Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, March 10, 2011

Live Caricature at Chennai, Blur Cafe_ Sathyam Cinemas _Part 1





Live Caricature Chennai

Everyone knew a Blur CAFÉ is fine for its Delicious food Service and Game Extravaganza on Bowling and Virtual Game. In March 8th day has another hat on Blur CAFÉ’s head… Yea! Live Caricature by Sugumarje… Yes. I.

This Special Live Caricature Event by Blur CAFÉ HR Head arranged for girls only based on World Women’s Day…

Wow. I have to read great expectation and glossiness of fun on their face and eyes by finally they seen their own Caricature Face. Everyone at that Live Caricature event enjoyed, they share their feeling by Caricature with their friends and also.

Now I have lot of Girl fans :) for my Caricature style, based on 100% perfection. 

In Blur CAFÉ has well arranged the Live Caricature event. Thanks to all.

I happy welcome the another Live Caricature event soon.

:)



சென்னையில் லைவ் கேரிகேச்சர்...

நேரடின்னு சொன்னா, நேராவே அடிப்பாங்க போல அதான், லைவ் கேரிகேச்சர்...

திருச்சியிலிருந்து, விருத்தச்சலம், உளுந்தூர்பேட், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் பாண்டியன் சூப்பர் பாஸ்ட் வண்டியில் திணிக்கப்பட்ட புளி மூட்டை ஊடே சிக்கிய புழு மாதிரியாக நான் ஏறும் போது மணி இரவு 11.45. ஏனப்பா, முன்னாடியே டிக்கெட் வாங்க கூடாதா? வாங்கினேனே 6 மணி நேரம் முன்னதாக...

இதிலிருந்து தெரிவது... முன்பதிவு செய்யாமல் ரயில் வண்டியில் பயணம் செல்லாதே... கொய்யால... சென்னைவரைக்குமே ஸ்டாண்டிங்தான்... அதும் சும்மா வாசல் கிட்டயே! நானாவது பரவாயில்லை... மதுரையிலிருந்தே ஸ்டாண்டிங்ல வந்தவனுங்களும் தான் இருந்தாங்க...

ங்க்கப்பா... கால் வலி இன்னமும் போகலைப்பா! காலை 5.45... சென்னை எழும்பூர் உங்களை வரவேற்கிறது என்று ஒரு பெண்குரல் வரவேற்றது. அந்நேரம் கிழக்கு வானத்தில் சுக்கிரன் புன்னகைத்தார்... அவ்வளவு நேரம் நின்றபடியே வந்ததினால், 8 வது நடைபாதையிலிருந்து எழும்பூர் நிலைய வாசல் வருவதற்குள், கால் சுளுக்கிக்கொண்டது...

திருச்சியிலும், சென்னையிலும் அதன் பாதையிலும் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள என் நண்பரை தொடர்புகொண்டபோது அவர் தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருந்தார்... ஏற்கனவே சொல்லிவைத்ததால் தப்பித்தேன். பேருந்து நிறுத்தத்தில் நின்றவாறு கவனித்ததில்...ஹே...இவ்வளவு பேரும், எங்கய்யா போறீங்க, எதுக்காகய்யா வர்ரீங்க, என்னய்யா பண்றீங்கன்னு கேக்க, இல்ல கத்த தோன்றியது... நம்மளமாதிரி கேரிகேச்சர் பண்ணத்தான் வந்தாங்களோ :) என்ன பண்றது... அவங்க வாழ்க்கையே கேரிகேச்சர் மாதிரி இருந்திருக்கும் போல :)



எதிரே வசந்த பவனில் ஒரு காபி... மணி 7.00... அப்பாடா... திருவல்லிக்கேணி நண்பர் கிடைத்தார்... “வாய்யா” இந்த ஒரு சொல்லுக்குத்தானே காத்திருந்தேன்... அப்படியே எதிரே போய் அண்ணா சதுக்கம்... ஏறினேன்... வழியில் தமிழக தலமைச்செயலக வளாகம் அருமை... பிரமாண்ட வடிவமைப்பு... என் பயணத்திற்கு 7.00 ரூபாய் சொகுசு பேருந்து... பழைய பேருந்து எல்லாம் எக்மோர் மியூசியத்தில் வைத்துவிட்டார்களோ... வச்சாலும் தகுமப்பா... எத்தனை காலமா அந்த டப்பா பேருந்துகளில் மக்களை நொங்கெடுத்தார்கள்...

