிள் நிறுவனம். டிஜிடல் படங்கள் மட்டுமில்லாது, பாடல் காட்சிகள், திரைப்படங்கள் முதற்கொண்டு ஸ்கிரீனில் பார்க்கிற அனைத்துமே நான்கு மடங்கு துல்லியமாக தெரியும் பொழுது அதை வாங்காமலிருக்க முடியுமா?



Phone 4 ல் 26 ஆயிரம் புள்ளிகளுக்குப்பதிலாக 106 ஆயிரம் புள்ளிகள் இணைந்து காட்சியை தருகின்றன. ஸ்கிரீன் சைஸ் பார்த்தோமானால் 640க்கு 960 என்பதாகவும் 326 சதுரப்புள்ளிகள் கொண்டதாகவும் இந்த "ரெடீனா டிஸ்பிளே" இருக்கிறது. இது சாதாரணமாக கண்களுக்கு தெரியக்கூடிய பல்லை, அதாங்க பிக்சலை தவிர்க்கிறது. எனவே துல்லியம் சாத்தியமாகிறது.



இந்த படங்கள் ஓரளவு தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்.

மேலும் விபரங்கள் அறிய...
www.apple.com


--------

Hire Sugumarje, Caricaturist for Live Caricature on Your Event and Parties. Make unforgettable movement for Your Parents, Brothers, Sisters, Lovers, Relatives, Friends, kids and Children, Club Members, Official Members and Your well wishers. Coffee Mug Caricature, Gift Caricature Avail... 

Call to: +91 9442783450 / mailto: sugumarje@gmail.com


Post Comment

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..