எல்லாம் முடித்து அப்படியே கிழக்குநோக்கி நடை, கடற்கரை, வெறிச். வழியெங்கும் குரங்கு குட்டியை இடுப்பில் வைத்துக்கொண்டு சாப்பாடுக்கு காசு கேட்கும் வட இந்தியர் கூட்டம்... என்ன டெக்னிக்கு?... நான் மட்டும் காலாற நடந்து தனியாக வெயில் ஏறிய பிறகு வாக்கிங் போனேன்... நேரம் கடத்தவேண்டுமே... கடற்கரை நீச்சல் குளத்தில் நிறைய குழந்தைகள் நீச்சல் பழகுவதை காண முடிந்தது. வாழ்க்கை நீச்சலோடு இதுவும் தேவைதானே :)

மீண்டும் நண்பர் இல்லம்...அவர் அலுவலம் கிளம்ப, பேருந்து விபரங்கள் பெற்றுக்கொண்டு,
9.30 மணிக்கு ( வெயில்... நல்லா போடுதய்யா! ) சத்யம் சினிமாஸ்க்கு, பாரதியார் சாலைவழி பயணம்... விழா 12.30க்கு நான் சத்யம் சினிமாஸ்க்கு வந்து சேர்ந்ததோ 10.00 மணி... கைபேசியில் நான் வந்துவிட்ட செய்தி கேட்டபிறகு...  You need at 12.30 only... or at 12 wait at blur hall... என்றவிபரம் கிடைத்தது... அடடா 2.30 மணிநேரம் மிச்சமிருக்கே? சதயம் காம்ளக்சை விட்டு வெளியே வந்து ஒரு டீ அடித்தேன்... திருச்சியில்கூட இன்னமும் பாய்லர் டீ தண்ணிவிட்டுக் கொண்டிருக்கிறது... சென்னையில் இப்பொழுது தண்ணீர் காட்டிவிட்டார்கள் போல.

அப்படியே ஒயிட்ஸ் (கருப்பாக இருந்த) சாலையின் வழியே, அண்ணாசாலை வந்து... பாதசாரிகளோடு சிக்னல் விழுந்த கையோடு மறுபுறம் சென்றேன்...  முதன் முதலாக இருந்த மெட்ராஸ் அனுபவம் ஞாபகம் வந்தது.
சென்னை வந்தபோது சோதனை முயற்சியாக, வழிதவறிய ஆடுபோல சாலையை கடக்க முயன்றேன்... இந்த ஜாக்கிசேகர் பதிவில் சொல்லியிருப்பது போல “த்தா வண்டியை ஸ்லோ பண்ணு என்பது போல்,  நிறுத்துவது போல கைகாட்டிக்கொண்டு அந்த இடத்தை சாவகாசமாக நடந்து கடப்பது....”. டிராபிக் போலீசிடம் வாங்கி கட்டியதுதான் மிச்சம்... இப்பொழுது நான்... ஆமா, விசயத்துக்கு வாங்க... நடந்து போய்க்கொண்டே இருந்தேன்... கண்ணுக்கு அருகில் தெரிந்த ஸ்பென்சர் இந்தா, அந்தா என்று இருந்த கால்வலியை இன்னும் அதிகப்படுத்தியது.

நான் ஸ்பென்சரில் இருக்கிறேன் என்று சொன்னால், மிகச்சரியாக லேண்ட்மார்க் புக் செக்சனில் என்னை காணப்பெறலாம். எப்பொழுதுமே எங்கள் தேடுதல் அதுதான். எங்கள் பட்ஜெட் 100 ரூபாய் மட்டுமே... ஆனால் வாங்கக்கூடிய விலையிலா இருக்கிறது? நாங்கள் படம் பார்த்தே படித்துவிடுவோம்ல. அய்யோ, சொல்லிட்டேனா? அடுத்தாப்பல உள்ள விடமாட்டங்ளே! உங்களுக்குத்தெரியுமா? ஆர். பார்த்திபனின் “கிறுக்கல்கள்” இங்கேதான் படித்தோம். :) தமிழ் நூல்கள் பகுதியில் ஒருவர் காய்கறி வாங்குவது போல பொறுக்கி தன் கூடையில் போட்டுக்கொண்டிருந்தார். வாழ்க தமிழார்வம். இன்னொரு பாப்-பையன் (அதாங்க மாடர்ன் பொண்ணு) ஆங்கில இலக்கியம் தேடிக்கொண்டிருந்தது. தற்பொழுது சென்னையில் பேசுபவ்ர்கள் டமிலர்களாகவும், பேசாதவர்கள் தமிழர்களாகவும் இருக்கின்றனர்.

மைக்கேல் ஏஞ்சலோ, லியோர்டனா டாவின்சி ஆராய்ச்சிகள், ஓவியங்கள். குறிப்புக்கள், மார்வல் காமிக்ஸ்கள் என்று நிறைய நூல்களை இந்திரன் சிட்டி போல விழியால் ஸ்கேன் செய்தேன்... வேற வழி... மணி 11.30. வெறும் கையோடு லேண்ட்மார்க் விட்டு வெளியே வந்தேன். கீழே இருந்த முகப்பு வராண்டாவில், ஒரு ஓரமாக வருவோர், போவோரை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு 15 கல்லூரி கேர்ள்ஸ் ஒரு கலக்கல் போட்டோ செசன் செய்துகொண்டிருந்ததில் எனக்கு நேரம் செல்வதே தெரியவில்லை. 12.00 க்கு மீண்டும் அண்ணாசாலை வழியே, ஒயிட்ஸ் சாலை வந்து சத்யம் காம்ளக்ஸ் வந்தடைந்தேன்...

அடுத்த பதிவில் இன்னும் :)

Post Comment

No comments: